தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  குழந்தைகளுக்குப் போஷாக்கு தரும் உலர் பழ கலவை லட்டு செய்முறை

குழந்தைகளுக்குப் போஷாக்கு தரும் உலர் பழ கலவை லட்டு செய்முறை

I Jayachandran HT Tamil

Mar 30, 2023, 09:24 PM IST

Healthy Recipes: குழந்தைகளுக்குப் போஷாக்கு தரும் உலர் பழ கலவை லட்டு செய்முறை குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.
Healthy Recipes: குழந்தைகளுக்குப் போஷாக்கு தரும் உலர் பழ கலவை லட்டு செய்முறை குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

Healthy Recipes: குழந்தைகளுக்குப் போஷாக்கு தரும் உலர் பழ கலவை லட்டு செய்முறை குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்த உலர் பழங்களை ஒன்றாக சேர்த்து செய்யும் நட்ஸ் லட்டு, குழந்தைகளுக்கு மிகவும் சத்தானது. இந்த சத்து நிறைந்த லட்டு செய்வது எப்படி என்பதை நாம் பார்ப்போம்.

ட்ரெண்டிங் செய்திகள்

Idly Dosa Batter : வயிறு முதல் குடல் வரை உள்ள புண்கள் குணமாகவேண்டுமா? இட்லி மாவு இப்டி மட்டும் அரைங்க போதும்!

Cucumber Salad : சன் ஸ்ட்ரோக்கில் இருந்து தப்பிக்க வேண்டுமா? இந்த ஒரு சாலட் மட்டும் போதும்!

Gongura Pachadi : வாயில் எச்சில் ஊறவைக்கும் சுவையில் புளிச்ச கீரை பச்சடி செய்வது எப்படி? இதோ ரெசிபி!

Hair Care : பட்டுபோல் மின்னும் நீண்ட கூந்தல் வேண்டுமா? இதோ வீட்டிலே தயாரிக்கலாம் ஷாம்பூ!

உலர் பழ கலவை லட்டு செய்யத் தேவையான பொருட்கள் :

வறுத்த வேர்க்கடலை - அரை கப்

வறுத்த எள் - 1 டீஸ்பூன்

பொட்டுக்கடலை - கால் கப்

ரஸ்க் - 4

பொடித்த வெல்லம் - 100 கிராம்

பேரீச்சம் பழம் - 4 (நறுக்கவும்)

முந்திரி பருப்பு - 4 (நறுக்கவும்)

உலர்திராட்சை - 4

டூட்டிபுரூட்டி - சிறிதளவு

உலர் பழ கலவை லட்டு செய்முறை:

முந்திரி பருப்பு, பேரீச்சம் பழம் ஆகியவற்றை நெய்யில் வறுத்தெடுத்துக்கொள்ளவும்.

வேர்க்கடலை, எள், ரஸ்க், பொட்டுக்கடலை ஆகியவற்றை மிக்சியில் போட்டு பொடித்துக்கொள்ளவும்.

அதனுடன் வெல்லத்தையும் கலந்து கொள்ளவும்.இந்த கலவையுடன் நெய்யில் வறுத்தெடுத்த பேரீச்சம் பழம், முந்திரி பருப்பு, உலர் திராட்சை, ரூட்டி புரூட்டி போன்றவற்றை ஒன்றாக சேர்த்து கிளறவும்.

பின்னர் சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும். சத்தான நட்ஸ் லட்டு தயார்.

டாபிக்ஸ்