மழைக்கால இருமலை போக்கும் கொள்ளுத் துவையல்! ருசியாக செஞ்சு அசத்துங்க! இப்போவே செய்யுங்க!
Nov 20, 2024, 03:46 PM IST
கொள்ளு குதிரைகளுக்கு போடப்படும் ஒரு முக்கிய உணவாகும். ஆனால் இதனை நாமும் உணவில் சேர்த்து கொள்ளலாம். கொள்ளு வைத்து சுவையான துவையல் செய்யலாம். இதனை எப்படி செய்வது என்பதை இங்கு காண்போம்.
மழைக்காலம் ஆரம்பித்து விட்டாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அணைவருக்கும் ஜலதோஷம், சளி மற்றும் இருமல் ஆகிய தொந்தரவுகள் அடிக்கடி ஏற்படும். இந்த மாதிரியான சிறு அளவிலான தொந்தரவுகளை சில உணவுகளை சாப்பிடுவதன் வாயிலாகவே இதனை சரி செய்து விடலாம். அதில் ஒரு முக்கியமான தானியம் தான் கொள்ளு. கொள்ளு குதிரைகளுக்கு போடப்படும் ஒரு முக்கிய உணவாகும். ஆனால் இதனை நாமும் உணவில் சேர்த்து கொள்ளலாம். கொள்ளு வைத்து சுவையான துவையல் செய்யலாம். இதனை எப்படி செய்வது என்பதை இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்
அரை கப் கொள்ளு
ஒரு டேபிள்ஸ்பூன் கடலை பருப்பு
ஒரு டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு
கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள்
10 முதல் 12 வற மிளகாய்
7 பல் பூண்டு
7 டீஸ்பூன் எண்ணெய்
சிறிதளவு புளி
அரை மூடி தேங்காய்
1 டீஸ்பூன் சீரகம்
1 டீஸ்பூன் கடுகு
சிறிதளவு கறிவேப்பிலை
செய்முறை
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கொள்ளு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும். பின்னர் அதனை இறக்கி வைத்து ஆற வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடானதும், அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சேர்த்து வறுக்க வேண்டும். அடுத்து அதில் வற மிளகாய், பூண்டு, புளி சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு அதில் துருவிய தேங்காய், உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும். பின்னர் அதில் பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து விட்டு நன்கு ஆறவிட வேண்டும்.
இவை ஆறிய பிறகு மிக்ஸியில் சேர்த்து முதலில் தண்ணீர் இன்றி அரைக்கவும். பிறகு தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். பிறகு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, சேர்த்து தாளிப்பை துவையலுடன் சேர்த்து கலந்து விடவும். சுவையான கொள்ளு துவையல் தயார்.
கொள்ளு பருப்பின் பயன்கள்
கொள்ளுப் பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி விடும். அதே போல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு. இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம். கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும்.
வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பொருமல், கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும். வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும். கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும். எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர். இதனை சாபிட்டால் குதிரையை போல சுறு சுறுப்பாக இருக்க முடியும் என நம்பப்படுகிறது.
டாபிக்ஸ்