தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Fresh Sambar Podi : இந்த ஒரு ஃபிரஷ் மசாலாப் பொடி அரைத்து செய்ங்க! சாம்பார் வேறலெவல் டேஸ்டில் இருக்கும்!

Fresh Sambar Podi : இந்த ஒரு ஃபிரஷ் மசாலாப் பொடி அரைத்து செய்ங்க! சாம்பார் வேறலெவல் டேஸ்டில் இருக்கும்!

Priyadarshini R HT Tamil

Apr 05, 2024, 11:18 AM IST

google News
Fresh Sambar Podi : நாஞ்சில் சாம்பாரில் மாங்காய் சேர்க்க மாட்டார்கள். விருப்பப்பட்டால் சிறிய துண்டுகள் சேர்த்துக்கொள்ளலாம்.
Fresh Sambar Podi : நாஞ்சில் சாம்பாரில் மாங்காய் சேர்க்க மாட்டார்கள். விருப்பப்பட்டால் சிறிய துண்டுகள் சேர்த்துக்கொள்ளலாம்.

Fresh Sambar Podi : நாஞ்சில் சாம்பாரில் மாங்காய் சேர்க்க மாட்டார்கள். விருப்பப்பட்டால் சிறிய துண்டுகள் சேர்த்துக்கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

துவரம்பருப்பு – முக்கால் கப்

சின்ன வெங்காயம் – 10

பச்சை மிளகாய் – 2

முருங்கைக்காய், கத்திரிக்காய், கேரட், உருளைக்கிழங்கு – தலா ஒன்று

பூசணிக்காய் – சிறிய துண்டு

மாங்காய் – 4 சிறிய துண்டு (விருப்பப்பட்டால்)

புளி - சிறிய எலுமிச்சை அளவு உருண்டை

பெருங்காயம் – சிறிய துண்டு

வெந்தயம் – கால் ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

மிளகாய் வற்றல் – 1

எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

சாம்பார் பொடிக்கு தேவையான பொருட்கள்

மிளகாய் வற்றல் – 7

வரமல்லி – ஒன்றரை டேபிள் ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

வெந்தயம் – கால் ஸ்பூன்

செய்முறை -

முதலில் கழுவிய துவரம்பருப்பை குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 8 விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவேண்டும். புளியை ஒரு கப் தண்ணீரில் ஊறவைத்து, 2 கப் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவேண்டும்.

கடாயில் லேசாக சூடாக்கி, அதில் கொத்தமல்லியை சேர்த்து வாசம் வரும் வரை வறுக்கவேண்டும். மல்லியின் நிறம் மாறும்போது சீரகம் மற்றும் வெந்தயம் சேர்த்து வறுத்துக் கொள்ளவேண்டும். பின் மிளகாய் வற்றல் சேர்த்து லேசாக வறுக்கவேண்டும். பின் மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக பொடித்துக்கொள்ளவேண்டும்.

ஒரு அகலமான கடாயில் நறுக்கிய முருங்கைக்காய், கத்திரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேகவிடவேண்டும்.

மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய்விட்டு சூடானதும் வெந்தயம், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், நறுக்கிய கேரட் மற்றும் வெண்டைக்காய் சேர்த்து வதக்கவேண்டும்.

முருங்கைக்காய், கத்திரிக்காய் பாதி வெந்ததும் வதக்கிய பொருட்களை சேர்த்து வேகவிடவேண்டும்.

காய்கறிகள் வெந்ததும் நறுக்கிய பூசணிக்காய், மாங்காய், புளிக்கரைசல், மஞ்சள்தூள், அரைத்த சாம்பார் பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து மூடி வைத்து கொதிக்கவிடவேண்டும்.

பின் பெருங்காயம் மற்றும் வேகவைத்த துவரம்பருப்பு மேலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கலந்து மிதமான சூட்டில் வைத்து 7 நிமிடங்கள் கொதிக்க விடவேண்டும்.

சாம்பார் நன்றாக கொதித்ததும் கிள்ளிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவேண்டும்.

கடாயில் சிறிது எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் மிளகாய் வற்றல் சேர்த்து தாளித்து சூடான சாம்பாரில் கலந்து மூடி வைக்கவேண்டும்.

நாஞ்சில் சாம்பாரில் மாங்காய் சேர்க்க மாட்டார்கள். விருப்பப்பட்டால் சிறிய துண்டுகள் சேர்த்துக்கொள்ளலாம்.

நன்றி - விருந்தோம்பல்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி