Millet Vadai: சத்தான சுவையான மில்லட் வடை செய்யலாமா? அருமையான செயமுறை இதோ!
Sep 23, 2024, 03:05 PM IST
Millet Vadai: மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அனைத்து விதமான உணவுகளிலும் தானியங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை உடலுக்கு தேவாயான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன.
தமிழ் உணவு வகைகளில் முக்கிய பங்கு வகிக்கும் தானியங்கள் அதிகமான ஊட்டச்சத்துகளை கொண்டு உள்ளன. ஆதி கால தமிழன் அவனது உணவில் இன்றியமையா பொருளாக இந்த தானியங்களை பயன்படுத்தி வந்தான். காலநிலை மாறும் போது இந்த தானியங்களின் பயன்பாடு குறைந்து வந்தது. தற்போது பல இயற்கை உணவுகளில் இந்த தானியங்களின் பங்கு முக்கியமான ஒன்றாகும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அனைத்து விதமான உணவுகளிலும் தானியங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை உடலுக்கு தேவாயான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன.
தானியங்களை வைத்து சமைக்கப்படும் உணவுகள் பல வகைகளில் உள்ளன. தானியங்களால் செய்யப்படும் வடை மிகவும் ருசியான உணவு ஆகும். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடுவதற்கு ஏற்ற ஒரு உணவுப் பொருளாக இந்த மில்லட் வடை உள்ளது. இதனை செய்யும் எளிமையான முறை குறித்து நாம் அறிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
கால் கப் தினை, கால் கப் வரகு, கால் கப் கடலைபருப்பு, கால் கப் துவரம்பருப்பு, கால் கப் உளுந்தம்பருப்பு, கால் கப்பாசி பருப்பு, கால் கப் பச்சரிசி, கால் கப் புழுங்கல்அரிசி, ஒரு டீஸ்பூன் பெருங்காயம், நான்கு வரமிளகாய், இரண்டு பச்சை மிளகாய், 4 முதல் 5 சிறிய வெங்காயம் ஆகியவற்றை சரியான அளவில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு கருவேப்பிலை, பொரிக்க தேவையான அளவு எண்ணெய், தேவையா அளவு தண்ணீர், தேவையான அளவு உப்பு ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை
அனைத்து தானியங்கள்,பருப்புவகைகள், அரிசிகள் இவைகளை வரமிளகாய் சேர்த்து ஒரு மணிநேரம் ஊறவைத்து வரமிளகாய்உப்பு, பெருங்காயம் பூண்டு சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். சின்ன வெங்காயம்,பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவைகளை பொடி பொடியாக நறுக்கி மாவில் சேர்க்க வேண்டும்.
மாவைநன்கு கலந்து விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். சுவையான, சூடான வடைகளை செய்து சாப்பிடுங்கள், இதற்கு தேங்காய் சட்னி வைத்து சாப்பிடும் போது மிகவும் ருசியாக இருக்கும்.
தானியங்களின் பயன்கள்
கம்பு, சோளம், வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, போன்றவையே சிறுதானியங்கள். இவை அதிக ஆற்றலை தரக்குடியவை. அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது இவை புரதச்சத்து, நார்ச்சத்து ஆகியவற்றை அதிக அளவில் கொண்டுள்ளன.பாரம்பரிய சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன் பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்