Flat Belly : தொப்பையை கரைந்து தட்டையான வயிறு வேண்டுமா? ஒரு வாரம் இந்த பானம் மட்டும் போதும்!
May 25, 2024, 10:15 AM IST
Flat Belly : தொப்பையை கரைந்து தட்டையான வயிறு பெற வேண்டும் எனில், ஒரு வாரம் இந்த முருங்கைக்கீரை சாறு மட்டும் பருகி வாருங்கள் போதும். வெறும் வயிற்றில் பருக பலன் நிச்சயம்.
மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதுக்கு பின்னரே பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
தேவையான பொருட்கள்
முருங்கைக்கீரை – ஒரு கைப்பிடியளவு (கொழுந்தாக எடுத்துக்கொள்ளவேண்டும்)
எலுமிச்சை சாறு – 10 மி.லி
தேன் – 10 மி.லி.
செய்முறை
கைப்பிடியளவு கொழுந்து முருங்கைக்கீரையை எடுத்து நன்றாக அலசிவிட்டு, மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்து, சாறு எடுத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்துகொள்ளவேண்டும்.
இதை ஒரு வாரம் காலையில் வெறும் வயிற்றில் பருகவேண்டும்.
பருகினால் உங்களின் தொப்பையில் உள்ள கொழுப்புகள் கரைந்து தொப்பை ஃப்ளாட்டாகி விடும்.
இதை பரும்போது நீங்கள் வழக்கமாக பருகும் காபி, டீ அல்லது வேறு பானங்களை கட்டாயம் தவிர்க்கவேண்டும்.
இதை பருகிய ஒரு மணி நேரத்திற்கு ஒன்றும் எடுத்துக்கொள்ளக்கூடாது. நேரடியாக காலை உணவு மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும். அதுவும், எளிதில் செரிக்கக்கூடிய இட்லி, இடியாப்பம் போன்றவற்றைதாக் சாப்பிடவேண்டும்.
வழக்கமான உடற்பயிற்சிகளை செய்யவேண்டும். அத்துடன், கட்டாயம் பீட்சா, பர்கள், நூடுல்ஸ் போன்ற ஜங்க் உணவுகளைத் தவிர்க்கவேண்டும்.
முருங்கைக்கீரையில் உள்ள நன்மைகள்
ஆயுர்வேதத்தில் ஆரோக்கியமான மூலிகையாக முருங்கைக்கீரை உள்ளது. முருங்கை மரம், நம் வீட்டில் இருந்தாலே ஒரு மருத்துவர் வீட்டில் இருப்பதற்கு சமம் என்று பாரம்பரிய மருத்துவம் அறிவுறுத்துகிறது.
முருங்கைக்கீரையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நியூரோபுரொடென்டிவ் தன்மைகள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. எனவே முருங்கைக்காய், கீரை மற்றும் பூ என அனைத்தையுமே நாம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் துத்தநாகச்சத்து ஆகியவை இதில் உள்ளது. வைட்டமின் ஏ, சி, இ, பி என இத்தனை வைட்டமின்கள் உள்ளது. மேலும் முருங்கைக்கீரையில் அதிகளவிலான புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
முருங்கைக்கீரையில் பீட்டா கரோட்டின், கொலோரோஜெனிக் திரவம் மற்றும் குயர்செடின் ஆகியவை உள்ளது. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
ஐசோதியோசையனேட்ஸ், இது முருங்கைக்கீரையில் உள்ள ஒரு வேதிப்பொருள். இது உடலில் வீக்கத்தை எதிர்த்து போராட உதவுகிறது.
ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு இரண்டையும் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதய ஆரோக்கியம் சிறக்கும்போது உடல் நல்ல முறையில் இயங்குகிறது.
முருங்கைக்கீரையில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி, குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. கூடுதலாக இதன் நெகிழ்தன்மை, மலச்சிக்கலை போக்குகிறது.
முருங்கைக்கீரையில் உள்ள வைட்டமின் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கிறது.
முருங்கைக்கீரையில் உள்ள சில வேதிப்பொருட்கள் புற்றுநோய்க்கு எதிராக செயல்படக்கூடியவை. புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கிறது.
முருங்கைக்கீரையில் உள்ள ஊட்டச்சத்துக்கள், ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்து போராடுகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குகிறது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்