Kadai Mushroom Gravy : கமகம வாசனையுடன் கடாய் காளான் கிரேவி – இப்டி செஞ்சு சுவைங்க!
Kadai Mushroom Gravy : இதை செய்வது மிகவும் எளிது. இதற்கு கொஞ்சம் பொருட்களே தேவையானது. காளான் கிரேவி செய்வதற்கு வெங்காயத்தை வதக்கி, மசாலக்கள், தக்காளி அரைத்து சேர்த்து, காளான்களையும் சேர்த்து, நன்றாக சமைக்க வேண்டும். மிகவும் சுவை நிறைந்தது.
தேவையான பொருட்கள்
காளான் - 400 கிராம்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய்
பிரியாணி இலை
சீரகம் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 3 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
தக்காளி விழுது - 4 அரைத்தது
உப்பு - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 1/2 மேசைக்கரண்டி
சீரக தூள் - 2 தேக்கரண்டி
மல்லி தூள் - 2 தேக்கரண்டி
குடை மிளகாய் - 1 நறுக்கியது
வெங்காயம் - 1 நறுக்கியது
கரம் மசாலா தூள் - 1 1/2 தேக்கரண்டி
தண்ணீர் - 1 கப்
நெய்
இஞ்சி நீளவாக்கில் நறுக்கியது
கசூரி மேத்தி
பச்சை மிளகாய் - 2 கீறியது
செய்முறை
கடாய் மஸ்ரூம் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ள போகிறோம். இதை செய்வது மிகவும் எளிது. இதற்கு கொஞ்சம் பொருட்களே தேவையானது. காளான் கிரேவி செய்வதற்கு வெங்காயத்தை வதக்கி, மசாலக்கள், தக்காளி அரைத்து சேர்த்து, காளான்களையும் சேர்த்து, நன்றாக சமைக்க வேண்டும். மிகவும் சுவை நிறைந்தது. இதை ரொட்டி, பராத்தா, நான் ஆகிய அனைத்துடனும் சேர்த்து சாப்பிடலாம். இதை வீட்டிலேயே செய்து நீங்கள் மகிழலாம்.
தாபாக்கள் மற்றும் வட இந்திய உணவுகளில் பிரபலமான ஒன்று. தக்காளியை மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெயை சூடாக்கி, முழு கரம் மசாலாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி, கண்ணாடி பதம் வந்தவுடன், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கி, தக்காளி விழுதை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர், மிளகாள்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் அனைத்தும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
எண்ணெய் பிரிந்து வரும் பதத்தில், அலசி சுத்தம் செய்து, நறுக்கிய காளானை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
காளான் நன்றாக வெந்ததும், சதுர வடிவில் வெட்டிய காளான் மற்றும் பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
இறுதியாக ஒன்றரை தேக்கரண்டி கரம்மசாலா சேர்த்து, ஒரு கப் தண்ணீர் சேர்த்து, மிதமான தீயில் கடாயை மூடி 10 நிமிடங்கள் வேக விடவேண்டும். தேவையான அளவு உப்பு, நெய் சேர்த்துவிட்டு, நீளமாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், கசூரி மேத்தி கசக்கி தூவி மூடி வைத்து அடுப்பை நிறுத்திவிடவேண்டும்.
சிறிது நேரம் கழித்து திறந்தால் கமகம மணத்துடன் கடாய் காளான் கிரேவி தயாராக இருக்கும். அதை அப்படியே எதற்கு வேண்டுமானாலும் பரிமாறிக்கொள்ளலாம்.
டாபிக்ஸ்