கோதுமை ரவையில் பிரியாணி மட்டுமல்ல! இட்லியும் செய்து இனிமையாக சாப்பிட முடியும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கோதுமை ரவையில் பிரியாணி மட்டுமல்ல! இட்லியும் செய்து இனிமையாக சாப்பிட முடியும்!

கோதுமை ரவையில் பிரியாணி மட்டுமல்ல! இட்லியும் செய்து இனிமையாக சாப்பிட முடியும்!

Priyadarshini R HT Tamil
Updated Oct 22, 2024 02:24 PM IST

கோதுமை ரவையில் பிரியாணி மட்டுமல்ல, இட்லியும் செய்து இனிமையாக சாப்பிட முடியும். அது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

கோதுமை ரவையில் பிரியாணி மட்டுமல்ல! இட்லியும் செய்து இனிமையாக சாப்பிட முடியும்!
கோதுமை ரவையில் பிரியாணி மட்டுமல்ல! இட்லியும் செய்து இனிமையாக சாப்பிட முடியும்!

கருப்பு உளுந்தை மோரில் ஊறவைத்து அரைத்து இட்லி தயாரிக்கப்பட்டுள்ளது. இதனுடன் தயிரின் தண்ணீர் மற்றும் மசாலாக்கள் சேர்த்து இட்லி தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்று நாம் சாப்பிடும் நவீன இட்லி நமக்கு இந்தோனேசியாவில் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏனென்றால் அங்குதான் புளிக்க வைத்து உணவு தயாரிக்கும் முறை பாராம்பரியமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தோனேசியாவில் இந்து அரசர்கள் அமர்த்திய சமையல் கலைஞர்கள் இட்லியை கண்டுபிடித்திருக்கலாம். அங்கிருந்து இந்த உணவு இந்தியாவுக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தோனேசியாவில் கெட்லி என்ற உணவு இட்லிபோலேவே இருக்கும் என்று வரலாறு கூறுகிறது. மேலும் புளிக்கவைக்கும் செயல்பாடு இயற்கையில் நடக்கும் ஒன்று என்பதால் அது இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இங்கு அனைத்து கலாச்சாரங்களிலும் புளிக்க வைக்கும் பழக்கம் உள்ளது.

தேவையான பொருட்கள்

கோதுமை ரவை – ஒரு டம்ளர்

கேரட் – 1 (துருவியது)

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

தேங்காய் துருவல் – ஒரு கப்

பச்சை மிள்காய் – 2 (காரத்துக்கு எற்ப)

இஞ்சி – கால் இன்ச் (துருவியது)

தயிர் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்

முந்திரி – ஒரு கைப்பிடியளவு

செய்முறை

ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் கடுகு, உளுந்து, கடலை பருப்பு தாளிக்க வேண்டும். பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவேண்டும். இஞ்சியையும் சேர்த்து வதக்கி கொள்ளவேண்டும். வதக்கிய அதே பொருட்களுடன், ரவையையும் சேர்த்து, வதக்கவேண்டும்.

பின் வதக்கிய அனைத்தையும் ஆற வைக்கவும், ஆறிய பின்னர் தயிர், உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலந்துக்கொள்ளவேண்டும். இதை ஒரு மணி நேரம் நன்றாக ஊறவைக்கவேண்டும்.

இட்லி தட்டில் துருவிய தேங்காய், கேரட் வைத்து அதன் மேல் இந்த மாவை ஊற்றி, இட்லியை வேகவைத்து எடுத்தால், சூப்பர் சுவையில், கோதுமை ரவை இட்லி தயார். இதை வெள்ளை ரவையிலும் செய்யலாம். இதற்கு தொட்டுக்கொள்ள சாம்பார், தேங்காய், புதினா, மல்லி, தக்காளி சட்னிகள் நல்ல காம்பினேஷனாக இருக்கும்.

இதுபோன்ற எண்ணற்ற ரெசிபிக்கள், அரிய ஆரோக்கிய குறிப்புகள் மற்றும் தகவல்களை தேர்ந்தெடுத்து ஹெச்.டி தமிழ் உங்களுக்காக வழங்கிவருகிறது. தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் தீபாவளி சிறப்பு இனிப்புகள் உள்ளிட்ட தொடர்பான விஷயங்களை கொடுக்கிறோம். எனவே இதுபோன்ற தகவல்களை தொடர்ந்து பெற எங்கள் இணையப் பக்கத்தில் இணைந்திருங்கள். இந்த ரெசிபிக்களை செய்து சாப்பிட்டு பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடி மகிழ வாழ்த்துக்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.