Gardening Tips : ‘சீரான தோட்டம் சிறப்பான தோட்டம்’ செடிகள் நடுவது மற்றும் மீண்டும் நடுதல் குறிப்புகள் இதோ!
Oct 01, 2024, 07:00 AM IST
Gardening Tips : ‘சீரான தோட்டம் சிறப்பான தோட்டம்’ செடிகள் நடுவது மற்றும் மீண்டும் நடுதல் குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றி பலன்பெறுங்கள்.
உங்கள் வீட்டில் உள்ள சிறிய தோட்டமோ அல்லது பெரியதோ அதற்கு பராமரிப்பு என்பது கட்டாயம் வேண்டும். உங்கள் தோட்டத்தை பராமரிக்கத் தேவையான குறிப்புகளை நீங்கள் தெரிந்துகொள்வது உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகள் அனைத்தும் வளர்வதற்கு துணைபுரியும். நீங்கள் வீட்டில் தோட்டம் அமைக்க விரும்பினால் அது உங்களுக்கு பல்வேறு விஷயங்களை மனதில் ஏற்படுத்தும். அதுவும் உண்மைதான், ஒரு தோட்டம் அமைக்க நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது இதுதான். நீங்கள் உங்களின் தாவரங்களை நடவு செய்வது எப்படி? சிறந்த மண் எது? அவற்றை எப்போது வெட்டவேண்டும்? அவற்றுக்கு போதிய தண்ணீர் மற்றும் சூரியஒளி கிடைக்க என்ன செய்யவேண்டும். இயற்கையே சிறந்த ஆசான். நீங்கள் தோட்டம் அமைக்க அமைக்க, உங்களுக்கு எது சரியாக செயல்படும். எது வளராது என்பதை கற்றுக்கொடுத்துவிடும்.
தோட்டக் குறிப்புகள்
உங்களுக்குத் தேவையான தோட்டக் குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இவை குறிப்பாக யாருக்கெல்லாம் உதவியாக இருக்கும் என்றால், தோட்டம் அமைக்கும் வேலையை துவங்கியுள்ளவர்களுக்குத்தான். தோட்டத்தை நீங்கள் கஷ்டப்பட்டு நடவேண்டாம். இந்த குறிப்புக்களை பின்பற்றினால் நீங்கள் மகிழ்ச்சியுடன் தோட்ட வேலைகளில் ஈடுபட முடியும்.
நடுவது குறித்த குறிப்புகள்
தாவரங்கள் நடும்போதும், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் பறித்து நடும்போதும் அவற்றின் வளர்ச்சி பாதிக்கப்படும். அதற்கு என்ன செய்யவேண்டும் என தெரிந்துகொள்ளுங்கள்.
பல காலம் வாழும் செடிகள் தங்களின் முதிர்ந்த நிலையை அடைவதற்கு மூன்று ஆண்டுகள் ஆகும். இந்த கணக்கு நீங்கள் நட்டதற்கு பின்னர் முதல் துவங்கும். ஒவ்வொரு ஆண்டும், அது படரும், உதிரும், மீண்டும் பூக்கும்.
சில தாவரங்கள் நீங்கள் வெட்டாவிட்டால் கிளைக்காது. அவை படரவேண்டும் என்றால் வெட்டுங்கள். இல்லாவிட்டால் அது ஒன்றை மட்டும் வைத்துக்கொள்ளுங்கள். வசந்த காலங்களில் அவற்றுக்கு தேவையானவற்றை செய்யவேண்டும் அல்லது மண் இறுகுவதற்கு 4 வாரங்களுக்கு முன்னர் செய்யவேண்டும்.
தாவரங்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவதற்கு கோடைக்காலங்களில் இறுதி அல்லது கோடை கால முடிவு சரியானது. வசந்த காலத்தில் அவை மொட்டுவிட அது ஏதுவாக இருக்கும்.
செடியை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றி நடும்போது, நன்றாக துளையிடவேண்டும். இதனால் மண்ணுக்கும் வேருக்கும் நல்ல தொடர்பு ஏற்படும். வேர் ஆழமாக பிடித்து செடி நன்றாக செழித்து வளர உதவியாக இருக்கும்.
ஒரு தொட்டியில் இருந்து தரைக்கு மாற்றுகிறீர்கள் என்றால், அந்த தாவரம் தொட்டியில் எந்த அளவு ஆழம் இருந்ததோ அதே அளவு ஆழத்தில் நடவேண்டும். நீங்கள் தொட்டியில் இருந்து எடுத்த மண்ணையே பயன்படுத்துங்கள். புதிய மண்ணை உபயோகிக்க வேண்டாம். அதுதான் செடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
தோட்டத்தில் எப்போதும் களைகளை கைகளில் எடுப்பதுதான் சிறந்தது. மிகவும் ஆழத்தில் பயிரிடும்போது அது களைச்செடிகளை விதைகளை மண்ணின் மேல்புறத்திற்கு கொண்டு வந்து அந்தச் செடியை முளைக்கச் செய்யும்.
எனவே களைகளை முன்னரே அகற்றுவது, அடிக்கடி திருத்துவதும், களைகளில் விதைகள் ஆழமாவதை தடுக்கும். ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் களைகளை அகற்றுவதை தடுக்கவேண்டும்.
இதுபோன்ற எண்ணற்ற தோட்டம் வளர்ப்பது குறித்த குறிப்புகளை உங்களுக்கு அன்றாடம் தொகுத்து வழங்குகிறோம். அதுமட்டுமின்றி எண்ணற்ற சமையல், ஆரோக்கிய குறிப்புகளும் ஹெச்.டி. தமிழ் இணையப்பக்கத்தில் நிறைய உள்ளது. அவற்றை படித்து பயன்பெற எங்கள் இணையப் பக்கத்தில் இணைந்திருங்கள்.
டாபிக்ஸ்