தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  தீபாவளிக்கு இட்லியோடு சேர்த்து சாப்பிட சூப்பரான மட்டன் கெட்டிக் குழம்பு ரெசிபி இதோ!

தீபாவளிக்கு இட்லியோடு சேர்த்து சாப்பிட சூப்பரான மட்டன் கெட்டிக் குழம்பு ரெசிபி இதோ!

Priyadarshini R HT Tamil

Oct 29, 2024, 06:55 PM IST

google News
தீபாவளிக்கு இட்லியோடு சேர்த்து சாப்பிட சூப்பரான மட்டன் கெட்டிக் குழம்பு ரெசிபி இதோ, இதைச் செய்தால் கொண்டாட்டங்கள் கூடுதல் குதூகலமாகும்.
தீபாவளிக்கு இட்லியோடு சேர்த்து சாப்பிட சூப்பரான மட்டன் கெட்டிக் குழம்பு ரெசிபி இதோ, இதைச் செய்தால் கொண்டாட்டங்கள் கூடுதல் குதூகலமாகும்.

தீபாவளிக்கு இட்லியோடு சேர்த்து சாப்பிட சூப்பரான மட்டன் கெட்டிக் குழம்பு ரெசிபி இதோ, இதைச் செய்தால் கொண்டாட்டங்கள் கூடுதல் குதூகலமாகும்.

தீபாவளிக்கு தயாராகிவிட்டீர்களா? புத்தாடை, பட்டாசெல்லாம் வாங்கியாச்சா? இனி என்ன பலகாரம் செய்யவேண்டும் என்ற குழப்பத்தில் உள்ளீர்களா? புதிதாக என்ன செய்யலாம்? வித்யாசமாக என்ன செய்யலாம்? ஆரோக்கியமாக என்ன செய்யலாம்? அத்தனை யூடியூப் சானல்கள், ரீல்ஸ்களிலும், நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று எண்ணற்ற ரெசிபிக்கள் கொட்டிக்கிடக்கிறது. இத்தனைக்கும் மத்தியில்தான் என்ன செய்யலாம் என்று குழம்பியிருக்கிறீர்களா? அதற்கும் ரெசிபிக்களை கொடுத்துக்கொண்டேயிருக்கும் அதேவேளையில் தீபாவளி நாளன்று காலையில் இட்லியுடன் சேர்த்து சாப்பிட ஒரு மட்டன் கெட்டிக் குழம்பு ரெசிபியையும் தருகிறோம். செய்து, சாப்பிட்டு, தீபாவளியைன் கொண்டாடி மகிழங்கள்.

மட்டன் கெட்டிக் குழம்பு செய்வது எப்படி?

மீடியம் அளவு துண்டுகளாக்கிய முக்கால் கிலோ மட்டனை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவேண்டும். 20 சின்ன வெங்காயத்தை முழுதாக உரித்து வைத்துக்கொள்ளவேண்டும். 15 சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கத்துக்கொள்ளவேண்டும். இஞ்சி-பூண்டு விழுது ஒரு ஸ்பூன் தனியாக அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

மசாலா அரைக்க தேவையான பொருட்கள்

ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேரத்து சூடாக்கி, அதில் வரமல்லி 50 கிராம் சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பின்னர், 2 ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்ழுன் சீரகம், ஒன்றரை ஸ்பூன் சோம்பு, 15 வர மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவேண்டும். அதனுடன், பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் ஒரு டேபிள் ஸ்பூன் வதக்கவேண்டும். ஆறிய பின்னர் அதை மிக்ஸியில் போட்டு கரகரப்பான பவுடராக அரைத்து, மிக்ஸியிலேயே வைத்துக்கொள்ளவேண்டும்.

கடாயில் எண்ணெய் 2 ஸ்பூன் சேர்துது, அதில் பட்டை 1, கிராம்பு 4, அன்னாசி பூ 1, பொரியவிட்டு, பின்னர், பூண்டு பற்கள் 12, பொடியாக நறுக்கிய இஞ்சி ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

பின்னர் நான்காக நறுக்கிய 2 பெரிய தக்காளி சேர்த்து அதையும் வதக்கவேண்டும். தக்காளி சேர்த்ததும் அது குழையும் அளவு நீண்ட நேரம் வதக்கத் தேவையில்லை, சிலநிமிடங்கள் வதக்கினாலே போதும் இதை அப்படியே மிக்ஸியில் அரைத்த பவுடரோடு இதையும் சேர்த்து பேஸ்ட் போல குழைவாக அரைத்துக்கொள்ளவேண்டும். தண்ணீர் சேரக்கத் தேவையில்லை.

மட்டன் கெட்டிக் குழம்பு செய்வது எப்படி?

அடுப்பில் அகலமான பாத்திரத்தை வைத்து, அதில் 3 ஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானவுடன், ஏலக்காய் 1, கிராம்பு 2, பட்டை 1, பிரியாணி இலை 1, நான்காக நறுக்கிய பச்சை மிளகாய் 3, சோம்பு அரை ஸ்பூன், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் 15 எல்லாம் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். இதில் கறிவேப்பிலைகள் போட்டு, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி, மட்டன் துண்டுகளை சேர்த்து வதக்கி, பின்னர், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்தது நன்றாக கலந்துவிடவேண்டும். பச்சை வாசம் போனவுடன் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக கிளறிவிடவேண்டும்.

இதில் சிறிது மல்லித்தழைகள், தேவையான உப்பு சேர்த்து கிளறவும். ஏற்கனவே வறுத்த மசாலா என்பதால் நீண்ட நேரம் கிளறவேண்டாம். கறியில் மசாலா கலக்கும் வரை வதக்கி 6 கப் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவேண்டும். (மசாலா அரைத்த ஜாரைக் கழுவி அந்த நீரையும் சேர்க்கலாம்) இதை நன்றாக கலந்துவிட்டு, உப்பு, காரம் சரி பார்த்து, பாத்திரத்தை மூடி போட்டு மூடி 30 நிமிடங்கள் நன்றாக வேகவிடவேண்டும்.

30 நிமிடங்களுக்கு பின்னர் மூடியை திறந்து ஒருமுறை கிளறிவிட்டு, அடுப்பில் இருந்து இறக்கி மல்லித்தழைகள் தூவிவிடவேண்டும். சூப்பரான சுவையில், மட்டன் கெட்டிக் குழம்பு தயார்.

இதை சாதம், இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம், பூரி, பரோட்டா, சப்பாத்தி அனைத்திற்கும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். தேங்காய் சாதம், தேங்காய்ப்பால் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

நன்றி – வெங்கடேஷ் ஆறுமுகம், ஷ்யாம் ப்ரேம்.

இதுபோன்ற எண்ணற்ற ரெசிபிக்கள், ஆரோக்கிய குறிப்புகள் மற்றும் தகவல்களை ஹெச்.டி தமிழ் உங்களுக்காக தொகுத்து வழங்கி வருகிறது. எனவே அரிய பல தகவல்கள் மற்றும் வித்யாசமான ரெசிபிக்களை தெரிந்துகொள்ள எங்கள் இணையப் பக்கத்துடன் இணைந்திருங்கள்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை