தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  வயிறு முட்ட முட்ட சாப்பிட்டு விட்டீர்களா? கடகடவென செரிக்க இதை மட்டும் செய்ங்க!

வயிறு முட்ட முட்ட சாப்பிட்டு விட்டீர்களா? கடகடவென செரிக்க இதை மட்டும் செய்ங்க!

Priyadarshini R HT Tamil

Nov 18, 2024, 10:04 AM IST

google News
வயிறு முட்ட முட்ட சாப்பிட்டு விட்டீர்கள் என்றால், நீங்கள் என்ன செய்யவேண்டும் என்ற பாருங்கள்.
வயிறு முட்ட முட்ட சாப்பிட்டு விட்டீர்கள் என்றால், நீங்கள் என்ன செய்யவேண்டும் என்ற பாருங்கள்.

வயிறு முட்ட முட்ட சாப்பிட்டு விட்டீர்கள் என்றால், நீங்கள் என்ன செய்யவேண்டும் என்ற பாருங்கள்.

நீங்கள் வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டீர்கள், வயிறு திம்மென்று உள்ளது என்றால், அதை சரிசெய்ய என்னசெய்யவேண்டும் என்று பாருங்கள். நன்றாக உணவு உண்டபின் அதை செரிக்கச் செய்வது எப்படி என்று பாருங்கள். நீங்கள் எப்போதாவது நல்ல சாப்பாட்டை வயிறு முட்ட முட்ட சாப்பிடுவது இயற்கையான ஒன்றுதான். குறிப்பாக விழாக்கள், விருந்துகளில் அப்படி சாப்பிடுவது வழக்கம். ஆனால் சிலருக்கு சாப்பிட்ட பின்னர் வயிறு உப்புசம் ஏற்படும். மேலும் அதனால் வேறு பல தொல்லைகளும் வரும். எனவே அவற்றைத்தடுக்க நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று இங்கு தெரிந்துகொள்ளுங்கள். இந்த குறிப்புகள் நீங்கள் வயிறு முட்ட சாப்பிட்ட உணவுகள் செரிக்க உதவும்.

நல்ல நடை

நீங்கள் வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு, அது உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வை ஏற்படுத்துகிறதா? எனில், அது செரிக்காமல் கஷ்டப்படுகிறீர்கள் என்றால், அப்போது மெதுவாக நடக்கலாம். இதனால் உங்கள் உடல் உணவை மெதுவாக செரிக்க வைக்க உதவுகிறது. இதனால் உங்களுக்கு வயிறு உப்புசம் போன்ற கோளாறுகள் ஏற்படாது. இது உங்களுக்கு வயிற்றில் அதிக கனமான சூழலை ஏற்படுத்தாது.

சூடான் தண்ணீர் அல்லது மூலிகை டீ

அதிகம் சாப்பிட்ட பின்னர் நீங்கள் மிதமான சூட்டில் தண்ணீர் பருகினால், அது உங்கள் செரிமான மண்டலத்துக்கு இதமளிக்கிறது. அது உங்கள் உணவை இதமாக செரிக்கவைக்க உதவுகிறது. மேலும் மூலிகை டீக்களான இஞ்சி டீ, புதினா டீ, சேமோமைல் டீ ஆகியவை உங்களின் செரிமான ஆரோக்கியத்தை அதிகரித்து, உங்களின் செரிமானத்தை மெதுவாக்குகிறது.

ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி

ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி என்பது செரிமானத்துடன் தொடர்புடையதாக இல்லாமல் இருப்பது போல் தோன்றலாம். ஆனால் இது ஆச்சர்யமளிக்கும் பல நன்மைகளைத் தரும். நீங்கள் அதிகம் சாப்பிட்டால், உடலில் கொஞ்சம் மாற்றங்கள் ஏற்படும். இது உங்கள் செரிமானத்தில் தொய்வை ஏற்படுத்தும். எனவே மெதுவாக நீங்கள் ஆழ்ந்து சுவாசிக்கும்போது, அது உங்கள் வயிற்றில் உள்ள தசைகளுக்கு ஓய்வு கொடுக்கிறது. மேலும் உங்கள் உடல் செரிமானத்தில் கவனம் செலுத்த உதவுகிறது.

சோம்பு

நீங்கள் சோம்பு மென்றால் அதுவும் உங்கள் வயிறு செரிமானம் செய்ய உதவும். இது பல்வேறு கலாச்சாரங்களில் பின்பற்றப்படுகிறது. சோம்பில் வயிறு உப்புசம், வாயு மற்றும் வயிறு வலிகளைப்போக்கும் குணங்கள் உள்ளத. இதனால் நீங்கள் கொஞ்சம் சோம்பை மெல்லலாம் அல்லது சோம்பு தேநீர் பருகலாம். இது உங்கள் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

சாப்பிட்டவுடன் படுப்பது

நீங்கள் கடுமையான உணவை சாப்பிட்டுவிட்டு, உடனே படுக்கக்கூடாது. இதனால் உங்கள் செரிமான ஆரோக்கியம் பாதிக்கப்படும். இது உங்கள் செரிமானத்தை தாமதப்படுத்தும். இதனால் உங்கள் அமில எதிர்ப்பும் ஏற்படலாம். நீங்கள் நேராக படுக்கும்போது, அமிலங்கள் மேல்நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. இதனால் உங்களுக்கு வயிற்றில் அசவுகர்யங்கள் ஏற்படலாம்.

யோகா

யோகா செய்வது உங்கள் உடலில் உள்ள உறுப்புக்கள் அனைத்துக்கும் நல்லது. அது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். எனவே நீங்கள் தினமும் காலை அல்லது மாலை வேளையில் யோகா செய்வதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். இது உங்கள் குடல் உறுப்புக்களுக்கு நல்லது. நல்ல சவுகர்யமாக அமர்ந்து, வலது கையை இடது மூட்டில் வைத்துக்கொள்ளங்கள். இடது கையை வலது மூட்டில் வைத்துக்கொள்ளுங்கள். இதை செய்யும்போது உங்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

இஞ்சி அல்லது எலுமிச்சை

இஞ்சி மற்றும் எலுமிச்சை இரண்டிலும் இயற்கை செரிமான குணங்கள் உள்ளது. இஞ்சியில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளது. இது உங்கள் வயிற்றுக்கு இதமளிக்கும். எலுமிச்சை பித்தம் உருவாக வழிவகுத்து, உங்கள் கொழுப்புக்களை எளிதாக கரைக்க உதவும். எனவே சாப்பிட்ட பின் இவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

சர்க்கரை இனிப்புகளை தவிர்க்கவேண்டும்

சாப்பிட்டவுடன் சர்க்கரை இனிப்புகளை சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் ஏற்படலாம். இது உங்கள் செரிமான ஆரோக்கியத்தை பாதிக்கும் எனவே நீங்கள் சாப்பிட்டவுடன் இனிப்புச்சுவை கொண்ட உணவுகளை சாப்பிடக்கூடாது. இது உங்கள் வயிற்றில் உணவு நீண்ட நேரம் தங்கவும், உங்களுக்கு வயிறு உப்புசம் ஏற்படவும் காரணமாகும். நீங்கள் இனிப்புக்களை கட்டாயம் எடுத்துக்கொள்ளவேண்டுமென்றால், சாப்பிட்டு முடித்த ஓரிரு மணி நேரங்கள் காத்திருந்து எடுத்துக்கொள்ளவேண்டும். உங்கள் வயிற்றுக்கு செரிக்கச் நேரம் கொடுத்து அடுத்த உணவை எடுத்துக்கொள்வது நல்லது.

மசாஜ்

உங்கள் வயிற்றுக்கு மிருதுவான மசாஜ் கொடுக்கவேண்டும். அதாவது வயிற்றைத் தடவிக்கொடுக்கவேண்டும். இது உங்கள் செரிமான ஆரோக்கியத்தைத் தூண்டும். இது உங்கள் குடலில் உள்ள இயக்கங்களை ஊக்குவிக்கும். உங்கள் வயிற்றில் கை வைத்து மிருதுவாக மசாஜ்செய்யவேண்டும். வட்டவடிவில் அல்லது மேலிருந்து கீழாக மசாஜ் செய்துகொடுக்கவேண்டும். இதனால் உங்களுக்கு வயிறு உப்புசம் மற்றும் அசவுகர்யங்கள் ஏற்படாது. உங்களின் அசவுகரயங்களைப் போக்கும்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி