Morning Quotes : காலையில் சூரிய ஒளியில் கொஞ்ச நேரம் செல்வதால் கிடைக்கும் பலன்கள்.. மன நலம் முதல் தூக்கமின்மை தீர்வு வரை
Morning Quotes : மெலடோனின் அளவை ஒழுங்குபடுத்துவது முதல் எண்டோர்பின் வெளியீட்டைத் தூண்டுவது வரை, காலையில் சிறிது சூரிய ஒளியைப் பெறுவதன் பல நன்மைகள் இங்கே உள்ளன.

Morning Quotes : இன்றைய மாறிவரும் சூழலில் தூக்கமின்மை என்பது மிக பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. வயது வித்தியாசமின்றி பலதரப்பினரும் இந்த பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இந்த பிரச்சினையை போக்க உதவும் மிக எளிமையான வழியை இங்கு பார்க்கலாம். காலையில் சிறிது சூரிய ஒளியைப் பெற வெளியே செல்வது ஒரு சிறந்த வழக்கம். இதனால் பொதுவாக நமது காலைப் பொழுதுகள் புத்துணர்ச்சியுடன் தொடங்கும். இது நமது உடலுக்கும் ஆரோக்கியம் ஆகும். காலையில் நடைப்பயிற்சி அல்லது வொர்க்அவுட்டிற்கு - வெளியில் செல்வதற்கு நேரம் ஒதுக்கும்போது, ஒவ்பொரு நாளும் காலையில் சில மணிநேரங்களை நமது நல்வாழ்வுக்காக செலவழிக்கும் பழக்கம் ஏற்படும். அதுமட்டும் இல்லை தினமும் காலை சூரிய ஒளியில் நமது உடல் வெளிப்படுவதால் பல அற்புதமான நன்மைகள் உள்ளன. இதன் அசர வைக்கும் நன்மைகளை இங்கு பார்க்கலாம்.
தூக்கத்தை மேம்படுத்துகிறது:
நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்திற்கு காலை சூரிய ஒளியைப் பெறுவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று. காலை சூரிய ஒளியில் உடலை வெளிப்படுத்துவது நாம் இரவில் நன்றாக தூங்க உதவுகிறது. சூரிய ஒளி உடலின் சர்க்காடியன் தாளத்தை சரிசெய்ய உதவுகிறது. இதனால் தூக்கம் இல்லாமல் தவிப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வழி என்றே சொல்லலாம்.
வைட்டமின் டி உற்பத்தி செய்கிறது:
காலை சூரிய ஒளி வைட்டமின் D இன் சிறந்த மூலமாகும். உடலில் விட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள் தினமும் சிறிது நேரம் சூரிய ஒளியில் இருப்பது நல்லது. குறிப்பாக உடலில் வைட்டமின் D இன் குறைபாடு தூக்கமின்மை மற்றும் தூக்கக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. காலையில் சிறிது சூரிய ஒளியைப் பெறுவது அதிக வைட்டமின் D ஐ உற்பத்தி செய்ய உதவுகிறது - இது நமது தூக்கமின்மை பிரச்சனையை சரிசெய்ய உதவுகிறது.