தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பக்காவான பாகற்காய் வறுவல் செய்வது எப்படி? சிறந்த சைட் டிஷ் இது தான்! ஈசி ரெசிபி இதோ!

பக்காவான பாகற்காய் வறுவல் செய்வது எப்படி? சிறந்த சைட் டிஷ் இது தான்! ஈசி ரெசிபி இதோ!

Suguna Devi P HT Tamil

Nov 15, 2024, 01:08 PM IST

google News
சர்க்கரை நோயாளிகள் உள்ளவர்கள், வயிற்றில் பூச்சிகள் உள்ள குழந்தைகள் என பல தரப்பினருக்கு பாகற்காய் மிகவும் அவசியாமன ஒன்றாகும். ஆனால் இந்த பாகற்காயை பலர் சாப்பிடுவதில்லை. இந்த பாகற்காயை வைத்து எல்லாரும் விரும்பும் வறுவல் செய்வது எப்படி எனபதை இங்கு பார்ப்போம்.
சர்க்கரை நோயாளிகள் உள்ளவர்கள், வயிற்றில் பூச்சிகள் உள்ள குழந்தைகள் என பல தரப்பினருக்கு பாகற்காய் மிகவும் அவசியாமன ஒன்றாகும். ஆனால் இந்த பாகற்காயை பலர் சாப்பிடுவதில்லை. இந்த பாகற்காயை வைத்து எல்லாரும் விரும்பும் வறுவல் செய்வது எப்படி எனபதை இங்கு பார்ப்போம்.

சர்க்கரை நோயாளிகள் உள்ளவர்கள், வயிற்றில் பூச்சிகள் உள்ள குழந்தைகள் என பல தரப்பினருக்கு பாகற்காய் மிகவும் அவசியாமன ஒன்றாகும். ஆனால் இந்த பாகற்காயை பலர் சாப்பிடுவதில்லை. இந்த பாகற்காயை வைத்து எல்லாரும் விரும்பும் வறுவல் செய்வது எப்படி எனபதை இங்கு பார்ப்போம்.

தினமும் சமையலில் செய்யும் உணவுகளில் அனைத்து விதமான சத்துகளும் நிறைந்து இருக்குமாறு செய்வது அவசியம். ஆனால் இந்த சத்துகள் அளிக்க கூடிய உணவுகளை சிலர் விரும்பி சாப்பிடுவதில்லை. ஏனெனில் இந்த சத்துமிக்க காய்கறிகளின் சுவை அனைவரும் விரும்புமபடி இருப்பதில்லை. குழந்தைகள் முதல் பெரியவர் வரை இந்த பிரச்சனை இருக்கும். அதிலும் சர்க்கரை நோயாளிகள் உள்ளவர்கள், வயிற்றில் பூச்சிகள் உள்ள குழந்தைகள் என பல தரப்பினருக்கு பாகற்காய் மிகவும் அவசியாமன ஒன்றாகும். ஆனால் இந்த பாகற்காயை பலர் சாப்பிடுவதில்லை. இந்த பாகற்காயை வைத்து எல்லாரும் விரும்பும் வறுவல் செய்வது எப்படி எனபதை இங்கு பார்ப்போம். 

பாகற்காய் மசாலா செய்ய 

1 கிலோ பாகற்காய்

ஒரு டீஸ்பூன் உப்பு 

ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள்

4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் 

அரைத்த பூண்டு மசாலா

தேவையான அளவு தண்ணீர் 

தேவையான பொருட்கள்

4 டேபிள்ஸ்பூன் எண்ணெய்  

2 டீஸ்பூன் கடலை பருப்பு

2 டீஸபூன் மல்லி  

2 டீஸ்பூன் சீரகம்

15 பற்கள் பூண்டு 

சிறிய அளவிலான புளி

கறிவேப்பிலை

4 டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள் 

அரை டீஸ்பூன் கல் உப்பு 

அரை டீஸ்பூன் பெருங்காய தூள் 

அரை டீஸ்பூன் பொடியாக்கப்பட்ட வெல்லம் 

செய்முறை

 முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் கடலை பருப்பு, மல்லி மற்றும் சீரகம் சேர்த்து நன்கு வறுக்கவும். இவை நன்கு வறு பட்டவுடன் பூண்டு, புளி, கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட வேண்டும். இவை நன்கு வதங்கிய பின் அதில் மிளகாய் தூள், கல் உப்பு, பெருங்காய தூள், வெல்லம் சேர்த்து மிக்சியில் போட்டு தூளாக அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் அரைத்த பூண்டு மசாலாவை ஒரு கிண்ணத்தில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது ஒரு கிலோ பாகற்காய்களை நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டி, பெரிய விதைகளை அகற்றி, அவற்றில் உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து நன்கு கலக்கவும்.

 இப்பொழுது மற்றொரு அகலமான கடாயை அடுப்பில் வைத்து சூடேற்றி எண்ணெய் ஊற்ற வேண்டும். இந்த எண்ணெய் நன்கு சூடானதும் அதில் பொடியாக நறுக்கிய பாகற்காய் துண்டுகளை சேர்க்கவும். தீயை மிதமாக வைத்து பதினைந்து நிமிடங்கள் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். இப்போது அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்ம். தண்ணீர் சேர்த்து, பாகற்காயுடன் மசாலாவை வேக விடவும். தொடர்ந்து 5 நிமிடங்கள் இதனை வேக விட வேண்டும். சுவையான மொறு மொறு பாகற்காய் வறுவல் தயார். இதனை உங்கள் வீட்டிலும் செய்து பார்த்து மகிழுங்கள்.  குறிப்பாக சாம்பார் சாதம், ரசம் சாதம் மற்றும் தயிர் சாதத்துடன் பரிமாற சுவையான பாகற்காய் மசாலா வறுவல் தயார். மதிய உணவிற்கும் இதனை கொண்டு செல்லாம். இதில் பூண்டு சேர்த்து இருப்பதால் உடலில் உள்ள கேட்ட வாயுக்களை அகற்றி விடும். இதனை நீங்களும் செய்து பார்த்து மகிழுங்கள். 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை