தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Hair Remedies: ட்ரை ஹேரை வீட்டில் இருந்தே சரி செய்யலாம்! சூப்பர் டிப்ஸ் இதோ!

Hair Remedies: ட்ரை ஹேரை வீட்டில் இருந்தே சரி செய்யலாம்! சூப்பர் டிப்ஸ் இதோ!

Suguna Devi P HT Tamil

Sep 22, 2024, 11:32 AM IST

google News
Hair Remedies: அதிகப்படியான தூசி, வெயில் ஆகிய காரணங்களால் தலைமுடி மிகவும் வறண்டு போகிறது. இதனை சரி செய்ய பல ப்யூட்டி பார்லர்களில் பல விதமான சிகிச்சைகள் அழிக்கப்படுகிறது. இந்த சிகிச்சைகளுக்கு அதிக செலவு ஆகிறது.
Hair Remedies: அதிகப்படியான தூசி, வெயில் ஆகிய காரணங்களால் தலைமுடி மிகவும் வறண்டு போகிறது. இதனை சரி செய்ய பல ப்யூட்டி பார்லர்களில் பல விதமான சிகிச்சைகள் அழிக்கப்படுகிறது. இந்த சிகிச்சைகளுக்கு அதிக செலவு ஆகிறது.

Hair Remedies: அதிகப்படியான தூசி, வெயில் ஆகிய காரணங்களால் தலைமுடி மிகவும் வறண்டு போகிறது. இதனை சரி செய்ய பல ப்யூட்டி பார்லர்களில் பல விதமான சிகிச்சைகள் அழிக்கப்படுகிறது. இந்த சிகிச்சைகளுக்கு அதிக செலவு ஆகிறது.

காற்று மாசு, வாகன புகை, அதிகபடியான சூரிய கதிர்கள் ஆகியவை நமது உடலை வெகுவாக பாதிக்கின்றன. இவைகளில் இருந்து நமது உடலை பாதுகாப்பது முக்கியமான ஒன்றாகும். இருப்பினும் வெளியே செல்லாமல் நம்மால் இருக்க முடியாது. அதிகப்படியான தூசி, வெயில் ஆகிய காரணங்களால் தலைமுடி மிகவும் வறண்டு போகிறது. இதனை சரி செய்ய பல ப்யூடி பார்லர்களில் பல விதமான சிகிச்சைகள் அழிக்கப்படுகிறது. இந்த சிகிச்சைகளுக்கு அதிக செலவு ஆகிறது. இது போன்ற அதிகப்படியான செலவுகளில் இருந்து நம் முடியை எளிமையாக பாதுகாக்கலாம். நமது வீட்டில் இருந்தே ப்யூட்டி பார்லர்களில் செய்வது போல சிகிச்சை அளிக்கலாம். 

இயற்கையே தீர்வு 

பெரும்பாலும் கெமிக்கல் அதிகம் உள்ள ஷாம்புகளை  பயன்படுத்துவதாலேயே தலைமுடி மிகவும் வறண்டு போகின்றன. இவைகளில் இருந்து தப்பிக்க கெமிக்கல் குறைவாக உள்ள ஷாம்புகளை தேர்ந்தெடுத்து உபயோகப்படுத்த வேண்டும். மேலும் வீட்டிலேயே சீகைக்காய், செம்பருத்தி, அரக்கு, ஆகியவைகளை அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்கலாம். இதன் வழியாக முடியின் ஈரப்பதம்  பாதுகாக்கபபடும். வெள்ளை முடிகளுக்கு மாற்றாக டை  பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக மருதாணி இலை பொடி, அவுரி இலை பொடி, நெல்லிக்காய் பொடி ஆகியவற்றை பயன்படுத்தலாம். 

செயற்கையான டை பயன்படுத்தும் போது முடியின் மென்மைத்தன்மை குறைகிறது. சில கெமிக்கல் டைகாளால் பல வித வீரியமான பிரச்சனைகள் ஏற்படலாம். முடி வளர்ச்சிக்கு வாரம் இரு முறை முட்டையின் வெள்ளை கருவை தலையில் தேய்த்து ஊற வைத்து குளிக்க வேண்டும். இதை போல வாரம் ஒரு முறை வெந்தயம், சின்ன வெங்காயாம் ஆகியவற்றையும் தேய்த்து குளிக்கலாம். 

வீட்டில் இருந்தே கேரட்டின் ட்ரீட்மெண்ட் 

வறண்டு போன தலை முடி பிரச்சனை உள்ளவர்கள் இந்த கேரத்தின் ட்ரீட்மெண்டை செய்து பார்க்கலாம்.முதலில் தலைமுடிக்கு ஹீட் மசாஜ் கொடுக்க வேண்டும். அதற்கு தண்ணீரை கொதிக்க வைத்து, அதனுள் ஒரு டவலை போட்டு அதனை வைத்து தலை முடியை கட்டி விட வேண்டும். அதன் சூடு குறையவும், மீண்டும் சுடு தண்ணீரில் போட்டு செய்ய வேண்டும். இது முடிந்த பின், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், வைத்தமி ஈ கேப்சூல் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, வேறு பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கி அந்த தண்ணீர் மேல் இந்த பாத்திரத்தை வைக்க வேண்டும். 

இவ்வாறு சூடாக்கிய எண்ணெய் காலவையை வைத்து தலையின் அனைத்து வேர் பகுதிகளிலும் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். முதலில் ஒரு மிக்ஸியில் ஒரு கனிந்த வாழைப்பழம், சோறு சிறிதளவு, ஒரு முட்டை, இரண்டு வைட்டமின் ஈ கேப்சூல், சிறிதளவு ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை போட்டு அரைத்து தலையின் வேற பகுதிகளில் இருந்து நுனி வரை நன்கு பூச வேண்டும். இதனை முடியின் அனைத்து பகுதிகளும் பூசி விட்டு 2 மணி நேரங்கள் காய விட வேண்டும். பின்னர் மைல்ட் ஆன ஷாம்பூவால் குளித்து தலையை காய விட வேண்டும். சாஃப்ட் ஆன சில்கி ஆன கூந்தலை வீட்டில் இருந்தே பெறலாம்.  

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி