Goat Song : அந்த ப்ளூ கலர் பட்டாம் பூச்சி.. நா பாடவான்னு கேட்ட விஜய்.. நெஞ்செல்லாம் அடச்சுடுச்சு.. கலங்கிய வெங்கட்பிரபு
Goat Song : பிரியதர்ஷினின்ற ஒரு பொண்ணுதான் பாடுச்சு. அந்த வாய்ஸ்தா AI ல கண்வெர்ட் பண்னோம். விஜய் சார் இந்த சாங்க கேட்டுட்டு.. இந்த சாங் நா பாடவான்னு கேட்டார். அதுவே எனக்கு சந்தோசமா இருந்துச்சு. நாங்க பவதாக்கு குடுக்குற ட்ரிபியூட்ல விஜய் சார் பாடுனது லைப் லாங் எங்களால மறக்கவே முடியாது.
Goat Song : கடந்த வியாழனன்று விஜய் நடிப்பில் வெளியான "கோட்" திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் இளையராவின் மகளும், பாடகியும், யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமான மறைந்த பவதாரிணியின் குரல் AI தொழில் நுட்பம் மூலம் மீள் உருவாக்கம் செய்யப்பட்டு, பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இப்பாடலில் பவதாரிணியின் பெயரை, ராஜா பவதாரிணி எனப் படக்குழுவினர் பயன்படுத்தியுள்ளனர். "சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ.. கருவறை மீண்டும் மறக்கிறதோ.. விட்டுவைத்த வானம் வருகிறதோ.. தித்திப்போய நெஞ்சம் மூழ்கிறதோ..’’ என ஒலிக்கும் குரலில் பவதாரிணியின் குரல் உயிர்ப்புடன் ஒலிக்கிறது.
இந்நிலையில் Behindwoods யூடியூப் சேனலில் கோபிநாத் The Goat பட இயக்குநர் வெங்கட் பிரபுவை நேர்காணல் செய்துள்ளார். அப்போது பவதாரணியின் குரல் AI தொழில் நுட்பத்தில் பயன்படுத்தப்பட்டது குறித்தும் மற்றும் அதே பாடலில் விஜய் பாடியது குறித்த கேள்விகளை எழுப்பினார். இதற்கு பதில் அளித்த வெங்கட் பிரபு, "அது பயங்கர எமோஷனலான விஷயம். அவளுக்கு உடம்பு சரியில்லை என தெரிந்த உடனேயே எல்லாரும் உடஞ்சு போயிட்டோம். கேன்சர் இருக்கிறது என்பது அவளுக்கு தெரியாது. கொஞ்ச நாள் சொல்லாமல் இருந்தோம். பின்னர் லேசாக கேன்சர் செல்கள் இருக்கிறது. டிரீட்மெண்ட் செய்தால் சரியாகி விடும் என்று சொல்லி இருந்தோம். ஆனால் 4th ஸ்டேஜ்ல தான் எங்களுக்கு தெரியவே வந்தது. தொடர்ச்சியாக ட்ரீட்மெண்ட் நடந்து கொண்டிருந்தது. நியூ இயர் ஒன்றாகத்தான் கொண்டாடினோம். அப்போது கூட சீக்கிரமாக ட்ரீட்மெண்ட் முடிச்சுட்டு வா கோட்ல பாடணும் நீ.. அப்படீன்னு சொன்னேன்.
யுவன் என்னை கூப்பிடவே மாட்றான்
அதற்கு அவள், ஆமாம் பிரபு.. நீ தான் கூப்பிடுற.. யுவன் என்னை கூப்பிடவே மாட்றான்னு கலாட்டா செய்தாள்.. ரெடியாகிட்டு வந்துடுறேன் என்றாள்.. நாங்கள் கோட் படத்திற்கு பெங்களூரில் கம்போசிங் செய்து கொண்டிருந்தோம். அன்றைக்குத்தான் சின்ன சின்ன கண்கள் சிரிக்கின்றதே பாடல் கம்போசிங் முடிந்து அடுத்த பாடல் கம்போசிங் போய் கொண்டிருந்தது. என் சகோதரி வாசுகி போன் பண்ணி பவதாரணி இறந்து விட்டதை சொன்னாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்கு இரண்டு நாள் முன்பு கூட நான் பவதாரணியிடம் பேசினேன். அவள் சிலோனில் இருந்து இந்தியாவிற்கு வர வேண்டும் என்றாள்.
நாங்கள் பிளைட் டிக்கெட் போடுவது குறித்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அடுத்த இரண்டு நாளில் ராஜாப்பா ஷோ இலங்கையில் இருந்தது. அதனால் அப்பாவை பார்த்து விட்டு வர்றேன் என்றாள். முதல் நாள் இரவு ராஜாபாவை பார்த்துவிட்டு அவரோடு டின்னர் சாப்பிட்டு இருக்கா. அடுத்த நாள் சாயந்திரம் அவள் திடீர்ன்னு இறந்து விட்டாள். நான் யுவனிடம் சொன்னேன். அவன் உடைந்து விட்டான். உடனடியாக நாங்கள் இலங்கை போனோம். ஜனவரி 26 என்பதால் எம்பசி லீவ். இத தாண்டி நாங்கள் NOC வாங்கி பவதாரணி பாடியை எடுத்து வந்தோம். பயங்கரமான மன உளைச்சலான நேரம் அது. அவ எங்கள விட ரொம்ப சின்னவ.. அத ஏத்துக்கவே முடில.
பவதாரணிக்கு குடுக்குற ட்ரிபியூட்ல விஜய் சார்
நான் யுவன்கிட்ட நாம அன்னைக்கு யோசிச்சோம். இப்ப ரகுமான் சார் ஷாகுல் ஹமீது வாய்ஸ்ல AI மூலமா பாட்டு பண்ணிருக்கார். நாம ஏன் பவதா வோட வாய்ஸ்ல பாட கூடாதுன்னு கேட்டேன். உடனே யுவன் ரகுமான் சார்ட்ட பேசி அந்த டீம் கூட பேசினார். ரெக்கார்டிங் இல்லாம பாடின பவதாவோட வாய்ஸ் எல்லாம் அவங்களுக்கு அனுப்பி அத AI ல அப்லோட் பண்ணி ரெடிபண்ணாங்க. பிரியதர்ஷினின்ற ஒரு பொண்ணுதான் பாடுச்சு. அந்த வாய்ஸ்தா AI ல கண்வெர்ட் பண்னோம். விஜய் சார் இந்த சாங்க கேட்டுட்டு.. இந்த சாங் நா பாடவான்னு கேட்டார். அதுவே எனக்கு சந்தோசமா இருந்துச்சு. நாங்க பவதாக்கு குடுக்குற ட்ரிபியூட்ல விஜய் சார் பாடுனது லைப் லாங் எங்களால மறக்கவே முடியாது.
யுவனால பேசவே முடில..
அந்த குரலை முதல் தடவ கேட்டதும் பயங்கரமா அழுதுட்டோம். நெஞ்செல்லாம் அடச்சுடுச்சு.. பவதா வாய்ஸ் அப்படியே இருந்தது. யுவனால பேசவே முடில.. அது என்ன சொல்றது.. அது மிகப்பெரிய லாஸ் எங்க பேமிலிக்கு.. அவ குரல கேட்குறப்போ அவளோட ப்ரெண்ட்ஸ், சக சிங்கர்ஸ் எல்லாருக்கும் கஷ்டமா இருந்தது. நிறைய பேர் போன் பண்ணாங்க.. அந்த லிரிக்ஸ் வீடியோ கேட்டீங்கனா அவ பாடுறப்ப மட்டும் ஒரு ப்ளூ கலர் பட்டாம் பூச்சி வரும். அவ பாடுறமாதிரி இருக்குற மாதிரியே நாங்க பண்ணிருந்தோம். பவதா வோட குளோஸ் பிரெண்ட் அஞ்சனா. அந்த பொண்ணு எனக்கு போன் பண்ணி ரெகுலரா அந்த ப்ளூ கலர் பட்டாம் பூச்சிய நா பாக்குறே.. அத பவதான்னு தான் நினைச்சுக்கிட்டு இருந்தே. இப்ப அந்த பாட்டுலயே எப்படி கரெக்டா ப்ளூவே வச்சிங்க நீங்கன்னு கேட்டுச்சு..அதுக்கு நம்ம கூட தான் இருக்கா.. அவ எங்க போக போறான்னு சொன்னேன்" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
தொடர்புடையை செய்திகள்