உங்களது டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டிய வைட்டமின் ஈ சத்துக்கள் நிறைந்திருக்கும் உணவு வகைகளை தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Feb 25, 2024

Hindustan Times
Tamil

வைட்டமின் ஈ இயல்பான உடல் செயல்பாட்டுக்கு அடிப்படையான சத்தாக உள்ளது. தொற்று பாதிப்பின் ஆபத்தை குறைப்பதுடன், கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்து, தசைகளுக்கு வலிமை தருகிறது

நாம் சாப்பிடும் உணவுகளில் வைட்டமின் ஈ பரவலாக இருப்பதால் அதன் குறைபாடு அசாதாரணமானது என்றாலும், உடல் ஆரோக்கியத்தை பேனி காக்க வைட்டமின் ஈ நிறைந்த முழு உணவுகளை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது நன்மை தரும்

ஸ்நாக்ஸ், சாலட், டாப்பிங் என பல்வேறு வகைகளில் பயன்படுத்தும் உணவாக இருந்து வரும் சூரியகாந்தி விதையில் போதிய அளவிலான வைட்டமின் ஈ நிறைந்திருக்கிறது. 100 கிராம் சூர்யகாந்தி விதையில் 35.17 மில்லி கிராம் அளவில் சூர்யகாந்தி விதை உள்ளது

ஸ்நாக்ஸ் ஆகவும் பல உணவுகளில் பல்வேறு வகைகளில் சேர்க்கப்படும் பாதாமில் 100 கிராம் அளவில் 25.63 மில்லி கிராம் வைட்டமின் ஈ நிறைந்திருக்கிறது

100 கிராம் அளவு உலர்ந்த வறுத்த வேர்க்கடலையில் 4.93 மில்லி கிராம் அளவு வைட்டமின் ஈ சத்து நிறைந்துள்ளது

குறைவான சர்க்கரை அளவு கொண்டிருக்கும் அவகோடா பழத்தில் 100 கிராம் அளவில் 2.07 மில்லி கிராம் வைட்டமின் ஈ உள்ளது

ஆங்கிலத்தில் ஸ்விஸ் சார்ட், தமிழில் பெரும்பாளைக் கீரை என்று அழைக்கப்படும் கீரை வகையில் 100 கிராம் அளவில் 1.89 மில்லி கிராம் வைட்டமின் ஈ சத்துக்கள் உள்ளன

வீட்டிலேயே நகங்களை பளபளப்பாக்க உதவும் டிப்ஸ்!

pixa bay