தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Rice Cooking: பிரஷர் குக்கரில் சோறு வடிப்பது ஆபத்தா? உண்மை என்ன? மருத்துவர் கூறும் அறிவியல் தகவல் இதோ!

Rice Cooking: பிரஷர் குக்கரில் சோறு வடிப்பது ஆபத்தா? உண்மை என்ன? மருத்துவர் கூறும் அறிவியல் தகவல் இதோ!

Kathiravan V HT Tamil

Apr 27, 2024, 06:15 AM IST

”சாதத்தை வடித்து சாப்பிடும் போது, அரிசி கஞ்சியும் வெளியில் சென்றுவிடுகிறது. இதனால் 10 முதல் 15 சதவீத ஸ்டார்ச் வெளியில் சென்றுவிடுவதால் குறைவான சத்தே கிடைக்கும்”
”சாதத்தை வடித்து சாப்பிடும் போது, அரிசி கஞ்சியும் வெளியில் சென்றுவிடுகிறது. இதனால் 10 முதல் 15 சதவீத ஸ்டார்ச் வெளியில் சென்றுவிடுவதால் குறைவான சத்தே கிடைக்கும்”

”சாதத்தை வடித்து சாப்பிடும் போது, அரிசி கஞ்சியும் வெளியில் சென்றுவிடுகிறது. இதனால் 10 முதல் 15 சதவீத ஸ்டார்ச் வெளியில் சென்றுவிடுவதால் குறைவான சத்தே கிடைக்கும்”

அரிசியை வடித்து சாப்பிடாமல், பிரஷர் குக்கர் மூலம் அவித்து சாப்பிடுவதே இன்றைய பல்வேறு நோய்களுக்கு காரணம் என கூறப்படுகிறது. ஆனால் இதன் பின்னணியில் உள்ள உண்மைகள் என்ன என்பதை மருத்துவர் அருண் குமார் விளக்குகிறார். 

ட்ரெண்டிங் செய்திகள்

Raisins for Weight Loss: எளிய முயற்சி, எதிர்பார்த்த பலன்! உடல் எடை குறைப்புக்கு உதவும் உலர் திராட்சை

Benefits of Red Banana: சுவை மிகுந்த செவ்வாழை பழத்தில் இருக்கும் உடல் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்

Summer Constipation Problems : மலச்சிக்கல் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறதா.. இத மட்டும் செய்யுங்கள்!

AC Room Side Effects : கவனம் மக்களே.. வெயில் தாங்காமல் எப்போதும் ஏசியில் இருப்பவரா நீங்கள்.. எத்தனை பிரச்சனைகள் பாருங்க

அரிசியில் உள்ள அடிப்படை சத்தான மாவுச்சத்து அமைலோ பெக்டின் என்கிற வகையில் உள்ளது. இதனை டைஜிஸ்டபில் ஸ்டார்ச் என அழைக்கப்படுகிறது. 

இதில் 10 சதவீதம் அரிசியின் வெளிப்புறமும், மீதி உள்ள 90 சதவீதம் அரிசியின் உள்புறத்தில் இருக்கும். 

சாதத்தை வடித்து சாப்பிடும் போது, அரிசி கஞ்சியும் வெளியில் சென்றுவிடுகிறது. இதனால் 10 முதல் 15 சதவீத ஸ்டார்ச் வெளியில் சென்றுவிடுவதால் குறைவான சத்தே கிடைக்கும். 

ஆனால் குக்கரில் அரிசியை வடித்து சாப்பிடும் போது உள்ளேயே அரிசி வேகுவதால் 10 சதவீத ஸ்டார்ச் கூடுதலாக கிடைக்கும் என ஆய்வுகள் கூறுவதாக மருத்துவர் அருண் குமார் கூறுகிறார். 

இந்த ஸ்டார்ட் வகை மாவுச்சத்து வேகமாக இன்சுலின் அளவை அதிகரித்து சர்க்கரையை தூண்டும் வாய்ப்பு உள்ளது. 

ஆனால் அடுப்பில் சாதம் வடித்து அந்த தண்ணீரை கொட்டிவிடுதால் மாவுச்சத்து முழுமையாக சென்றுவிடும் என்பது உண்மை இல்லை. 

பாலீஷ் செய்யப்பட்ட அரிசியில் நுண் சத்துக்கள் குறைவாக இருக்கும், ஆனால் புழுங்கல் அரிசியாக இருந்தால் அதில் நுண் சத்துக்கள் நிச்சயம் இருக்கும்.

சாதத்தை வடித்து அந்த தண்ணீரை கொட்டும் போது 10 சதவீத ஸ்டார்ச் மட்டுமின்றி நுண் சத்துக்களும் வெளியில் சென்றுவிடுகிறது. 

ஆனால் அதே நேரத்தில் பிரஷர் குக்கரில் சாதம் வடிப்பது நல்லதா என்று கேட்டால், குக்கரில் 120 டிகிரி செல்ஷியஸ் வரை குக் செய்யும் போது அரிசியில் உள்ள வைட்டமின் சத்துக்களும் செயல் இழக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவர் அருண் குமார் கூறுகிறார். 

ஆனால் உடல் பருமன் உள்ளவர்கள், சர்க்கரை நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் 10 முதல் 15 சதவீதம் மாவுச்சத்துக்களை குறைக்க வேண்டும் என நினைத்தால் பிரஷர் குக்கரில் சாதம் செய்யாமல், வழக்கமான பாத்திரம் மூலம் அரிசி வடித்து சாப்பிடும் போது, 15 சதவீதம் குறைவான கலோரிகள் கிடைக்கும். 

அரிசியை ஒரு குறிப்பிட்ட முறையில் சமைக்கும் போது, அதில் உள்ள கலோரிகள் பாதியாக குறைந்துவிடுவதாக இலங்கையில் உள்ள விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரிய வந்து உள்ளதாக மருத்துவர் அருண் குமார் கூறுகிறார். 

இலங்கையில் விளையும் குறிப்பிட்ட வகை அரிசியை வேக வைக்கும் போது, அதில் தேங்காய் எண்ணெய் 4 ஸ்பூன் சேர்த்து வேக வைத்து அந்த சாதத்தை குளிர்பதன பெட்டியில் வைத்துவிடுகின்றனர். 12 மணி  நேரத்திற்கு பின்னர் சிறிது சூடு செய்து அந்த சோற்றை சாப்பிடும்போது, அதில் உள்ள டைஜிஸ்டபில் ஸ்டார்ச்சில் 50 சதவீதம் ஜீரணிக்க முடியாத மாவுச்சத்தாக மாறிவிடுகிறது. இதனால் அதில் உள்ள கலோரி பாதியாக குறைந்துவிடுகிறது.

ஆனால் இந்த முறையில் அரிசியை சமைத்து சாப்பிடலாமா என்றால் அதனை செய்யக்கூடாது என்று மருத்துவர் அருண் குமார் கூறுகிறார். தேங்காய் எண்ணெய் சேர்த்து அரிசி வடிக்கும் போது கலோரிகள் குறைகிறதா என்பது குறித்து இந்தியாவில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

டாபிக்ஸ்