உடல் எடை குறைப்பில் மஞ்சள் தூள் செய்யும் மாயம் என்ன தெரியுமா? எப்படி பயன்படுத்துவது?
உடல் எடை குறைப்பில் மஞ்சள் தூள் செய்யும் மாயம் என்ன தெரியுமா? எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் உடல் எடையைக் குறைக்க மஞ்சள் தூளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள். முதலில் மஞ்சள் தூள் உடல் எடை குறைப்புக்கு பயன்படுமா என்பதை தெரிந்துகொள்வது அவசியம், மஞ்சள் தூள் இந்தியில் ஹல்தி என்று அழைக்கப்படுகிறது. இது உங்கள் உணவுகளுக்கு கார சுவையையும், பொன்னிறத்தையும் தருகிறது. இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. மஞ்சள் தூள் உடல் எடையை குறைக்க உதவுகிறது. உங்கள் உடல் எடையைக் குறைக்க நீங்கள் மஞ்சள் தூளை எப்படி பயன்படுத்தலாம் என்று பாருங்கள். மஞ்சள் தூள் உங்கள் உடல் எடையை குறைக்க செய்யும் மாயங்களைக் கற்றுக்கொண்டு, பின்பற்றி பலன்பெறுங்கள்.
மஞ்சள் தூள் டீ
ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் அரை ஸ்பூன மஞ்சள் தூள் சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடங்கள் மூடிவிடவேண்டும். பின்னர் இறக்கி வடிகட்டி, அதில் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து, கொஞ்சம் மிளகுத்தூள் அல்லது தேன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் பருகவேண்டும். இந்த மஞ்சள் தூள் டீயை நீங்கள் தினமும் பருகுவது உங்களின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்யும். உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும்.
உறங்கச் செல்லும் முன் மஞ்சள் தூள் பால்
மஞ்சள் தூள் பாலை நீங்கள் உறங்கச் செல்லும் முன் பருகுவது மனதை அமைதிப்படுத்துகிறது. இதில் மனதை அமைதியாக்கும் உட்பொருட்கள் உள்ளது. ஒரு கப் சூடான பாலில் ஒரு சிட்டிகை மிளகு மற்றும் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து பருகவேண்டும். இதனுடன் இனிப்பு தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்ளலாம். இதை நீங்கள் உறங்கச் செல்லும் முன் பருகினால் அது உங்களை அமைதிப்படுத்துவதுடன், நீங்கள் உறங்கும்போது கொழுப்பை கரைக்க உதவும். ஆழ்ந்த உறக்கத்துக்கு வழிவகுக்கும்.
இஞ்சி, மஞ்சள் ஸ்மூத்தி
அரை ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் கால் இன்ச் இஞ்சியையும் நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும். அதில் கொஞ்சும் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு கப் தேங்காய் தண்ணீரை கலந்துகொள்ளவேண்டும். நன்றாக கலந்துவிட்டு, இந்த ஸ்மூத்தியை பருகினால் அது உங்களுக்கு புத்துணர்ச்சியைத் தரும். உங்கள் நாளை ஆரோக்கியமுடன் துவங்க உதவும். வயிறு உப்புசம், உடல் எடை குறைப்பு என அனைத்துக்கும் உதவும்.
சமையலுக்கு மஞ்சள்
உங்கள் உணவில் மஞ்சள் தூளை சேர்த்துக்கொள்வது, மஞ்சள் தூளை உணவில் அடிக்கடி சேர்ப்பதை உறுதிப்படுத்துவதுடன், உங்களுக்கு அதன் நன்மைகளையும் வழக்கமாக கிடைக்கச் செய்யும். காய்கறிகள், சூப்கள், குழம்பு, சாதங்கள் என அனைத்திலும் மஞ்சள் தூளை தூவி சாப்பிடவேண்டும். சிக்கன் அல்லது மீன், மட்டன் என அனைத்து உணவிலும் மஞ்சள் தூளை கலந்து உண்ணுங்கள். இது சுவையை மட்டும் அதிகரிக்கச் செய்யவில்லை. உங்கள் உடலின் வளர்சிதையையும் மேம்படுத்துகிறது. உங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டியது இந்த மஞ்சள் தூள்.
மஞ்சள் தூள் மாத்திரைகள்
உங்களுக்கு மஞ்சள் தூளின் சுவை பிடிக்கவில்லையென்றால், அவை மாத்திரை வடிவில் கிடைக்கும். அவற்றை வாங்கி பயன்படுத்துங்கள். அந்த மாத்திரைகளில் மிளகும் கலந்து இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். இதுதான் உடலில் குர்குமின் உறிஞ்சும் திறனை அதிகரிக்கும்.
மஞ்சள் தூள் கழிவு நீக்க பானம்
மஞ்சள் தூள் ஊறவைத்த தண்ணீரை பருகுவது உங்களுக்கு கழிவுகளை நீக்க சிறப்பான முறை. ஒரு கப் சூடான தண்ணீரில், அரை ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்க்கவேண்டும். அதை காலையில் முதலில் பருகிவிடவேண்டும். இந்த பழக்கம் உங்கள் உடலில் உள்ள கழிவுகளை அடித்து வெளியேற்றும், செரிமானத்தை அதிகரிக்கும், நாள் முழுவதும் உடலில் கொழுப்பு எரிக்கும் திறனை அதிகரிக்கும்.
மிளகுத்தூள் மற்றும் மஞ்சள்
மஞ்சளை மிளகுத்தூளுடன் சேர்த்து சாப்பிடும்போது அது உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தரும். இது மஞ்சளின் குர்குமின் உறிஞ்சும் தன்மையை 2000 சதவீதம் அதிகரிக்கிறது.இதற்கு காரணம் மிளகில் உள்ள பைப்பரைன் ஆகும்.
மஞ்சள் தூளின் நன்மைகள்
வீக்கத்துக்கு எதிரான குணங்கள் கொண்டது மஞ்சள் தூள். ஆன்டி ஆக்ஸிடன்ட் குணங்கள் நிறைந்தது.கொழுப்பு சேமிக்கும் திறனைக் குறைக்கிறது. உடலின் வளர்சிதையை அதிகரிக்கிறது. இவைதான் உடல் எடை குறைக்க உதவும் முக்கிய காரணங்கள் .இது சிறப்பாக செரிமானம் மற்றும் ரத்த சர்க்கரையை முறைப்படுத்தவும் உதவுகிறது. உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்