தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  விலை மதிப்பற்றவள் என்ற அர்த்தம் கொண்ட பெண் குழந்தைகளின் பெயர்கள் இதோ! உங்கள் தேவதைகளுக்கு சூட்டி மகிழுங்கள்!

விலை மதிப்பற்றவள் என்ற அர்த்தம் கொண்ட பெண் குழந்தைகளின் பெயர்கள் இதோ! உங்கள் தேவதைகளுக்கு சூட்டி மகிழுங்கள்!

Priyadarshini R HT Tamil

Nov 26, 2024, 06:00 AM IST

google News
உங்கள் வீட்டு தேவதைகளுக்கு ஏற்ற பெயர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
உங்கள் வீட்டு தேவதைகளுக்கு ஏற்ற பெயர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

உங்கள் வீட்டு தேவதைகளுக்கு ஏற்ற பெயர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

உங்கள் பெண் குழந்தைதான் விலைமதிப்பற்றவர். அந்த அர்த்தத்தையே தரும் பெயர்களை உங்கள் குழந்தைகளுக்கு வைத்தால், அவர்களின் வாழ்வும் வளமாகும். அவர்களின் வெற்றிக்கும், வாழ்வில் முன்னேறவும் உதவும். விலைமதிப்பற்றவள் என்றால், அவர் உங்கள் வாழ்வில் சிறந்தவர் என்று பொருள். நீங்கள் நல்ல பெண் குழந்தைகளின் பெயர்களை இங்கிருந்து தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். எனவே உங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

அன்விகா

இந்தப்பெயர் மிகவும் மார்டனாகவும் இருக்கும். இதற்கு விலை மதிப்பற்ற என்று பொருள். இந்தப்பெயருக்கு சக்திவாய்ந்த என்ற மற்றொரு அர்த்தமும் உள்ளது. இந்தப்பெயரை உச்சரிப்பதும் எளிது. இது மிகவும் நவீனமான பெயராகவும் இருக்கும்.

கனிகா

கனிகா என்றால் விதை அல்லது சிறிய பொருள் என்று பொருள். இது சிறிய, விலை மதிப்பற்ற பொருள் என்ற அர்த்தத்தைதரும். ஒரு சிறிய விதையால் ஒரு காட்டையே உருவாக்கமுடியும். அதுபோல் இதன் மதிப்பு அதிகம் என்பது இந்தப்பெயரின் பொருள். உங்களின் சிறிய தேவதை உங்கள் வீட்டுக்குள் மட்டற்ற மகிழ்ச்சியைக் கொண்டு வருகிறாள் என்பது இதன் அர்த்தமாகும்.

அர்ஷ்யா

அர்ஷ்யா என்பது பெர்சிய மொழியில் இருந்து உருவான பெயர். இந்த பெயருக்கு தெய்வீகமான என்று பொருள். இந்தப்பெயரை உங்கள் குழந்தைகளுக்கு வைக்கும்போது, அது அவர்களுக்கு வானில் உள்ள பொருள்களின் பெயரை வைப்பதுபோன்ற தோற்றத்தைத்தரும்.

சமிகா

சமிகா என்பது ஒறு அழகான சமஸ்கிருதப் பெயர். இதற்கு அமைதியான, விலைமதிப்பற்ற என இரு அர்த்தங்கள் உள்ளன. இது அமைதியான குணம் கொண்டவர்களுக்கும், காதல் நிறைந்தவர்களுக்கும் ஏற்ற பெயர்.

தன்விகா

தனித்தன்மையான பெயர், இதற்கு விலைமதிப்பற்ற தங்கம் என்று பொருள். இது நேர்த்தியான பெயர், இது பொருள் பொதிந்த பெயரும் ஆகும்.

டிரிஷா

டிரிஷா என்பது மிகவும் மார்டனான பெயர். இதற்கு பார்வை அல்லது பார்த்தல் என்று பொருள். இது உங்கள் சிறிய பெண் குழந்தை எத்தனை விலை மதிப்புமிக்கவர் என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. உங்கள் குழந்தைதான் உங்களின் உலகம் என்பதைக் குறிக்கும்.

மிஷிகா

மிஷிகா என்றால் க்யூட்டான மற்றும் அழகான பெயர். இதற்கு விலை மதிப்பற்ற அல்லது கடவுளிடம் இருந்து பெறப்பட்ட பரிசு என்று பொருள். உங்கள் குழந்தை உங்கள் வீட்டுக்கு கொண்டு வந்துள்ள மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டத்தைக் குறிக்கிறது.

பிரணவி

பிரணவி என்றால் தெய்வீக ஆற்றலுடன் தொடர்புடையவர் என்று பொருள். இதற்கு புனிதமான மற்றும் விலைமதிப்பற்ற என்ற அர்த்தமும் உள்ளது. இதற்கு உங்கள் குழந்தை தெய்வத்தால் ஆசிர்வதிக்கப்பட்டவர் என்ற பொருளும் உள்ளது. உங்களுக்கு வரமாக கிடைத்த மகளுக்கு ஏற்ற பெயர்.

விரித்திகா

விரித்திகா என்றால், சிந்தனை அல்லது விலைமதிப்பற்ற யோசனை என்று பொருள். இந்தப் பெயர் தனித்தன்மை மற்றும் கிரியேட்டிவான பெயர். இந்தப்பெயரை உங்கள் குழந்தைக்கு சூட்டினால் அவர் மிகுந்த புகழ் பெறுவார்.

வன்யா

வன்யா என்றால், கடவுளின் பரிசு என்று பொருள். விலைமதிப்பற்ற பரிசு என்ற பொருளும் உண்டு. இது நேர்த்தியான அழகான என்ற அர்த்தங்களையும் குறிக்கும்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி