Diabetics Constipation : தினமும் அரை ஸ்பூன் இந்தப்பொடி போதும்! நீரிழிவு நோயாளிகளுக்கு சவாலான மலச்சிக்கலை சரிசெய்யும்!
Mar 19, 2024, 01:00 PM IST
Fenugreek Podi Benefits and Uses to Control Diabetics Constipation : உடல் நல பாதிப்பு உள்ளவர்கள் வெந்தயத்தை தவிர்க்க வேண்டும் அல்லது மிகுந்த எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். இதை பயன்படுத்தும் முன் மருத்துவரின் பரிந்துரையை பெறவேண்டும்.
தேவையான பொருள்
வெங்தயம் – 50 கிராம்
செய்முறை
வெந்தயத்தை வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் காலை வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் போட்டு தண்ணீர் ஊற்றி விழுங்கிவிடவேண்டும்.
இதை வெறும் வயிற்றில் பருகுவதால், நீரிழிவு நோயாளிகளின் பெரும் சவாலான மலச்சிக்கலை குணப்படுத்தும். இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கரையாத நார்ச்சத்துக்கள் மலத்தை வெளியேற்றிவிடுகிறது.
நீரிழிவு நோயாளிகள் நார்ச்சத்துக்கள் இல்லாமல் மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டு, பல்வேறு மாத்திரைகளை சாப்பிட்டு மலம் கழிக்க முயற்சிப்பார்கள். அவர்களுக்கு வெந்தயம் வரப்பிரசாதம். இதை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான கசப்பும் கிடைக்கும். மலம் கழிக்கவும் உதவும்.
எனவே வெந்தயத்தை அன்றாட உணவில் அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு அதிக பலன்களை தரக்கூடியது வெந்தயம்.
வெந்தயத்தில் உள்ள நன்மைகள்
மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படும் தாவரங்களுள் ஒன்று வெந்தயம். இது இந்திய மற்றும் சீன மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்படுகிறது.
வெந்தயத்தின் சாறு சோப்பு, அழகு சாதன பொருட்கள், தேநீர், கரம் மசாலா, உணவு சிரப்கள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
வெந்தயத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
வெந்தயத்தில் முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலுக்கு தேவையான ஆன்டி ஆக்ஸிடன்ட்களை உருவாக்க பயன்படுகிறது.
வெந்தயத்தில் சோலைன், இனோசிடால், பயோடின், வைட்டமின் ஏ, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் டி, கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள், இரும்பு ஆகிய சத்துக்கள் உள்ளன.
இதில் உள்ள பல்வேறு நன்மைகளுக்காக இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது பல்வேறு நோய்களுக்கு மருந்தாகிறது.
செரிமான கோளாறு மற்றும் மலச்சிக்கலை போக்குகிறது.
தாய்ப்பாலை அதிகம் சுரக்கச் செய்கிறது.
நீரிழிவு நோய்க்கு அருமருந்தாகிறது.
டெஸ்டோஸ்டிரோன் அளவை குறைத்து பாலுணர்வை அதிகரிக்கிறது.
மாதவிடாய் வலிகளை போக்குகிறது.
மெனோபாஸ் காலத்திற்கு மருந்தாகிறது.
ஆர்த்ரிட்டிஸ் நோய்க்கு சிகிச்சையளிக்கிறது.
உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது
உடல் பருமன் குறைய வழிவகுக்கிறது.
மூச்சுதிணறலை சரிசெய்கிறது.
உடல் சூட்டை குறைத்து வெப்ப கட்டிகளை போக்குகிறது.
அல்சரை குணப்படுத்துகிறது.
காயங்களுக்கு சிகிச்சையளிக்கிறது.
தசை வலியை தீர்க்கிறது.
மைக்ரைன் எனப்படும் ஒற்றை தலைவலி மற்றும் தலைவலியை சரிசெய்கிறது.
பிரசவத்துக்கு பின்னர் பெண்களுக்கு ஏற்படும் வலிகளை போக்குகிறது.
இவற்றிற்கெல்லாம் காலங்காலமாக வெந்தயம் தீர்வு கொடுக்கிறது. இவற்றில் சிலவற்றிக்கு அறிவியல் ஆதாரம் உள்ளது.
இத்தனை நன்மைகளை கொடுக்கும் வெந்தயத்தை அதிகம் எடுத்துக்கொண்டால் அது சில பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துகிறது. எனவே தினமும் 10 கிராம் அளவு வெந்தயம் உடலுக்கு போதுமானது. அந்த அளவை கடந்து எடுக்கவேண்டும்.
அப்படி அதிகம் எடுப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன?
வயிற்றுப்போக்கு
வயிறு கோளாறுகள்
வியர்வை, சிறுநீர், தாயப்பாலில் நாற்றம் வீசுவது
தலைவலி
தலை சுற்றல் ஆகியவை ஏற்படும்.
அரிதாக சிலருக்கு வெந்தய அலர்ஜி இருக்கும்.
கர்ப்பிணிகள் வெந்தயத்தை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இதில் உள்ள சில உட்பொருட்கள் குழந்தைகளுக்கு பிறப்பு கோளாறுகளை ஏற்படுத்தலாம்.
உடலில் இது ஈஸ்ட்ரோஜென் போல் வேலைசெய்வதால், இது ஹார்மோன் சென்சிடிவ் கேன்சர் உள்ளவர்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.
உடல் நல பாதிப்பு உள்ளவர்கள் வெந்தயத்தை தவிர்க்க வேண்டும் அல்லது மிகுந்த எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். இதை பயன்படுத்தும் முன் மருத்துவரின் பரிந்துரையை பெறவேண்டும்.
மருந்துடன் சேர்த்து உட்கொள்ளக்கூடாது. இரண்டையும் தனித்தனி நேரத்தில்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். இது பெரும்பாலும் மருந்துகளுடன் பக்கவிளைவை ஏற்படுத்தாது. எனினும், இதன் சில உட்பொருட்கள் மருந்துகள் போலவே செயல்படும் என்பதால் கவனம் தேவை.
டாபிக்ஸ்