Top 10 National-World News: நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு முதல் மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா வரை - டாப் 10 நியூஸ்!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Top 10 National-world News: நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு முதல் மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா வரை - டாப் 10 நியூஸ்!

Top 10 National-World News: நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு முதல் மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா வரை - டாப் 10 நியூஸ்!

Karthikeyan S HT Tamil
Sep 28, 2024 07:03 PM IST

Top 10 National-World News: நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு, இஸ்ரேல் தாக்குதல், மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா உள்பட இன்றைய தேசம், உலகம் டாப் 10 செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.

Top 10 National-World News: நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு முதல் மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா வரை - டாப் 10 நியூஸ்!
Top 10 National-World News: நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு முதல் மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா வரை - டாப் 10 நியூஸ்!

நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டிப் பணம் பறித்த புகாரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீதும், அமலாக்கத்துறை மீதும் பெங்களூரு திலக் நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய திலக் நகர் போலீசாருக்கு பெங்களூரு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

ஆலப்புழாவில் புகழ்பெற்ற 70வது ஆண்டு படகுப் போட்டி 

கேரள மாநிலம் ஆலப்புழாவில் நேரு கோப்பைக்கான 70வது ஆண்டு படகு போட்டிகள் தொடங்கின. முன்னதாக வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. போட்டிகளைக் காண புன்னமடை காயல்பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டுள்ளனர்.

ஹிஸ்புல்லா தலைவரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய இஸ்ரேல்!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்க தலைவரை கொன்றதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.

மத்திய அரசின் கடன் ரூ.176 லட்சம் கோடியாக அதிகரிப்பு

2024 ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில், மத்திய அரசின் மொத்த கடன்தொகை ரூ.176 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. மொத்த கடன் தொகையில் வெளிநாட்டு கடன் மதிப்பு ரூ.9.78 லட்சம் கோடியாக உள்ளது. அதேபோல் உள்நாட்டுக் கடன் தொகையில் அரசின் பத்திரங்கள் மூலம் ரூ.104.5 லட்சம் கோடியும், கருவூல பத்திரம் மூலம் ரூ.10.5 லட்சம் கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.

இஸ்ரேல் தாக்குதல் - மேலும் 300 பேர் உயிரிழப்பு

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில், மேலும் 300 பேர் உயிரிழந்தனர். ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்கள், தலைமையகத்தைக் குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மகாராஷ்டிராவின் தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 26-ம் தேதியோடு முடிவடைவதால் மாநில தேர்தல் அதற்கு முன்பாக நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்

பிரதமர் மோடி அரசால் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்ட இளைஞர்கள் அனைவரும் ஒவ்வொரு தேர்தலிலும் பாஜகவை தோற்கடிப்பார்கள் என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

பிரிட்டன் பிரதமர் ஆதரவு

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்கப்பட வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார்.

3 வீரர்கள் உள்பட 4 பேர் காயம்

குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் உடனான என்கவுண்டரில் 3 வீரர்கள் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.

மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்தது குறித்து அவர் புகார் தெரிவித்ததற்கு விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.