தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  அம்மாடியோவ்! இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்ஸை ரெகுலராக சாப்பிட்டால் இவ்வளவு ஆபத்துகளா?

அம்மாடியோவ்! இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்ஸை ரெகுலராக சாப்பிட்டால் இவ்வளவு ஆபத்துகளா?

I Jayachandran HT Tamil

Mar 09, 2023, 07:59 PM IST

உடனடி நூடுல்ஸ் அல்லது ராமன் தொடர்ச்சியாக சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய உடல்நலக் கேடுகள் குறித்து இங்கு அறிந்து கொள்வோம்.
உடனடி நூடுல்ஸ் அல்லது ராமன் தொடர்ச்சியாக சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய உடல்நலக் கேடுகள் குறித்து இங்கு அறிந்து கொள்வோம்.

உடனடி நூடுல்ஸ் அல்லது ராமன் தொடர்ச்சியாக சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய உடல்நலக் கேடுகள் குறித்து இங்கு அறிந்து கொள்வோம்.

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் பெரும்பாலான உயர்நடுத்தர, நடுத்தர குடும்பங்களில் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் அன்றாட உணவுகளில் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. காரணம் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு காலை பரபரப்புக்கு இடையே சீக்கிரம் லஞ்ச் பாக்ஸ் ரெடி செய்ய வேண்டும். கணவருக்குத் தனியாக சாப்பாடு செய்ய வேண்டும். தவிர குழந்தைகள் அடம் பிடிக்காமல் சாப்பிடக்கூடிய உணவுகளில் பிரதானமாக நூடுல்ஸ்கள் மாறிவிட்டன.

ட்ரெண்டிங் செய்திகள்

Cucumber Salad : சன் ஸ்ட்ரோக்கில் இருந்து தப்பிக்க வேண்டுமா? இந்த ஒரு சாலட் மட்டும் போதும்!

Gongura Pachadi : வாயில் எச்சில் ஊறவைக்கும் சுவையில் புளிச்ச கீரை பச்சடி செய்வது எப்படி? இதோ ரெசிபி!

Hair Care : பட்டுபோல் மின்னும் நீண்ட கூந்தல் வேண்டுமா? இதோ வீட்டிலே தயாரிக்கலாம் ஷாம்பூ!

Benefits of Papad : சைட் டிஷ் அல்லது ஸ்னாக்ஸ் தான்! ஆனால் எத்தனை நன்மைகள் பாருங்கள் இந்த அப்பளத்தில்!

இந்த உடனடி நூடுல்ஸை மிதமான அளவில் உட்கொள்வதால் பெரிதாக கவலைப்படும் அளவுக்கு உடலுக்குத் தீங்கு விளைவிப்பதில்லை. இருந்தாலும் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் உங்கள் குடும்ப உணவின் வழக்கமான ஒரு பகுதியாக மாறியிருந்திருக்குமானால் அது உங்கள் குடும்பத்தாரின் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். மோசமான உடல்நலப் பாதிப்புகள் ஏற்படலாம்.

உடனடி நூடுல்ஸ் சமைப்பதற்கு வசதியாகவும் எளிதாகவும் இருக்கலாம், அவை அளவோடும், பலவிதமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உள்ளடக்கிய சீரான உணவின் ஒரு பகுதியாகவும் உட்கொள்ள வேண்டும். உடனடி நூடுல்ஸைத் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் சில பொதுவான தீமைகள் பற்றி இங்கே விவரிக்கப்பட்டுள்ளது.

குறைந்த ஊட்டச்சத்து மதிப்பு: உடனடி நூடுல்ஸில் கலோரிகள் அதிகம், ஆனால் அவை புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் குறைவாகவே உள்ளன. இவையெல்லாம் ஜீரோ கலோரி அல்லது பயன்தராத கலோரிகளாகும். இன்ஸ்டன்ட் நூடுல்ஸை தொடரந்து சாப்பிடுவது காலப்போக்கில் மோசமான உணவுப்பழக்கம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு வழிவகுத்து விடும்.

அதிக சோடியம் நிறைந்தது: உடனடி நூடுல்ஸில் பெரும்பாலும் சோடியம் அதிகமாக உள்ளது, இது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.இதயம், சிறுநீரகங்கள், பிற உறுப்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும். நாற்பது வயதைத் தாண்டியவர்கள் இதை சாப்பிட்டால் இதயம் தொடர்பான பாதிப்புகள் சொல்லிக்கொள்ளாமல் உடலுக்குள் வந்து உட்கார்ந்துவிடும். எனவே உஷார்.

ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகம்: பெரும்பாலான உடனடி நூடுல்ஸ் பாமாயில் போன்ற ஆரோக்கியமற்ற கொழுப்புகள் நிறைந்த எண்ணெய்களால் தயாரிக்கப்படுகிறது. இதுவும் உடலில் கொலஸ்ட்ரால் அளவையும் இதய நோய் அபாயத்தையும் அதிகரிக்கும்.

ப்ரிசர்வேடிவ்கள் அதிகம்: முழுவதும் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உடனடி நூடுல்ஸில் பொதுவாக ப்ரிசர்வேட்டிவ்கள் மற்றும் பிற ரசாயன சேர்க்கைகள் நிறைந்திருக்கும். இப்படிப்பட்ட நூடுல்ஸை தொடர்ந்து அதிகமாக உட்கொள்ளும் போது ஆரோக்கியத்துக்குத் தீங்கு விளைவிக்கும்.

கார்சினோஜென்ஸ் இருக்கலாம்: உடனடி நூடுல்ஸில் அக்ரிலாமைடு எனப்படும் தீங்கு விளைவிக்கும் ரசாயனம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது, இது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும். கார்சினோஜென்ஸ் என்பது அறியப்பட்ட புற்றுநோய் காரணியாகும்.

வளர்சிதை மாற்ற நோய்க்குறியுடன் தொடர்புடையது: உடனடி நூடுல்ஸை அடிக்கடி உட்கொள்வது வளர்சிதை மாற்ற நோய்க்குறி அபாயங்களை ஏற்படுத்தும். இது உயர் ரத்த அழுத்தம், உயர் ரத்த சர்க்கரை, உடல் பருமன் ஆகியவை இதில் அடங்கும். இது கடுமையான உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். சமயங்களில் உயிருக்கே உலை வைத்துவிடும்.

குழந்தைகளை நூடுல்ஸுக்குப் பழக்கப்படுத்துவதை விட இடியாப்பங்களில் இனிப்பு, காரம் சுவை நிறைந்தாக செய்து தரலாம். இடியாப்பமும் நூடுல்ஸ் போலவே இருப்பதால் அவர்களுக்கு வித்தியாசம் தெரியாது. சுவையாக செய்து தந்தால் சாப்பிடுவார்கள். தேவையில்லாமல் உடல் நல பாதிப்புகளுக்கு ஆளாக மாட்டார்கள்.

டாபிக்ஸ்