தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  வீட்ல இட்லி மீதம் ஆகிருச்சா? அப்போ இத ட்ரை பண்ணி பாருங்க! அசத்தலான சில்லி இட்லி! ஈசி ரெசிபி!

வீட்ல இட்லி மீதம் ஆகிருச்சா? அப்போ இத ட்ரை பண்ணி பாருங்க! அசத்தலான சில்லி இட்லி! ஈசி ரெசிபி!

Suguna Devi P HT Tamil

Nov 22, 2024, 01:57 PM IST

google News
வீட்டில் காலை உணவான இட்லி மீதமாகி விட்டால் அதனை நினைத்து கவலை பட வேண்டாம். அந்த இட்லியை வீனாக்காமல் எளிமையான ரெசிபி செய்யலாம். (Cookpad)
வீட்டில் காலை உணவான இட்லி மீதமாகி விட்டால் அதனை நினைத்து கவலை பட வேண்டாம். அந்த இட்லியை வீனாக்காமல் எளிமையான ரெசிபி செய்யலாம்.

வீட்டில் காலை உணவான இட்லி மீதமாகி விட்டால் அதனை நினைத்து கவலை பட வேண்டாம். அந்த இட்லியை வீனாக்காமல் எளிமையான ரெசிபி செய்யலாம்.

வீட்டில் இட்லி மீதமானால் வீட்டில் ஒரே கலவரமாகிவிடும். ஏனென்றால் காலையில் செய்த இட்லியை சூடாக மட்டுமே சாப்பிட முடியும். இட்லி ஆறிய பின்னர் யாராலும் அந்த இட்லியை சாப்பிடவே முடியாது. ஆறிய மீதமான இட்லியை வைத்து எளிமையாக இட்லி உப்புமா செய்யும் முறையை தமிழ்நாட்டில் பலருக்கும் கற்றுக் கொடுத்தது சூரிய வம்சம் திரைப்படமே.  இருப்பினும் மாலை நேரங்களில் உப்புமா செய்து கொடுத்தால் குழந்தைகளும் பெரியவர்களும் சலித்துக் கொள்வார்கள். 

 எனவே இட்லியை வைத்து சுவையான மாலை நேர சிற்றுண்டி ஒன்றை செய்யலாம். மாலை நேரங்களில் எப்போதும் பள்ளிகளில் இருந்து வரும் குழந்தைகள் அலுவலகத்தில் இருந்து திரும்பி வரும் பெரியவர்கள் என அனைவருக்கும் டீயுடன் சேர்த்து ஒரு ஸ்நாக்ஸ் கொடுக்கும்போது மிகவும் மகிழ்ச்சியுடன் அதனை சாப்பிடுவார்கள். புதுவிதமான இந்த இட்லியை வைத்து செய்யக்கூடிய சில்லி இட்லி ஸ்னாக்ஸை செய்து கொடுத்து பாருங்கள். அனைவரும் ருசித்து சாப்பிடுவார்கள். இதனை எளிமையாக சில நிமிடங்களிலேயே நாமே வீட்டில் செய்யலாம்.  இதனை செய்யும் எளிய முறையை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள். 

தேவையான பொருட்கள் 

4 முதல் 6 மீதமான இட்லி 

ஒரு பெரிய வெங்காயம்

ஒரு தக்காளி

சிறிதளவு இஞ்சி 

3 பல் பூண்டு 

சிறிதளவு கடுகு 

சிறிதளவு கறிவேப்பிலை 

அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் 

2 டீஸ்பூன் மிளகாய் தூள் 

கால் டீஸபூன் சீரககத்தூள் 

அரை டீஸ்பூன் கரம் மசாலா 

1 டீஸ்பூன் மிளகு தூள் 

தேவையான அளவு உப்பு 

1 டீஸ்பூன் சர்க்கரை அல்லது வெல்லம் 

அரை எலுமிச்சை பழம் 

சிறிதளவு கொத்தமல்லி தழை 

செய்முறை 

சில்லி சில்லி இட்லி செய்வதற்கு முதலில் இட்லியை எடுத்து நீளவாக்கில் சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வெட்டிய இந்த இட்லி துண்டுகளை ஒரு கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை ஊற்றி சூடானதும் இவைகளை ஒன்றாக போட்டு இட்லியின் எல்லா பக்கங்களும் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். இவ்வாறு பொரித்து எடுத்து இட்லியை தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அதே கடாயில் நான்கு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் 2 டீஸ்பூன் அளவுள்ள கடுகை போட வேண்டும்.  கடுகு நன்கு பொரிந்ததும் அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட வேண்டும். இஞ்சி மற்றும் பூண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அரைத்து இஞ்சி பூண்டு விழுதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.  இந்த இஞ்சி பூண்டு விழுதை வதங்கிக் கொண்டிருக்கும் வெங்காயத்துடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

 இவை அனைத்தையும் சேர்த்து ஒன்றாக வதக்க வேண்டும். இவை ஓரளவுக்கு வதங்கியதும் ஒரு தக்காளியை எடுத்து நறுக்கி அதனுள் போட வேண்டும். தக்காளி நன்கு வதங்கிய பின்னர் சிறிதளவு கறிவேப்பிலை போட வேண்டும். இதனை அடுத்து மசாலா பொருட்களை சேர்க்க வேண்டும். இரண்டு டீஸ்பூன் மிளகாய்த்தூள், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்,  ஒரு டீஸ்பூன் சீரகத்தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிவிட வேண்டும்.  இவை நன்கு வறுபட்டதும் இறுதியாக ஒரு டீஸ்பூன் மிளகுத்தூளை சேர்க்க வேண்டும். இவை அனைத்தும் நன்கு வறுபட்டதும் சிறிதளவு தண்ணீரை ஊற்றி சில நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். இந்த நேரத்தில் நாம் பொரித்து எடுத்து வைத்திருக்கும் இட்லியை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். 

 இட்லி துண்டுகள் உடைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இப்போது இறுதியாக எலுமிச்சம் பழத்தை எடுத்து இந்த கலவையில் பிழிந்து விட வேண்டும். மேலும் நறுக்கிய கொத்தமல்லி தலைகளை தூவி பரிமாறினால் சுவையான சில்லி இட்லி ரெடி. மேலும் இதில் இனிப்பு சுவைக்காக ஒரு டீஸ்பூன் அளவு அல்லது இரண்டு டீஸ்பூன் அளவு வெல்லம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  இதற்கு பதிலாக வெள்ளை சர்க்கரையும் சேர்த்துக் கொள்ளலாம். இதனை வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுக்கும்போது மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் உங்களது வீட்டில் இதனை ட்ரை செய்து பார்த்து மகிழுங்கள். 

 

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி