Protein Snacks: காலை நேரத்துக்கு சிறந்தது..முட்டையை காட்டிலும் அதிக புரதம் நிறைந்த சைவ ஸ்நாக்ஸ்கள் இவைதான்!ட்ரை பண்ணுங்க-7 best vegetarian snacks that have more protein than eggs - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Protein Snacks: காலை நேரத்துக்கு சிறந்தது..முட்டையை காட்டிலும் அதிக புரதம் நிறைந்த சைவ ஸ்நாக்ஸ்கள் இவைதான்!ட்ரை பண்ணுங்க

Protein Snacks: காலை நேரத்துக்கு சிறந்தது..முட்டையை காட்டிலும் அதிக புரதம் நிறைந்த சைவ ஸ்நாக்ஸ்கள் இவைதான்!ட்ரை பண்ணுங்க

Sep 20, 2024 09:25 AM IST Muthu Vinayagam Kosalairaman
Sep 20, 2024 09:25 AM , IST

Protein Rich Vegetarian Snacks: புரதச்சத்துக்கான சிறந்த ஆதாரமாக முட்டை இருந்தாலும், அவற்றுக்கு இணையான அளவில் புரதத்ததுடன் பிற ஊட்டச்சத்துகளையும் கொண்டிருக்கும் சைவ சிற்றுண்டிகள் பற்றி பார்க்கலாம்

முட்டை புரதச்சத்துகளின் சிறந்த ஆதாரமாக கருதப்படுகிறது. ஆனால் பலர் முட்டையை சாப்பிட விரும்புவதில்லை, அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் புரதச்சத்து குறைபாட்டை சுவையும்,  புரதச்சத்து நிறைந்த இந்த சைவ சிற்றுண்டிகளை சாப்பிட்டு போக்கலாம்

(1 / 7)

முட்டை புரதச்சத்துகளின் சிறந்த ஆதாரமாக கருதப்படுகிறது. ஆனால் பலர் முட்டையை சாப்பிட விரும்புவதில்லை, அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் புரதச்சத்து குறைபாட்டை சுவையும்,  புரதச்சத்து நிறைந்த இந்த சைவ சிற்றுண்டிகளை சாப்பிட்டு போக்கலாம்(pixabay)

கொண்டைக்கடலை தின்பண்டங்கள்:வறுத்த கொண்டைக்கடலை மிகவும் பிரபலமான ஆரோக்கியமான தின்பண்டங்களில் ஒன்றாக உள்ளது. இதில் புரதம் நிறைந்துள்ளது. நூறு கிராம் வறுத்த கொண்டைக்கடலையில் 19 கிராம் புரதம் உள்ளது. இதன் காரணமாக இந்த எண்ணெய் இல்லாத சிற்றுண்டி புரத தேவையை பூர்த்தி செய்வதில் மிகவும் பிரபலமானதாக உள்ளது

(2 / 7)

கொண்டைக்கடலை தின்பண்டங்கள்:வறுத்த கொண்டைக்கடலை மிகவும் பிரபலமான ஆரோக்கியமான தின்பண்டங்களில் ஒன்றாக உள்ளது. இதில் புரதம் நிறைந்துள்ளது. நூறு கிராம் வறுத்த கொண்டைக்கடலையில் 19 கிராம் புரதம் உள்ளது. இதன் காரணமாக இந்த எண்ணெய் இல்லாத சிற்றுண்டி புரத தேவையை பூர்த்தி செய்வதில் மிகவும் பிரபலமானதாக உள்ளது(pixabay)

சோயாபீன்ஸ் சாட்கள்:சோயாபீன்ஸ் புரதத்தின் வளமான ஆதாரமாக கருதப்படுகிறது. சோயாபீன்ஸ்களிலிருந்து தயாரிக்கப்படும் சாட் ஆரோக்கியமான மற்றும் புரதச்சத்து நிறைந்த சிற்றுண்டியாக இருக்கிறது. நூறு கிராம் சோயாபீன்ஸில் சுமார் 18 கிராம் புரதம் உள்ளது

(3 / 7)

சோயாபீன்ஸ் சாட்கள்:சோயாபீன்ஸ் புரதத்தின் வளமான ஆதாரமாக கருதப்படுகிறது. சோயாபீன்ஸ்களிலிருந்து தயாரிக்கப்படும் சாட் ஆரோக்கியமான மற்றும் புரதச்சத்து நிறைந்த சிற்றுண்டியாக இருக்கிறது. நூறு கிராம் சோயாபீன்ஸில் சுமார் 18 கிராம் புரதம் உள்ளது(pixabay)

முளைகட்டிய பயறுகள்: கொண்டக்கடலை, பாசிப்பயறு முளைகட்டிய பின் சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. இவை புரதச்சத்து நிறைந்தவை. சுமார் 100 கிராம் முளைப்பயறுகளில்  13 கிராம் புரதம் உள்ளது

(4 / 7)

முளைகட்டிய பயறுகள்: கொண்டக்கடலை, பாசிப்பயறு முளைகட்டிய பின் சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. இவை புரதச்சத்து நிறைந்தவை. சுமார் 100 கிராம் முளைப்பயறுகளில்  13 கிராம் புரதம் உள்ளது(pixabay)

வேர்க்கடலை சாட் வகைகள்: வேர்க்கடலையை வறுத்து அல்லது வேகவைத்து  சிற்றுண்டியாக சாப்பிடுவது மிகவும் பொதுவான விஷயமாக உள்ளது. 100 கிராம் வேர்க்கடலையில் 25 கிராம் புரதம் உள்ளது. வேர்க்கடலையில் இருந்து தயாரிக்கப்படும் சாட் வகைகள் ஆரோக்கியமானது மற்றும் சுவையானது

(5 / 7)

வேர்க்கடலை சாட் வகைகள்: வேர்க்கடலையை வறுத்து அல்லது வேகவைத்து  சிற்றுண்டியாக சாப்பிடுவது மிகவும் பொதுவான விஷயமாக உள்ளது. 100 கிராம் வேர்க்கடலையில் 25 கிராம் புரதம் உள்ளது. வேர்க்கடலையில் இருந்து தயாரிக்கப்படும் சாட் வகைகள் ஆரோக்கியமானது மற்றும் சுவையானது(shutterstock)

சீஸ்: புரதம் மற்றும் கால்சியத்தின் நல்ல ஆதாரமாக சீஸ் கருதப்படுகிறது. தின்பண்டங்களைப் பற்றி பேசுகையில், பன்னீர் டிக்கா சிறந்த மற்றும் சுவையான புரோட்டீன் ஸ்நாக் ஆகும். 100 கிராம் பனீரில் 18 கிராம் புரதம் உள்ளது. எனவே இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க பனீர், சீஸ் வகை ஸ்நாக்ஸ்கள், தின்பண்டங்கள், சிற்றுண்டிகள் சிறந்த வழியாக உள்ளது 

(6 / 7)

சீஸ்: புரதம் மற்றும் கால்சியத்தின் நல்ல ஆதாரமாக சீஸ் கருதப்படுகிறது. தின்பண்டங்களைப் பற்றி பேசுகையில், பன்னீர் டிக்கா சிறந்த மற்றும் சுவையான புரோட்டீன் ஸ்நாக் ஆகும். 100 கிராம் பனீரில் 18 கிராம் புரதம் உள்ளது. எனவே இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க பனீர், சீஸ் வகை ஸ்நாக்ஸ்கள், தின்பண்டங்கள், சிற்றுண்டிகள் சிறந்த வழியாக உள்ளது (pixabay)

மக்கானா: மக்கானாவை தமிழில் தாமரை விதை என்று அழைக்கிறோம். இது லேசாகவும், மொறுமொறுப்பாக இருப்பதுடன், ஜீரணிக்க எளிதானதாக உள்ளது. ஊட்டச்சத்து அடிப்படையில் இது நல்லது. இதில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் உள்ளன. மேலும், 100 கிராம் மக்கானாவில் சுமார் 9 கிராம் புரதம் உள்ளது

(7 / 7)

மக்கானா: மக்கானாவை தமிழில் தாமரை விதை என்று அழைக்கிறோம். இது லேசாகவும், மொறுமொறுப்பாக இருப்பதுடன், ஜீரணிக்க எளிதானதாக உள்ளது. ஊட்டச்சத்து அடிப்படையில் இது நல்லது. இதில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் உள்ளன. மேலும், 100 கிராம் மக்கானாவில் சுமார் 9 கிராம் புரதம் உள்ளது(pixabay)

மற்ற கேலரிக்கள்