அருமையான முந்திரி ஸ்வீட்! காஜூ கட்லி செய்வது எப்படி? தெரிந்துக் கொள்ளுங்கள்!
Nov 29, 2024, 07:36 PM IST
இந்தியாவில் இனிப்பு என்றால் அனைவருக்கும் ஒரு தனிப்பிரியம் உண்டு. அந்த அளவிற்கு அனைத்துக் கொண்டாட்டங்களின் போதும் விழாக்களின் போதும் இனிப்பு ஒரு முக்கிய உணவாக இருந்து வருகிறது. இந்த வரிசையில் முந்திரி பருப்பைக் கொண்டு செய்யப்படும். இடம்பெறுவதுண்டு.
இந்தியாவில் இனிப்பு என்றால் அனைவருக்கும் ஒரு தனிப்பிரியம் உண்டு. அந்த அளவிற்கு அனைத்துக் கொண்டாட்டங்களின் போதும் விழாக்களின் போதும் இனிப்பு ஒரு முக்கிய உணவாக இருந்து வருகிறது. இந்த வரிசையில் முந்திரி பருப்பைக் கொண்டு செய்யப்படும். ஒரு சுவையான இனிப்பு வகையான காஜு கட்லி அனைத்து விழாக்களிலும் இடம்பெறுவதுண்டு. இந்த காஜு கட்லியை வாங்க வேண்டும் என்றால் அதிக பணம் செலவழித்து பேக்கரிகளில் சென்று வாங்க வேண்டும். ஆனால் இப்போது அந்த கவலை இல்லைகாஜு கட்லியை எளிதாக வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
தேவையான பொருட்கள்
200 கிராம் கப் முந்திரி
அரை கப் சர்க்கரை
2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
தேவையான அளவு நெய்
தேவையான அளவு சில்வர் லீவிஸ்
பட்டர் பேப்பர்
செய்முறை
முதலில் மிக்ஸி ஜாரில் ஒரு கப் அளவு முந்திரியை போட்டு சுமார் ஒரு நிமிடம் வரை நன்கு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும். முந்திரியை அரைத்த பின் நன்கு சலித்து கொள்ளவும். அரை படாமல் இருக்கும் சிறு சிறு முந்திரித் துண்டுகளை மீண்டும் மிக்சி ஜாரில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் கால் கப் அளவு தண்ணீர் ஊற்றி அதில் அரை கப் அளவு சர்க்கரையை போட்டு அது நன்கு கரைந்து ஒரு கம்பி பதம் வரும் வரை அதை கிண்டி விடவும். பாகு ஒரு கம்பிப் பதம் எட்டியதும் அதில் அரைத்து வைத்திருக்கும் முந்திரி பவுடரை போட்டு கிளறிக் கொண்டே இருக்கவும். (கிளறுவதை நிறுத்தக் கூடாது. நிறுத்தினால் மாவு அடி பிடித்து விடும். அடுத்து ஏலக்காய் துளை அதில் தூவி கிளறி விடவும். முந்திரி பவுடர் வெந்து மாவு சிறிது கட்டியாக ஆக தொடங்கும் நிலையில் அடுப்பை முற்றிலுமாக குறைத்து கொள்ளவும்.
மாவு உருட்டும் பதம் வந்ததும் அடுப்பை அனைத்து விட்டு அந்த சூட்டிலேயே மாவை சுமார் ஒரு நிமிடம் வரை கிண்டி கொண்டே இருக்கவும். ஒரு நிமிடத்திற்கு பிறகு இந்த மாவை ஒரு கால் இன்ச் ஆழம் கொண்ட டிரேவை எடுத்து அதில் ஒரு பட்டர் பேப்பர் விரித்து அதில் மாற்றிக் கொள்ளவும். பின்னர் அதன் மேல் மற்றொரு பட்டர் பேப்பரை நெய் தடவி போட்டு சப்பாத்தி தேக்கும் கட்டையால் தேய்த்து விடவும். பின்பு மேலிருக்கும் பட்டர் பேப்பரை எடுத்து விட்டு சில்வர் லீவிஸ் ஐ அதன் மேலே பக்குவமாக வைத்து கொள்ளவும். அடுத்து ஒரு கத்தியால் டைமன் வடிவிலோ அல்லது அவரவர் விருப்பத்திற்கேற்ற வடிவிலோ இதை வெட்டிக் கொள்ளவும். வெட்டிய பின் சிறிது நேரம் ஆறவிட்டு பிரிட்ஜில் சிறிது நேரம் வைத்தோ அல்லது ஆறு விட்ட பிறகேவும் இதை சுவைக்கலாம். இப்பொழுது உங்கள் இனிப்பான மற்றும் சுவையான காஜு கட்லி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.
டாபிக்ஸ்