Gardening Tips : ‘சீரான தோட்டம் சிறப்பான தோட்டம்’ கார்டனுக்கு மண்ணை தயார்படுத்துதல், உரமிடுதல் எப்படி?
Gardening Tips : ‘சீரான தோட்டம் சிறப்பான தோட்டம்’ உங்கள் வீட்டு கார்டனுக்கு தேவையான மண்ணை தயார்படுத்துதல் மற்றும் உரமிடுதல் எப்படி?

உங்கள் வீட்டில் உள்ள சிறிய தோட்டமோ அல்லது பெரியதோ அதற்கு பராமரிப்பு என்பது கட்டாயம் வேண்டும். உங்கள் தோட்டத்தை பராமரிக்கத் தேவையான குறிப்புகளை நீங்கள் தெரிந்துகொள்வது உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகள் அனைத்தும் வளர்வதற்கு துணைபுரியும். நீங்கள் வீட்டில் தோட்டம் அமைக்க விரும்பினால் அது உங்களுக்கு பல்வேறு விஷயங்களை மனதில் ஏற்படுத்தும். அதுவும் உண்மைதான், ஒரு தோட்டம் அமைக்க நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது இதுதான். நீங்கள் உங்களின் தாவரங்களை நடவு செய்வது எப்படி? சிறந்த மண் எது? அவற்றை எப்போது வெட்டவேண்டும்? அவற்றுக்கு போதிய தண்ணீர் மற்றும் சூரியஒளி கிடைக்க என்ன செய்யவேண்டும். இயற்கையே சிறந்த ஆசான். நீங்கள் தோட்டம் அமைக்க அமைக்க, உங்களுக்கு எது சரியாக செயல்படும். எது வளராது என்பதை கற்றுக்கொடுத்துவிடும்.
தோட்டக் குறிப்புகள்
உங்களுக்குத் தேவையான தோட்டக் குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இவை குறிப்பாக யாருக்கெல்லாம் உதவியாக இருக்கும் என்றால், தோட்டம் அமைக்கும் வேலையை துவங்கியுள்ளவர்களுக்குத்தான். தோட்டத்தை நீங்கள் கஷ்டப்பட்டு நடவேண்டாம். இந்த குறிப்புக்களை பின்பற்றினால் நீங்கள் மகிழ்ச்சியுடன் தோட்ட வேலைகளில் ஈடுபட முடியும்.
உங்கள் வீட்டுத்தோட்டத்தில் மண்ணும், தண்ணீரும் எப்படி இருக்கவேண்டும்?
ஒவ்வொரு செடிக்கு மண் மற்றும் தண்ணீர் விடும் அளவு வேறுபடும். எனவே உங்கள் மண் நல்ல தரமானதாக உள்ளதா என்று பாருங்கள். அதில் உங்கள் தாவரங்களுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் உள்ளதா என்பதையும் சரிபார்த்துக்கொள்ளுங்கள். மேலும் நீங்கள் தண்ணீரை அதிகமும் ஊற்றிவிடக்கூடாது. குறைவாகவும் ஊற்றக்கூடாது.