Serials TRP: திருமணத்தால் டிஆர்பியில் முதல் இடத்தில் நீடிக்கும் சன் தொலைக்காட்சி.. அப்போ அடுத்து?
Serials TRP: கடந்த வாரம் தமிழ் சீரியல் பெற்ற புள்ளிகளும், அவற்றின் இடங்கள் பற்றி பார்க்கலாம்.

Serials TRP: தமிழ் மக்களுக்கும், சீரியலுக்கு ஒரு பெரிய பந்தம் இருக்கிறது. அந்த இரண்டையும் யாராலும் பிரிக்க முடியாது. காலை ஆரம்பித்து இரவு வரை சீரியல் தொடர்ந்து பல வீடுகளில் ஒடுகிறது. கடந்த வாரம் தமிழ் சீரியல் பெற்ற புள்ளிகளும் அவற்றின் இடங்களும் இதோ:
கயல்
சன் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல், கயல். அக்டோபர் 25, 2021 ஆம் ஆண்டு முதல் தொடங்கிய இந்த தொடர் தற்போது வரை வெற்றிகரமாக நடந்து வருகிறது. தந்தையை இழந்து குடும்பத்தின் மொத்த பொறுப்புகளையும் கயல் சுமக்கிறார்.
அவர் செய்யும் செயல்களுக்கு பல்வேறு தடைகளை ஏழுகிறது. அதை எல்லாம் தாண்டி பிரச்னைகளை எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை. கயல் சீரியல், 9.7 புள்ளிகளுடன் டி. ஆர். பியில் முதல் இடத்தில் இருக்கிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த, கயல், எழில் திருமணம் தற்போது நடக்க போகிறது. மண்டபம் வரை வந்துவிட்டதால் திருமணம் நடக்குமா? நடக்காதா ? அதை தடுக்க வருவார்கள் என்று விருவிருப்பாக சென்று கொண்டு இருக்கிறது. ஒரு பக்கம் பெரியப்பா குடும்பம் மறு பக்கம் டாக்டர் கெளதம் என இரண்டு பேரை சமாளித்து கயல் திருமணம் நடக்க வேண்டும்.