ஹனி ஆம்லா : பெண்கள் இதை தினமும் ஒரு ஸ்பூன் கட்டாயம் சாப்பிட வேண்டும்! ஆரோக்கியத்தை அள்ளித்தரும்!
Oct 13, 2024, 11:31 AM IST
ஹனி ஆம்லாவை நீங்கள் வீட்டிலே எளிதாக செய்யலாம். பெண்கள் இதை தினமும் ஒரு ஸ்பூன் கட்டாயம் சாப்பிட வேண்டும் ஏன் என்றும், அது ஆரோக்கியத்தை அள்ளித்தருகிறா என்பதை கீழே படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
தினம் ஒரு நெல்லிக்காயை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்திக்கொண்டே இருக்கிறார்கள். ஏனெனில் அதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. நெல்லிக்காயில் உள்ள நன்மைகள் நமது முழு உடலின் ஆரோக்கியத்துக்கும் காரணமாகிறது. எனவே நீங்கள் தினம் ஒரு நெல்லிக்காயை கட்டாயம் சேர்த்துக்கொள்ளவேண்டும். நெல்லிக்காயை அப்படியே சாப்பிட்டால் அது துவர்க்கும். சிலருக்குப் பிடிக்காது. அதை நீங்கள் எண்ணற்ற வழிகளில் சாப்பிடலாம். இங்கு தேன் நெல்லி செய்வது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது. இதை செய்து நீங்கள் வைத்துக்கொண்டு சாப்பிடலாம். இதை தினமும் செய்யத் தேவையில்லை. 15 நாட்கள் வரை வெளியில் வைத்தாலும் கெடாத இந்த தேன் நெல்லியை நீங்கள் வீட்டிலேயே செய்வதும் எளிது. அது எப்படி என்று தெரிந்துகொண்டு சாப்பிட்டு பலன்பெறுங்கள்.
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் – 10
வெல்லம் – அரை கப்
ஏலக்காய் – 2 (பொடித்தது)
(ஏலக்காயை பொடியாக்கி அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து பொடித்துக்கொள்ளவேண்டும்)
செய்முறை
நெல்லிக்காயை கழுவி சுத்தம் செய்து இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைத்துக்கொள்ளவேண்டும். அதை எடுத்து விதைகளை நீக்கிவிட்டு நெல்லிக்காயை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு கடாயில் வெல்லத்தை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றவேண்டும். வெல்லம் கரைந்தவுடன், அதில் வேகவைத்த நெல்லிக்காய்களை சேர்த்து நன்றாக கிளறவேண்டும். அது கெட்டியானவுடன் இறக்கிகொள்ளவேண்டும்.
ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து 15 நாட்கள் வரை வைத்துக்கொள்ளலாம். இதை தினமும் ஒரு ஸ்பூன் எடுத்து பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சாப்பிடவேண்டும். பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டும். முடி உதிர்தல் உள்ளிட்ட எண்ணற்ற கோளாறுகளுக்கு தீர்வு கிடைக்கும்.
நெல்லிக்காயில் உள்ள நன்மைகள்
நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் ஏ சத்து, கண் பார்வைத்திறன் மேம்பட உதவுகிறது. நெல்லிச்சாறை வழக்கமாக எடுத்துக்கொள்வது உங்கள் கண் ஆரோக்கியத்துக்கும், கண்ணில் நோய்கள் வராமலும் பாதுகாக்கிறது.
இதில் உள்ள அடாப்டோஜெனிக் உட்பொருள், மனஅழுத்ததை குறைக்க உதவுகிறது. மனத்தெளிவை அதிகரிக்கிறது. உடல் மற்றும் உணர்வு ரீதியிலான அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. நெல்லிக்காய் உங்கள் தலைமுடி ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
தலைமுடியை வலுவாக்குகிறது. தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்துகிறது. உங்கள் தலைமுடியின் ஒட்டுமொத்த தரத்தை மேம்படுத்துகிறது. உடலில் கொலொஜென் உற்பத்தியை அதிகரித்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உங்கள் சருமத்தை யூவி கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது. ஆரோக்கியமான பளபளப்பான சருமத்தை கொடுக்கிறது.
உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்க விரும்பினால், அதற்கு நெல்லிக்காய் சாறு சிறந்த தேர்வு. காலையில் இதை பருகுவது உங்கள் உடலுக்கு நன்மையளிக்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, உங்கள் சருமத்தை பொலிவாக்குகிறது.
உடலில் சத்தை அதிகரிக்கிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. நெல்லிக்காய், உடலில் கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதய நோய்கள் வரும் ஆபத்தை குறைக்கிறது.
இதில் அதிகம் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் பாலிஃபினால்கள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்களுக்குத்தான் நன்றியுரைக்க வேண்டும். சர்க்கரை நோயாளிக்கு வரப்பிரசாதமாக இந்த நெல்லிக்காய் உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
நெல்லிக்காயில் வைட்டமின்களும், மினரல்களும் அதிகம் உள்ளதால், வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச்சாறு பருகுவதால், உடல் வளர்சிதை மாற்றத்துக்கு உதவுகிறது. அது உடல் எடையை பராமரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
வாயுவை கட்டுப்படுத்தும் திரவங்களை சுரந்து நெல்லிக்காய், செரிமானத்துக்கு உதவுகிறது. உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. அது செரிமானம், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்றவற்றை தடுக்கிறது.
வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. காலையில் தினமும் நெல்லிக்காய் சாறு பருவதால், உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கிறது. அது தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.