Tonsillitis Home Remedy : குழந்தைகளுக்கு தொண்டையில் சதையா? ஆப்ரேசன் தேவையில்லை; இதைச் செய்தாலே போதும்!
Tonsillitis Home Remedy : குழந்தைகளுக்கு தொண்டையில் சதையா? ஆப்ரேசன் செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் பூண்டை வைத்து இதை செய்து பாருங்கள் போதும்
உங்கள் வீட்டு குழந்தைகள் தொண்டையில் சதை வளர்ந்து அவதிப்படுகிறார்களா? அவர்களுக்கு ஆப்ரேசன்தான் தீர்வு என்று மருத்துவர்கள் கூறுகிறார்களா? தேவையில்லை, இந்த ஒரு எளிய வீட்டு வைத்தியமே அவர்களுக்கு உதவும்.
தேவையான பொருட்கள்
பூண்டு – 10 பல் (தோல் உரித்தது)
தேன் – ஒரு ஸ்பூன்
செய்முறை
10 பல் பூண்டை தோல் உரித்து, துவையலாக அரைத்துக்கொள்ளவேண்டும். அதை ஒரு வெள்ளை துணியில் கட்டி, நல்லெண்ணெய் விளக்கில் காட்டி சாறு பிழிந்துகொள்ளவேண்டும். அதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து, இரண்டையும் ஒன்றாகக் கலந்துகொள்ளவேண்டும்.
எனவே தொண்டையில் சதை வளர்ந்துவிட்டது, அதை ஆப்ரேசன் செய்து அகற்றவேண்டும் என்று மருத்துவர்கள் கூறினால், அவர்களுக்கு இதுபோல் செய்து பாருங்கள். நிச்சயம் பலன் கிட்டும்.
தொண்டையில் சதை (டான்சிலட்டிஸ்)
தொண்டையில் உள்ள சதையில் தொற்று ஏற்பட்டால், டான்சிலிட்டிஸ் என்ற தொண்டைச் சதை தொற்று ஏற்படுகிறது. டான்சில்ஸ் என்பது தொண்டையின் ஓரத்தில் இருக்கும் இரண்டு சிறிய கட்டிகள், இருபுறத்திலும் இருக்கம் மிருதுவான திசுக்கள், இது உங்கள் தொண்டையில் உள்ளே பின்புறத்தில் இருக்கும். நீங்கள் உங்கள் வாயைத்திறந்து, நாக்கை வெளியே நீட்டி, உங்களின் டான்சில்ஸ்களைப் பார்க்கலாம்.
டான்சில்ஸ்கள் உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறனின் ஒரு அங்கம் ஆகும். இவை உங்கள் உடலுக்கு நோய் ஏற்படுத்தும் கிருமிகளை பிடிக்க உதவுபவை. டான்சில்ஸில் உங்களுக்கு தொற்று ஏற்பட்டால், உங்களுக்கு விழுங்குவதில் சிரமம் ஏற்படும். தொண்டையில் கரகரப்பு ஏற்படும்.
இது 14 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு பொதுவாக ஏற்படும் பிரச்னையாகும். அனைத்து வயதினரும் பாதிக்கப்படலாம். 3 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு இதன் பாதிப்பு அரிதாகவே ஏற்படுகிறது. பெரும்பாலானவர்களுக்கு டான்சிலிட்டிஸ் வாழ்வில் ஒருமுறை ஏற்பட்டுவிடுகிறது.
அறிகுறிகள்
தொண்டை கரகரப்பு மற்றும் தொண்டை கம்மல்
விழுங்குவதில் சிரமம்
டான்சில்ஸ் என்ற உறுப்பு மற்றும் தொண்டை இரண்டும் சிவந்து வீங்கியிருத்தல்
டான்சில்ஸ் என்ற உறுப்பில் வெண்புள்ளிகள் ஏற்படுவது
டான்சில்ஸில் வெள்ளை, மஞ்சள் அல்லது க்ரே நிறத்தில் மாறுவது
100.4 டிகிரிக்கும் அதிகமான காய்ச்சல்
வயிறு வலி, வாந்தி, (குழந்தைகளுக்கு ஏற்படும்)
டான்சில்ஸில் வீக்கம்
முதன் முதலில் தொண்டை கரகரப்பு ஏற்படும். திடீரென தொண்டையில் புண் ஏற்படுவது, இந்த அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக உங்கள் டான்சில்ஸ்களை கவனிக்கவேண்டும். அது சிவந்து, வீங்கியுள்ளதா என பார்க்கவேண்டும்.
வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் இரண்டுமே டான்சிலட்டிஸ் ஏற்பட காரணமாகின்றன.
பரவும் விதம்
முத்தமிடுவது, பாத்திரங்கள் மற்றும் உணவு, பானங்களை பகிர்ந்து கொள்வதால் பரவும்.
டான்சிலிட்டிஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தால், அது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது.
பாதிக்கப்பட்ட இடங்களில் கைகளை வைத்துவிட்டு, மூக்கு மற்றும் வாயில் கைவைத்தால் ஏற்படும்.
பாதிக்கப்பட்ட நபர் இருமினாலோ அல்லது தும்மினாலோ அதில் இருந்து வரும் கிருமிகள் காற்றின் மூலம் மற்றவர்களின் சுவாசம் வழியாக பரவும்.
நீங்கள் தொடர் இருமலால் பாதிக்கப்படும்போது, காது, மூக்கு, தொண்டை நிபுணரை அணுகவேண்டும். அவர்கள் தேவையான பரிசோதனைகள் செய்து, அதற்கு தேவையான சிகிச்சைகளை பரிந்துரைப்பார்கள்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்