Health Foods For Adults: நலம் வாழ! ஆரோக்கியமான வாழ்விற்கு அவசியமான உணவுகள்!
Sep 29, 2024, 01:23 PM IST
Health Foods For Adults: குழந்தைகளாக இருக்கும் போது பெற்றோரின் கவனிப்பால் நம் உடலின் ஆரோக்கியம் சீராக பாராமரிக்கப்படுகிறது. பெரியவர்களானதும் வேலை, குடும்ப பொறுப்பு போன்ற பல காரணிகளால் நமது உடல் நலத்தை கவனிப்பதில் அலட்சியம் காட்டுகிறோம்.
ஒவ்வொரு மனிதனுக்கும் உடலின் ஆரோக்கியம் என்பது உயிர் வாழ்வதற்கான அத்தியாவசிய தேவை ஆகும். உடலின் ஆரோக்கியம் சீராக இருக்கும் மட்டுமே மகிழ்ச்சியான வாழ்வு பெறுவது எளிதான ஒன்றாகும். போது குழந்தைகளாக இருக்கும் போது பெற்றோரின் கவனிப்பால் நம் உடலின் ஆரோக்கியம் சீராக பாராமரிகபடுகிறது. பெரியவர்களானதும் வேலை, குடும்ப பொறுப்பு போன்ற பல காரணிகளால் நமது உடல் நலத்தை கவனிப்பதில் அலட்சியம் காட்டுகிறோம். எனவே வளர்ந்த பின் நம் உடல் நலனை பராமரிக்க செய்ய வேண்டிய முக்கியமான உணவுகளை இங்கு காணலாம்.
நார்ச்சத்தும் புரதசத்தும்
மாவுச்சத்துள்ள கார்போஹைட்ரேட்டுகள் நீங்கள் உண்ணும் உணவில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் இருக்க வேண்டும். அவை உருளைக்கிழங்கு, ரொட்டி, அரிசி, பாஸ்தா மற்றும் தானியங்கள் ஆகியவை அடங்கும். அதிக நார்ச்சத்து மிக்க முழு கோதுமை பாஸ்தா, பழுப்பு அரிசி அல்லது உருளைக்கிழங்கு போன்ற முழுதானிய வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பழங்கள் மற்றும் காய்கறிகள்
ஒவ்வொரு நாளும் குறைந்தது 5 வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும். தினமும் பழங்களை ஜூஸ் செய்தும் குடிக்கலாம். காலை உணவிற்குப் பின் வாழைப்பழத்தை சாப்பிடலாம். ஒரு நாளைக்கு ஒரு ஜூஸ் மட்டுமே குடிக்க வேண்டும். அதில் சர்க்கரை சேர்த்து குடிப்பதை தவிர்க்கவும்.
அதிகமான மீன்
உணவில் அதிகமான புரதத்திற்காகவும், பல வைட்டமின்களுக்காகவும் அதிகமாக மீன் சாப்பிட வேண்டும். ஏனெனில் புரதத்தின் முக்கிய ஆதார உணவாக மீன் உள்ளது. மேலும் வாரத்தில் இரு நாட்களாவது மீன் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் மீன்களில் ஒமேகா-3 கொழுப்புகள் அதிகம் உள்ளன, இது இதய நோய்களைத் தடுக்க உதவும்.
தண்ணீர்
உடலில் ஏற்படும் நீர் இழப்பைத் தடுக்க தேவையான தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு நாளுக்கு 6 முதல் 8 டம்ளர் தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும். பொதுவாக நாம் உண்ணும் உணவில் இருந்தே அதிகப்படியான தண்ணீர் கிடைக்கும். கோடை காலத்திலும், உடற்பயிற்சி மேற்கொள்ளும் காலங்களிலும் அதிகமான தண்ணீர் குடிக்க வேண்டும். அடிக்கடி தாகம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.
கட்டாய காலை உணவு
சிலர் காலை உணவைத் தவிர்க்கிறார்கள், ஏனெனில் அது உடல் எடையைக் குறைக்க உதவும். ஆனால் நார்ச்சத்து அதிகம் மற்றும் கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு குறைவாக உள்ள ஆரோக்கியமான காலை உணவு சீரான உணவின் ஒரு பகுதியாகும், மேலும் நல்ல ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெற உதவும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒரு போதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்