Coffee for Diabetes: காபி குடிப்பதால் சர்க்கரை நோய் ஆபத்து குறையுமா? புதிய ஆய்வு சொல்வது என்ன?
Coffee for Diabetes: பொதுவாகவே அதிகமான காபி, டீ போன்றவைகளை அடிக்கடி குடிப்பதால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்ற கருத்து சமீபகாலமாக நிலவி வருகிறது.
உணவு பழக்க வழக்கங்கள் முற்றிலும் மாறிவரும் சூழ்நிலையில் இந்த உணவு முறைகளால் பல நோய்கள் ஏற்பட வாய்ப்பு ஏற்பட இருப்பதாக கூறப்படுகிறது. பொதுவாகவே அதிகமான காபி, டீ போன்றவைகளை அடிக்கடி குடிப்பதால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்ற கருத்து சமீபகாலமாக நிலவி வருகிறது. இதனையே பல மருத்துவர்களும் பரிந்துரை செய்கின்றனர். மேலும் காபி குடிக்கும் பழக்கமும் சற்று குறைந்தே வருகிறது. இந்நிலையில் எண்டோகிரைன் சொசைட்டி வெளியீடு ஒரு நாளிதழில் வெளியான ஆய்வில், தினம் தோறும் குறிப்பிட்ட அளவு காபி குடிப்பவர்களின் உடலில் மெட்டபாலிசம் எனும் வளர்சிதை மாற்றம் சீராகவும், கரோனரி இதய நோய், இரண்டாம் வகை நீரிழிவு நோய் உட்பட இவைகளின் தாக்கம் கட்டுபடுத்தப்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
எண்டோகிரைன் நாழிதழ்
எண்டோகிரைன் சொசைட்டியின் கிளினிக்கல் எண்டோகிரைனாலஜி & மெட்டபாலிசம் என்ற இதழில் காபி, டீ போன்றவைகளை உட்கொள்பவர்கள் உடலில் ஏற்படும் மாற்றம் குறித்தான ஒரு ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் அடிப்படையில், தினமும் குறிப்பிட்ட அளவு காபியை குடிப்பவர்களில் இதயத்தில் ஏற்படும் காரடியோமெட்டபாலிக் நோய்களின் ஆபத்தை குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கரோனரி இதய நோய் மற்றும் இரண்டாம் வகை நீரிழிவு நோய் ஆகியவற்றிற்கு எதிராக செயல்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆய்வு
இந்த ஆய்வானது இங்கிலாந்தில் உள்ள உயிரியல் சோதனையாளர்களிடம் நிகழ்த்தப்பட்டது. இதில் மொத்தம் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 315 பேர் பங்கேற்றனர். ; 88 204 மற்றும் 96 393 பங்கேற்பாளர்களிடையே 168 வளர்சிதை மாற்றங்கள் அளவிடப்பட்டன. இதில் தினமும் 3 கப் காபி அல்லது 200 முதல் 300 மில்லி கிராம் காஃபின் உடகொள்பவர்களுக்கும், நாள் ஒன்றுக்கு 100 மில்லி கிராமிற்கும் குறைவாக காபி உட்கொள்பவர்களுக்கும் இடையே தரவுகள் சேகரிக்கப்பட்டன. இது குறித்து சீனாவின் சூசோவில் உள்ள சூச்சோ பல்கலைக்கழக்கத்தின் தோற்றுநோயியல் மற்றும் உஈரியல் புள்ளியல் துறை எழுத்தாளர் சாஃபு கூறுகையில், "ஒரு நாளைக்கு மூன்று கப் காபி அல்லது 200-300 மி.கி காஃபின் உட்கொள்வது, கார்டியோமெடபாலிக் நோய் இல்லாத நபர்களுக்கு கார்டியோமெடபாலிக் மல்டிமார்பிடிட்டியை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்க உதவும்" என்று தெரிவித்தார்.
மேலும் இந்த ஆய்வின் முடிவில் இதயம் தொடர்பான நோய்களின் தாக்காகத்தையும், இரண்டாம் வகை நீரிழிவு நோய்க்கு எதிராகவும் தினமும் உட்கொள்ளும் காபி செயல்படுகிறது. பல்வேறு விதமான உணவு முறைகளால் உடலில் ஏற்படும் குறைபாடுகளையும், நோய்களையும் சரிசெய்ய சீரான உணவு முறையே பயன்படுகிறது. இந்நிலையில் இந்த புதிய ஆய்வின் வழி காபி உட்கொள்வதில் உள்ள நன்மைகள் கண்டறியப்பட்டுள்ளன.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒரு போதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்