Vazhaithandu Chutney : ருசியான வாழைத்தண்டு சட்னி.. இட்லி தோசைக்கு சூப்பரான காமினேஷன்.. சிறுநீரக கல்லை அடித்து விரட்டும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Vazhaithandu Chutney : ருசியான வாழைத்தண்டு சட்னி.. இட்லி தோசைக்கு சூப்பரான காமினேஷன்.. சிறுநீரக கல்லை அடித்து விரட்டும்!

Vazhaithandu Chutney : ருசியான வாழைத்தண்டு சட்னி.. இட்லி தோசைக்கு சூப்பரான காமினேஷன்.. சிறுநீரக கல்லை அடித்து விரட்டும்!

Pandeeswari Gurusamy HT Tamil
Sep 19, 2024 06:34 PM IST

Vazhaithandu Chutney : வாழை தண்டில் ஒரு சட்னி செய்து கொடுத்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். சூடான சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, பிரெட் என எந்த உணவோடும் சாப்பிட அருமைகயான காம்பினேசன். இங்கு அசத்தலான டேஸ்ட்டில் வாழை தண்டு சட்னி எப்படி செய்வது என பார்க்கலாம்.

Vazhaithandu Chutney : ருசியான வாழைத்தண்டு சட்னி.. இட்லி தோசைக்கு சூப்பரான காமினேஷன்.. சிறுநீரக கல்லை அடித்து விரட்டும்!
Vazhaithandu Chutney : ருசியான வாழைத்தண்டு சட்னி.. இட்லி தோசைக்கு சூப்பரான காமினேஷன்.. சிறுநீரக கல்லை அடித்து விரட்டும்!

வாழைத்தண்டு சட்னிக்கு தேவையான பொருட்கள்

வாழைத்தண்டு

வெங்காயம்

பச்சை மிளகாய்

பூண்டு

நிலக்கடலை

மல்லிவிதை

பொட்டுக்கடலை

மிளகு

சீரகம்

கொத்தமல்லி

தேங்காய்

புளி

உப்பு

கடலை எண்ணெய்

கடுகு உளுந்து

கறிவேப்பிலை

வரமிளகாய்

வாழை தண்டு சட்னி சட்னி செய்முறை

கால் கிலோ அளவு வாழை தண்டை சுத்தம் செய்து நறுக்கி எடுத்து கொள்ளவும். ஒரு கடாயை சூடாக்கி அதில் ஒரு ஸ்பூன் வறுத்த நிலக்கடலை, ஒரு ஸ்பூன் பொட்டுக்கடலை, ஒரு ஸ்பூன் மல்லி விதை வறுக்க வேண்டும். மல்லி விதை பச்சை வாடை போகும் அளவிற்கு வறுக்க வேண்டும். கடைசியாக அதில் அரை ஸ்பூன் மிளகு மற்றும் சீரகத்தையும் சேர்த்து வறுக்க வேண்டும். சீரகம் வாசம் வர ஆரம்பிக்கும்போது அதை ஒரு தட்டில் மாற்றி நன்றாக ஆற விட வேண்டும்.

இப்போது அதே கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் 75 முதல் 100 கிராம் அளவிற்கு சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இதில் 3 பச்சை மிளகாய் சேர்க்கவும். வெங்காயம் லேசாக வதங்கிய பின் அதில் நாம் நறுக்கி வைத்த வாழை தண்டை சேர்க்க வேண்டும். வாழைத்தண்டு நன்றாக வதங்க வேண்டும். வாழை தண்டு பச்சை வாடை போகும் வரை அதை வேக விட வேண்டும். பச்சை வாடை போன பிறகு அதில் அரை கட்டு கொத்த மல்லி இலை மற்றும் ஒரு நெல்லிக்காய் அளவு புளிசேர்த்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.

பின்னர் ஏற்கனவே வறுத்த நிலக்கடலை, பொட்டுக்கடலை, மல்லிவிதை, மிளகு, சீரகத்தை மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும். பின்னர் அதே ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும். நன்றாக அரைத்த பின் ஒரு பாத்திரத்திற்கு மாற்றி எடுத்துக்கொள்ளள வேண்டும்.

பின்னர் ஒரு தாளிப்பு கரண்டியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் ஒரு ஸ்பூன் கடுகு, உளுந்து, ஒரு வரமிளகாய் கிள்ளி போட்டு சேர்த்து தாளிக்க வேண்டும். கடைசியாக அதில் 2 சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதில் சேர்க்க வேண்டும். ஒரு கொத்து கறிவேப்பிலைசிவக்க வதக்க வேண்டும். வெங்காயம் சிவந்து வந்த உடன் இந்த தாளிப்பை சட்னியில் சேர்த்தால் ருசியான வாழைத்தண்டு சட்னி ரெடி. ருசி அருமையாக இருக்கும்.

அறுசுவை உணவுகளின் குறிப்புகளை நீங்களும் அறிந்து கொள்ள, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள். சமூக வலைதள பக்கங்களிலும் எங்களை தொடரலாம்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.