பைக் ரைட்! தெறிக்கும் துப்பாக்கி! 8 வருடத்தை கடந்த அச்சம் என்பது மடமையடா! கவுதம் பகிர்ந்த ஸ்பெஷல் போட்டோ!
அச்சம் என்பது மடமையடா படம் வெளியாகி 8 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இது குறித்தான புகைப்படத்தை அப்படத்தின் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் பகிர்ந்துள்ளார்.
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அச்சம் என்பது மடமையடா, இப்படத்தில் நடிகர் சிலம்பரசன், மஞ்சிமா மோகன் மற்றும் பாபா சேகர் உட்பட பலர் நடித்து இருந்தனர். ரொமான்டிக் ஆக்சன் படமாக வெளியாகிய இந்த படம் ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பு பெற்று இருந்தது. ஏ.ஆர்.ரகுமானின் இசையில் இளைஞர்களின் மனதை கவரும் காதல் பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன. மேலும் இப்படத்தில் வரும் பைக் ரைட் காட்சிகளும் காதல் வசனங்களும் இன்றளவும் ரசிகர்களால் விரும்பப்பட்டு வருகிறது.
அச்சம் என்பது மடமையடா சந்தேகத்திற்கு இடமின்றி சிம்புவின் கேரியரில் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாகும். ரொமாண்டிக் ஆக்ஷன்-த்ரில்லர் படமாக உருவாகி வெளியான இந்த திரைப்படம் வெளியாகி இன்றோடு 8 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.
விறு விறு திரைக்கதை
கல்லூரி படித்து வரும் சிம்பு அவரது சகோதரியின் தோழியான மஞ்சிமா மோகனை காதலிக்கிறார். அவரைப் பார்த்த முதல் சந்திப்பிலேயே காதலில் விழுந்து விடுகிறார். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக தான் செல்லும் பைக் ரைடில் மஞ்சிமாவும் இணைந்து கொள்கிறார். இந்த பயணத்தின் போது துரதிஷ்டவசமாக விபத்து ஏற்படுகிறது. இந்த விபத்தின் முடிவில் சிம்பு மஞ்சிமா மோகனிடம் தனது காதலை கூறுகிறார். இதன் பின்னர் மஞ்சிமா மோகனை மருத்துவமனையில் சேர்க்கும்போது அவரை கொல்வதற்காக மும்பையை சேர்ந்த அரசியல்வாதிகள் உலா வருவது சிம்புவிற்கு தெரிய வருகிறது.
அவர்கள் ஏன் மஞ்சிமாவை கொல்ல முயற்ச்சிக்கின்றனர். அந்த அரசியல்வாதிகளிடமிருந்து மஞ்சிமா மோகனை எப்படி காப்பாற்றினார் என்பதை படத்தின் மீதி கதை. படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் விறுவிறுப்பான காட்சிகளுடன் இருந்ததால் ரசிகர்களின் மனதில் பெரும் இடத்தை பிடித்திருந்தது. மேலும் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் சிம்புவின் பெயர் ரஜினிகாந்த் என தெரியும் போது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.
இவ்வாறு சிறு சிறு நுணுக்கமான விஷயங்களாக படம் நெடுக காட்சிகள் அமைக்கப்பட்டிருந்ததால் இன்றைய கால காதலர்களுக்கு இந்த படம் மிகவும் ஒத்துக் போனது. தற்போது இந்த படத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டரில் கௌதம் மேனன் பகிர்ந்துள்ளார். மேலும் இது தனக்கு மிகவும் சிறந்த ஒன்று எனவும் குறிப்பிட்டுள்ளார். படத்தின் நாயகன் பெயரை கூறாமல் படம் முடிவில் கூறியதும் புது வித யுக்தியாகவே இருந்தது. இப்படத்தில் சதீஷ் கிருஷ்ணன், பாபா சேகல், டேனியல் பாலாஜி, நாகிநீடு, ஆர்.என்.ஆர்.மனோகர், அஞ்சலி ராவ் மற்றும் கிரிஷ் மேனன் ஆகியோர் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்துள்ளனர்.
ரசிகர்கள் கமெண்ட்
கௌதம் மேனனின் இந்த பதிவிற்கு பல ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர் அச்சம் என்பது மடமையடா படம் எத்தனை வருடங்கள் ஆனாலும் தங்களது மனதில் நீங்காது என்பதை குறிப்பிட்டு வருகின்றனர். மேலும் இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது. சிலர் பாடல்களை இன்றும் தங்களது பிளே லிஸ்டில் வைத்துள்ளனர் ஏ ஆர் ரகுமான் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சிலம்பரசன் ஆகியோரது கூட்டணியில் உருவான இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் கலெக்ஷனை அள்ளி குவித்தது.
டாபிக்ஸ்