தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Curd Vadai: சூப்பாரான ஈவினிங் ஸ்நாக்ஸ்! நார்த் இந்தியன் ஸ்டைலில் தயிர் வடை செய்வது எப்படி?

Curd Vadai: சூப்பாரான ஈவினிங் ஸ்நாக்ஸ்! நார்த் இந்தியன் ஸ்டைலில் தயிர் வடை செய்வது எப்படி?

Suguna Devi P HT Tamil

Oct 03, 2024, 03:39 PM IST

google News
Curd Vadai: காலை, மாலை என இரு வேளைகளிலும், சாப்பிடக்கூடிய உணவாக வடை இருந்து வருகிறது. மேலும் இதில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு போன்றவை இருப்பதால் உடலுக்குத் தேவையான வலிமையையும் வழங்கும்.
Curd Vadai: காலை, மாலை என இரு வேளைகளிலும், சாப்பிடக்கூடிய உணவாக வடை இருந்து வருகிறது. மேலும் இதில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு போன்றவை இருப்பதால் உடலுக்குத் தேவையான வலிமையையும் வழங்கும்.

Curd Vadai: காலை, மாலை என இரு வேளைகளிலும், சாப்பிடக்கூடிய உணவாக வடை இருந்து வருகிறது. மேலும் இதில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு போன்றவை இருப்பதால் உடலுக்குத் தேவையான வலிமையையும் வழங்கும்.

வீடுகளிலும், கடைகளிலும் பொதுவாக செய்யப்படும் ஸ்நாக்ஸ் வகைகளில் முக்கியமானது வடை ஆகும். காலை, மாலை என இரு வேளைகளிலும், சாப்பிடக்கூடிய உணவாக வடை இருந்து வருகிறது. மேலும் இதில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு போன்றவை இருப்பதால் உடலுக்குத் தேவையான வலிமையையும் வழங்கும். இந்த வடையில் செய்யக்கூடிய மற்றொரு உணவு வகை தான் தயிர் வடை, இது முதன் முதலில் வட இந்தியாவில் தஹி வடா எனக் கூறப்படுகிறது. இந்த தயிர் வடயாய் வீட்டிலேயே செய்யும் முறையை இங்கு காண்போம்.

தேவையான பொருட்கள் 

ஒரு கப் உளுத்தம் பருப்பு

ஒரு கிலோ தயிர் 

ஒரு கப் புதினா 

5 பச்சை மிளகாய் 

சிறிதளவு இஞ்சி 

1 பல் பூண்டு 

ஒரு டீஸ்பூன் யோகார்ட் 

2 டீஸ்பூன் சர்க்கரை 

ஒரு டிஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள் 

ஒரு டீஸ்பூன் சாட் மசாலா

ஒரு டிஸ்பூன் சாஸ் 

தேவையான அளவு உப்பு 

மாதுளைம் பழம் 

சிறிதளவு முந்திரிப் பருப்பு

சிறிதளவு உலர் திராட்சை 

சிறிதளவு கொத்தமல்லி 

சிறிதளவு ஐஸ் தண்ணீர் 

செய்முறை

வடை செய்வதற்கான உளுத்தம் பருப்பை ஊற வைத்து, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு மிக்ஸியில் புதினா இலைகள், 2 பச்சை மிளகாய், சிறிதளவு இஞ்சி, பூண்டு, உப்பு, சர்க்கரை, மற்றும் யோகர்ட்டை சேர்த்து அதை நன்கு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் அரைத்த வடை மாவில் நறுக்கிய முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை ஆகியவற்றை கலக்கவும். பின் அதில் சர்க்கரை மற்றும் தயிரை சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில், அரைத்து வைத்திருக்கும் மாவில் சிறுசிறு உருண்டைகளாக எடுத்து கவனமாக எண்ணெய்யில் போட்டு அது நன்கு பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.

வடைகளை மொத்தமாக பொரித்து முடித்த பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து நாம் பொரித்து வைத்திருக்கும் வடைகளை அந்த தண்ணீரில் போட்டு அதை சுமார் 5 நிமிடம் வரை ஊற விடவும். 5 நிமிடத்திற்க்குப் பிறகு அந்த வடைகளை எடுத்து நம் கைகளின் நடுவே வைத்து மெதுவாக அழுத்தி அதில் இருக்கும் தண்ணீரை எடுக்கவும். பின்பு தயிரை ஒருமுறை நன்கு கலந்து விட்டு அதில் இந்த வடைகளை சேர்த்து மெதுவாக நன்கு கிளறி விட்டு அதை சுமார் 2 மணி நேரம் வரை ஊற விடவும். 2 மணி நேரத்திற்க்கு பிறகு அதை எடுத்து அதன் மேலே நாம் செய்து வைத்திருக்கும் புதினா சட்னி, டாமரின்ட் சாஸ், காஷ்மீர் மிளகாய் தூள், சாட் மசாலா, மாதுளை பழம் விதைகள், ஓமப்பொடி, மற்றும்  நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை தூவி விடவும். அவ்வளவுதான் உங்கள் அட்டகாசமான தயிர் வடை ரெடி. இதை உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி