Excessive Sweating: ‘இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு’… யப்பா சாமி.. என்னா வியர்வை! - தடுக்க தீர்வு என்ன?
பொதுவாக, நாம் உடற்பயிற்சி செய்யும் பொழுது, உடலில் காய்ச்சல் இருக்கும் பொழுது, பயப்படும் பொழுது, காரமான பொருட்களை சாப்பிடும் பொழுது வேர்வையானது வெளியேறும்.
நமது உடலில் அதிமான வியர்வை வெளிவருவதற்கான காரணம் குறித்து மருத்துவர் கார்த்திகேயன் தன்னுடைய யூடியூப் சேனலில் பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “நாம் உடற்பயிற்சி செய்யும் பொழுது, நம்முடைய தசைகள் அதிகமாக வேலை செய்கிறது. அப்படி அதிகமாக வேலை செய்வதற்கு, நமது உடலுக்கு சக்தி தேவையல்லவா?
இந்த சக்தியை கொடுக்கக் கூடியது தான் ATP (Adenosine triphosphate). இவை நம்முடைய தசைகளில் இருந்து உருவாகும். ஒவ்வொரு செல்லிலும் உருவாகக்கூடிய இந்த ATP, அதிகமான வெப்பத்தை வெளியேற்றும். இந்த வெப்பம் வெளியேறுவதற்கு நமது உடல் செய்யக்கூடிய செயல்முறைதான் வியர்வை வெளியேற்றம்.
பொதுவாக, நாம் உடற்பயிற்சி செய்யும் பொழுது, உடலில் காய்ச்சல் இருக்கும் பொழுது, பயப்படும் பொழுது, காரமான பொருட்களை சாப்பிடும் பொழுது வேர்வையானது வெளியேறும்.
நமது உடலில் வியர்வையை சுரக்க வைப்பதற்கு இரண்டு விதமான சுரப்பிகள் இருக்கின்றன. அதில் ஒரு சுரப்பி வெளியேற்றக் கூடிய வேர்வையில் நாற்றம் எதுவும் அடிக்காது. இன்னொரு விதமான சுரப்பியில் இருந்து வரக்கூடிய வியர்வையில் இருந்து நாற்றம் அடிக்கும்.
ஒரு விதமான சுரப்பியில் இருந்து வெளியேறும் வேர்வையில் நாற்றம் அடிப்பதற்கான காரணம், அதில் தோற்று கிருமிகள் கொழுப்பும் அடங்கியிருக்கும்.
எல்லோருக்கும் வியர்வை வருவது என்பது இயல்பான ஒரு விஷயம் தான். ஆனால் வழக்கத்தை விட அதிகமாக வியர்வை வரும் பட்சத்தில், நாம் மருத்துவரின் உதவியை கண்டிப்பாக நாடவேண்டும்.
சிலருக்கு பரம்பரையாகவே அதிகமாக வியக்கும் செயல்முறை உடலில் நடக்கும். சிலருக்கு சில விதமான தொற்றுக்களால் இந்த வேர்வை வெளியேற்றமானது நடக்கலாம்.
அவை இருதயத்தில் ஏற்படக்கூடிய தொற்றுகள், எலும்பில் ஏற்படக்கூடிய தொற்றுகள் உள்ளிட்டவற்றால் நடக்கலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் பொழுதும் அதிகமாக வேர்க்கும்.
இது தொடர்பான பிரச்சினைக்கு மருத்துவரை அணுகும் போது, அவர்கள் சோதனை செய்து பார்ப்பது, தைராய்டு மற்றும் ரத்த சர்க்கரை அளவு ஆகும்.
அதிகமான வியர்வை வெளியேற்றத்தை தடுப்பதற்கு டியோ ஸ்ப்ரே பயன்படுத்தலாம்
காலை, மாலை என இரண்டு நேரங்களில் குளிக்கலாம். சாக்ஸை நாள் ஒன்றுக்கு இரண்டு முறை மாற்றலாம். யோகா, தியானம் மேற்கொள்ளலாம். கதர் துணிகளை தளர்வாக அணியலாம்.
சுற்றுப்புறம் குளிர்ச்சியாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். கையில் எடுத்துச் செல்லக்கூடிய மின்விசிறியை பயன்படுத்தலாம் காரம் அதிகமான உணவுகள், மது, காஃபி உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும் .” என்று பேசினார்.
டாபிக்ஸ்