காரசாரமான சிக்கன் சுக்கா! ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சுவையாக செய்யலாம்! இதோ ஈசி ரெசிபி!
Nov 22, 2024, 09:20 PM IST
வீட்டிலேயே எளிமையாக ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சிக்கன் சுக்கா செய்வது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.
வீட்டில் வித விதமாக சமையல் செய்து கொடுத்தாலும் வீட்டில் இருப்பவர்களுக்கு பெரிய ரெஸ்டாரண்ட் சென்று சாப்பிடுவதை மிகவும் அதிகமாக் விரும்புகின்றனர். அவர்களை அசத்துவதற்கான ரெசிபி தான் இது. வீட்டிலேயே எளிமையாக ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சிக்கன் சுக்கா செய்வது எப்படி என்பதை இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
ஒரு கிலோ சிக்கன்
3 பெரிய வெங்காயம்
1 தேங்காய்
5 பல் பூண்டு
10 வற மிளகாய்
1 துண்டு பட்டை
4 கிராம்பு
10 கருப்பு மிளகு
அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள்
1 டேபிள்ஸ்பூன் வெந்தயம்
1 டேபிள்ஸ்பூன் சீரகம்
1டேபிள்ஸ்பூன் மல்லி விதைகள்
1 டேபிள்ஸ்பூன் கசகசா
சிறிதளவு புளி
தேவையான அளவு எண்ணெய்
தேவையான அளவு நெய்
தேவையான அளவு உப்பு
சிறிதளவு கறிவேப்பிலை
சிறிதளவு கொத்தமல்லி
செய்முறை
முதலில் சிக்கனை நன்கு சுத்தம் செய்து எடுத்து வைத்து கொள்ளவும். பின்னர் ஒரு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் பட்டை, கருப்பு மிளகு, கிராம்பு, வெந்தயம், சீரகம், மல்லி விதை, மற்றும் கசகசாவை போட்டு வறுக்கவும். இதனை எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் அதே கடாயில் வற மிளகாயை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதே கடாயில் நெய் சேர்த்து சூடாக்கவும். பின்பு அதில் துருவிய தேங்காயை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் கடாயில் நெய் ஊற்று சூடாக்கி அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டை போட்டு அதை வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதை எடுத்து ஒரு தட்டில் கொட்டி நன்கு பரப்பி விட்டு அதையும் ஆற விடவும்.
அடுத்து வறுத்த அனைத்து பொருட்களும் நன்கு ஆறிய பின் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், சிறிதளவு புளி தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும். பிறகு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து அதை உருக விடவும். நெய் உருகியதும் அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டை போட்டு வதக்கவும். வெங்காயம் லேசாக பொன்னிறமானதும் அதில் சுத்தம் செய்து வைத்த சிக்கனை போட்டு அதை நன்கு கிளறி விட்டு வேக விடவும். பிறகு அதில் அரைத்த மசாலாவை சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு போட்டு சிக்கன் நன்கு மசாலாவோடு ஓட்டுமாறு அதை கலந்து விட்டு வேக விடவும். நன்கு வெந்த பின்னர் அதில் சிறிதளவு கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையை தூவி அதை நன்கு கலந்து விட்டு வேக விடவும். பிறகு அதை ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விட்டு பரிமாறவும். சப்பாத்தியுடனோ அல்லது நான்வுடனோ அதை சுட சுட பரிமாறவும். இப்பொழுது சூடான மற்றும் மிகவும் சுவையான சிக்கன் சுக்கா தயார். இதை உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.
டாபிக்ஸ்