தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Terrace Gardening Tips: மாடித்தோட்ட பராமரிப்பு! முக்கியமாக செய்ய வேண்டியவை

Terrace Gardening Tips: மாடித்தோட்ட பராமரிப்பு! முக்கியமாக செய்ய வேண்டியவை

Suguna Devi P HT Tamil

Sep 21, 2024, 04:53 PM IST

google News
Terrace Gardening Tips: மாடித்தோட்டம் வைத்திருப்பது என்பது பொதுவான ஒன்றாக மாறி வருகிறது. நீங்களும் உங்கள் வீட்டு மாடியில் காய்கறி, பூக்கள் நிறைந்த தோட்டம் வைத்து பயனடையலாம்.
Terrace Gardening Tips: மாடித்தோட்டம் வைத்திருப்பது என்பது பொதுவான ஒன்றாக மாறி வருகிறது. நீங்களும் உங்கள் வீட்டு மாடியில் காய்கறி, பூக்கள் நிறைந்த தோட்டம் வைத்து பயனடையலாம்.

Terrace Gardening Tips: மாடித்தோட்டம் வைத்திருப்பது என்பது பொதுவான ஒன்றாக மாறி வருகிறது. நீங்களும் உங்கள் வீட்டு மாடியில் காய்கறி, பூக்கள் நிறைந்த தோட்டம் வைத்து பயனடையலாம்.

மாறிவரும் கால சூழ்நிலைக்கேற்ப மாறிய ஒன்றுதான் மாடித்தோட்டம் போடும் முறை. இதன் வாயிலாக சமையலுக்கு தேவைப்படும் பெருவாரியான காய்கறிகளை வளர்த்து பயன்பெறலாம். மாடித்தோட்டத்தில் நீங்கள் விரும்பும் எதையும் வளர்க்கலாம். காய்கறிகள், மூலிகைகள் முதல் பூக்கள் வரை எந்த பருவத்திலும் குறைந்த முயற்சியில் பயிரிடலாம். மாடித்தோட்டம் வைத்திருப்பது என்பது பொதுவான ஒன்றாக மாறி வருகிறது. நீங்களும் உங்கள் வீட்டு மாடியில் காய்கறி, பூக்கள் நிறைந்த தோட்டம் வைத்து பயனடையலாம்.

மாடியில் தோட்டம் அமைப்பதற்கு ஏற்ற செடிகளை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். தக்காளி, கத்தரிக்காய், சிறிய கிழங்கு வகை செடிகள் ஆகியவை ஏற்றவையாக இருக்கும். மேலும் சிறிய பூச்செடிகள், நறுமணம் அளிக்கும் தவாரங்கள் ஆகியவற்றையும் விளைவிக்கலாம். மாடித் தோட்டம் அமைக்கும் முன்பு இது தொடர்பான நிபுணர்களின் பரிந்துரையை கேட்பது சிறந்த முடிவாகும். சூரிய ஒளி, நீர்ப்பாசனம், மண்ணின் நிலை மற்றும் வெப்பநிலை தேவைகள் போன்றவை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கியமான காரணிகளாகும்.

நீர்ப்பாசனம் 

செடிகளுக்கு நீர்ப்பாசனம் செய்வது, வழக்கமான தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு நீர் பாய்ச்சுவதைப் போன்றது. இதில் உள்ள வித்தியாசம் என்னவென்றால், அதிகப்படியான நீர் பாய்ச்சுவதை தவிர்க்க வேண்டும்.  தொட்டியில் இருந்து வடியும் நீர் செல்ல வடிகால் அமைக்க வேண்டும்.

உங்கள் செடிகளுக்கு காலையில் தண்ணீர் கொடுப்பது, அவற்றை நீரேற்றமாக வைத்திருக்கவும், ஒளிச்சேர்க்கை செயல்முறை நடக்கவும் ஒரு சிறந்த வழியாகும். மாடித்தோட்டங்களில் உள்ள மண் ஆழமற்றது மற்றும் விரைவாக காய்ந்துவிடும். எனவே, ஒவ்வொரு நாளும் உங்கள் செடிகளுக்கு தண்ணீர் கொடுப்பது உங்கள் தாவரங்களை நீரேற்றமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.

பூச்சிகளை விரட்டுதல் 

செடிகளை தாக்கி அழிப்பதில் பூச்சிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. எனவே, செடிகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள இயற்கை பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தலாம். சோப்பு நீர், வேப்ப எண்ணெய், பேக்கிங் சோடா ஆகியவற்றின் கலவையை தெளிப்பதன் வாயிலாகவும் பூச்சிகளை விரட்டலாம்.

மேற்கூரை அமைத்தல் 

சில சமயங்களில் சூரிய ஒளியில் வளர்க்கூடிய  செடிகளும் அதிக வெப்பத்தை தாங்காது. வெப்பமான மாதங்களில், குறிப்பாக இந்தியா போன்ற மிதவெப்ப நாடுகளில், சிறிது கூடுதல் கவனிப்பு தேவை. உங்கள் மாடித் தோட்டத்தில் உள்ள  செடிகளுக்குத் தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சுதல், வலைகளைப் பயன்படுத்தி நிழலை அமைத்தல், போதுமான ஊட்டச் சத்து வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் செடிகள் கடுமையான கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க முடியும்.

மாடித்தோட்டம் அமைப்பு 

முதலில் உங்களது வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க, அந்த கட்டடம் ஏற்றதா என பார்த்துக் கொள்ள வேண்டும். அதிகப் படியான தொட்டிகள் வைப்பதால் ஏற்படும்  சேதத்தைத் தடுக்க எதையும் நடுவதற்கு முன் உங்கள் மாடியை தயார் செய்ய வேண்டும். மாடியை தயார் செய்ய அருகில் இருக்கும் மாடித் தோட்ட தயாரிப்பு நிறுவங்களை அணுக வேண்டும். அவர்களின் ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும்.

செடிகளின் வேர்கள் கட்டடத்தின் கட்டமைப்பிற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, எந்த கீரையையும் நடவு செய்வதற்கு முன் கூரையை தயார் செய்வது ஒரு முக்கியமான பகுதியாகும்.

 

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி