தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Gardening Tips : விடுமுறைக்கு வெளியூர் செல்ல திட்டமிட்டாச்சா? வீட்டுத்தோட்டத்தை பராமரிக்க வழியில்லையா? இதோ ஐடியா!

Gardening Tips : விடுமுறைக்கு வெளியூர் செல்ல திட்டமிட்டாச்சா? வீட்டுத்தோட்டத்தை பராமரிக்க வழியில்லையா? இதோ ஐடியா!

Priyadarshini R HT Tamil

Sep 27, 2024, 07:00 AM IST

google News
Gardening Tips : விடுமுறைக்கு வெளியூர் செல்ல திட்டமிட்டாச்சா? வீட்டுத்தோட்டத்தை பராமரிக்க வழியில்லையா? இதோ ஐடியா!
Gardening Tips : விடுமுறைக்கு வெளியூர் செல்ல திட்டமிட்டாச்சா? வீட்டுத்தோட்டத்தை பராமரிக்க வழியில்லையா? இதோ ஐடியா!

Gardening Tips : விடுமுறைக்கு வெளியூர் செல்ல திட்டமிட்டாச்சா? வீட்டுத்தோட்டத்தை பராமரிக்க வழியில்லையா? இதோ ஐடியா!

நீங்கள் நீண்ட விடுமுறைக்காக வெளியூர் செல்ல திட்டமிட்டுவிட்டீர்கள் என்றால் உங்கள் வீட்டைச் சுற்றி சில விஷயங்களை திட்டமிடவேண்டும். நீங்கள் பல்வேறு விஷயங்களை திட்டமிடும் வேலை உங்களின் வீட்டுத்தோட்டத்தை எப்படி பராமரிப்பது என்ற எண்ணம் உங்களுக்கு எழும். தோட்டம் சிறியதோ அல்லது பெரியது அன்றாட பராமரிப்பு என்பது தேவை. உங்கள் தோட்டம் மண்ணில் நேரடியாக இருந்தால் ஒரு வாரம் வரை தாங்கும். அதுவரை தண்ணீர் விடவேண்டிய அவசியம் இல்லை. மழைக்காலம் என்றால் அந்த கவலையும் இல்லை. ஆனால் தொட்டிகளில் நீங்கள் செடிகள் வளர்த்தீர்கள் என்றால், அவை சிறிதளவு தண்ணீரை மட்டுமே தக்கவைக்கும் தன்மை கொண்டவையாகவும், சூட்டில் கருகும் குணம் உள்ளதாகவும் இருக்கும். எனவே அவை எளிதில் காய்ந்துவிடும்.

எனவே நீங்கள் விடுமுறைக்கு வெளியூர் செல்ல நேரிட்டால், உங்களின் தோட்டத்தை பராமரிப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் ஊரில் இருந்து வரும்போது, காய்ந்த மற்றும் வறண்ட தாவரத்தை பார்க்கமாட்டீர்கள். எனவே கொஞ்சம் திட்டமிட்டாலே போதும் உங்கள் தோட்டம் சிறியதோ அல்லது பெரியதோ அதில் உள்ள தாவரங்கள் மகிழ்வுடனும், ஆரோக்கியத்துடனும் வளரும்.

வானிலை

நீங்கள் 2 அல்லது 3 நாட்கள் ஊரில் இல்லையென்றால் நீங்கள் பெரிய தொட்டி வைத்திருந்தால் அதுகுறித்து கவலைகொள்ளதேவையில்லை. ஏனெனில், அதில் இருக்கும் தண்ணீரே போதும். மழைக்காலம் எனில் கட்டாயம் தாக்குபிடித்துவிடும். நீங்கள் செல்லும் முன் நன்றாக தண்ணீர் விட்டாலே போதும். சிறிய தொட்டிகளுக்கு நீங்கள் திட்டமிடவேண்டும். அவற்றுக்கு கட்டாயம் தினசரி தண்ணீர் விடவேண்டும். அதற்கு நீங்கள் உங்கள் நண்பர் அல்லது அக்கம்பக்கத்தினர் உதவியை நாடலாம். தானாகவே தண்ணீர் ஊற்றும் கருவிகள், மெதுவாக தண்ணீரை ஊற்றும். இது வெளிப்புற தொட்டி தோட்டங்களுக்கு சிறந்தது. எனவே வெளியூர் செல்லும் காலங்களில் தண்ணீர் ஊற்ற ஆட்களை நியமிப்பதே சிறந்தது.

தொட்டிகள்

தொட்டிகளையும், தொங்கும் தொட்டிகளையும் நிழல் உள்ள இடத்திற்கு மாற்றிவிடுங்கள். ஏனென்றால் வெயிலில் செடிகள் உலர்ந்துவிடும். இதனால் வறண்ட காற்றும் அவைகளை தாக்காது. அவற்றை ஒன்றாக ஓரிடத்தில் குவித்து வைத்துவிடுங்கள். இதனால் அவற்றுக்கு குளிர்ச்சியால் சிறிது நன்மைகள் கிடைக்கும். ஒன்றாக சேர்த்துவிட்டு, நேரத்துக்கு தண்ணீர் அல்லது சொட்டு நீர் பாசனம் ஆகியவற்றை செய்யலாம். நீங்கள் திரும்பும் வரை சிறிய ஏற்பாட்டை செய்து விட்டுச் செல்லாம்.

சொட்டு நீர் பாசனம்

நீங்கள் ஆன்லைனில் கிடைக்கும் தண்ணீர் பாசன கருவிகளைப் பயன்படுத்தலாம். நீங்கள் சொட்டு நீர் பாசனம் செய்ய தேவையானவற்றை செய்யவேண்டும். அதற்கான உபகரணங்கள் கிடைக்கிறது அல்லது ஒன்றை நீங்களே ஆன்லைனில் பார்த்து அமைத்துக்கொள்ளலாம். சொட்டு நீர் பாசனம் என்பது உங்களுக்கு ஈரப்பதத்தை தரும் எண்ணற்ற தொட்டிகளுக்கு ஒன்றாகும்.

தானாவே சொட்டும் தண்ணீர்

ஒரு ஹோஸை எடுத்து உங்களுக்கு எவ்வளவு தண்ணீர் எவ்வளவு நேரம், எவ்வளவு நேரத்துக்கு ஒருமுறை தேவை என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். சில தொலைவில் இருந்து இயங்கக்கூடிய டிஜிட்டல் சிஸ்டம்களை பயன்படுத்துங்கள். இதனால் உங்கள் செடிகளுக்கு எங்கிருந்து வேண்டுமானாலும் தண்ணீர் ஊற்றிக்கொள்ளலாம். சிறிய ஏற்பாடே போதும் உங்கள் தொட்டிகளுக்கு தண்ணீர் கிடைத்துவிடும். நீங்கள் இருக்கவேண்டும் என்ற தேவையில்லை. எனவே நீங்கள் ஊருக்குச் செல்லும் முன் இந்த சிறிய வேலையை செய்துவிட்டுச் செல்லுங்கள். உங்களால் விடுமுறையை மகிழ்ச்சியாகக் கொண்டாட முடியும். மேலும் உங்கள் தோட்டமும் நல்ல முறையில் இருக்கும்.

 

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி