Jeera Health Benefits: எடை குறைப்பு, செரிமான பிரச்னை..!சீரக தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்தால் இத்தனை நன்மைகளா?
- உணவின் சுவையை கூட்டும் சீரகம், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. நாள்தோறும் காலையில் சீரக தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் உடல் ஆரோக்கிய நன்மைகளை பார்க்கலாம்
- உணவின் சுவையை கூட்டும் சீரகம், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. நாள்தோறும் காலையில் சீரக தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் உடல் ஆரோக்கிய நன்மைகளை பார்க்கலாம்
(1 / 8)
காலையில் தூங்கி எழுந்தவுடன் வெறும் வயிற்றி சீரக தண்ணீரை பருகலாம். இதனால் எடை குறைப்பு முதல் செரிமான ஆரோக்கியம் வரை பல நன்மைகளை பெறலாம்
(2 / 8)
சீரகத்தில் அதிக அளவில் ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது. தொடர்ச்சியாக இதை எடுத்துக்கொள்வதன் மூலம் நல்ல மாற்றத்தை கண்கூடாக காணலாம்
(3 / 8)
சீரகம் கலந்த நீரை சூடாக்கி விட்டு பின்னர் அதை வெதுவெதுப்பான சூட்டில் பருகுவதன் மூலம் ஆரோக்கிய செல்கள் உருவாகும். செரிமானத்தை மேம்படுத்தி, வளர்சிதை மாற்றம் விகிதத்தையும் அதிகரிக்க செய்கிறது
(5 / 8)
குறைவான கலோரிகள் கொண்டிருப்பதால் உடல் எடை குறைப்புக்கு வழி வகுக்கிறது. இரும்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது
(6 / 8)
சீரகத்தில் இடம்பித்திருக்கும் பாலிபீனால் என்கிற சேர்மானம் உடலில் ஏற்படும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கிறது. இதன் மூலம் பல்வேறு விதமான செரிமான கோளாறுகளுக்கு தீர்வு அளிக்கிறது
மற்ற கேலரிக்கள்