Neck : கழுத்து வலி உயிர் போகுதா.. கம்ப்யூட்டர் முன் உட்காரவே பயமா இருக்கா.. இந்த மசாஜ்களை செய்து பாருங்க!
Neck Pain : கழுத்தில் ஆரம்பிக்கும் வலியானது தோள்பட்டை வரை வலி சீராக படர்கிறது. சிலருக்கு தோள் பட்டை தாண்டி விரல்கள் வரையும் வலி பரவுகிறது. மற்றும் சில நேரங்களில் தலைவலியும் சேர்ந்து கொள்வதுடன் சிலருக்கு தலை சுற்றல் கிறுகிறுப்பு போன்ற பிரச்சினைகளுக்கும் காரணமாக இருக்கலாம்.

Neck Pain : இப்போது பலருக்கும் கழுத்தில் வலி மற்றும் கழுத்து தசைகள் விறைப்பு உணர்வு நாளுக்கு நாள் பொதுவான ஒரு உடல்நலப் பிரச்சினையாகமாறி வருகிறது. உண்மையில் மொபைல், கம்ப்யூட்டர், லேப்டாப்பில் மணிக்கணக்கில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு கழுத்து நரம்புகளில் விறைப்புடன் கூடிய பிடிப்பு ஏற்படுகிறது. இந்த பிரச்சனையை நீண்ட நாட்களாக அலட்சியப்படுத்தினால் கழுத்து எலும்பு தேய்மானம் கழுத்து பகுதியில் உள்ள நரம்புகளில் பிரச்சினை வீக்கம், வலி போன்ற பிரச்சினைகள் வரக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. இதன் காரணமாக கழுத்தில் ஆரம்பிக்கும் வலியானது தோள்பட்டை வரை வலி சீராக படர்கிறது. சிலருக்கு தோள் பட்டை தாண்டி விரல்கள் வரையும் வலி பரவுகிறது. மற்றும் சில நேரங்களில் தலைவலியும் சேர்ந்து கொள்வதுடன் சிலருக்கு தலை சுற்றல் கிறுகிறுப்பு போன்ற பிரச்சினைகளுக்கும் காரணமான இருக்கலாம். சிலருக்கு தோள் பட்டையை உயர்த்த முடியாத அளவுக்கு கூட பாதிப்புகளை உருவாக்கிறது. முறையான தொடர் உடற்பயிற்சி மற்றும் மசாஜ் மட்டுமே இந்த சிக்கலை சமாளிக்க மட்டுமே உதவும்.
கழுத்து வலி மற்றும் விறைப்பை போக்க இந்த 3 மசாஜ்களை செய்யுங்கள்
மசாஜ் 1
வேலை பார்க்கும் போது கழுத்து தொடர்ந்து ஒரே நிலையில் குனிந்த படியே இருப்பதால், தசைகளில் அழுத்தம் குவிந்து, வலி உள்ள இடத்தில் ஒரு கட்டியாக உணரத் தொடங்குகிறது. எனவே இந்த முடிச்சுகளை விடுவிக்க வேண்டியது அவசியம். அதனால் விறைப்பு நீங்கும். முதலில், கட்டைவிரலின் உதவியுடன், வலி ஏற்படும் புள்ளியை லேசாக அழுத்தவும். சுமார் பத்து பதினைந்து முறை அழுத்திய பின் விடவும்.
மசாஜ் 2
இதற்குப் பிறகு, கழுத்து மற்றும் முதுகின் தொடக்கத்தில் இரண்டு கைகளின் கட்டைவிரல்களை சரியாக நடுவில் வைத்து, சிறிது அழுத்தம் கொடுத்து இரு தோள்களையும் நோக்கி மசாஜ் செய்யவும். இப்படி சுமார் பத்து முதல் இருபது முறை மசாஜ் செய்யவும்.