தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Rice Dal Payasam : தனித்தனியாக செய்திருப்பீர்கள்! இது அரிசி மற்றும் பருப்பு சேர்த்த பாயாசம்! இதோ ரெசிபி!

Rice Dal Payasam : தனித்தனியாக செய்திருப்பீர்கள்! இது அரிசி மற்றும் பருப்பு சேர்த்த பாயாசம்! இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Apr 23, 2024 08:00 AM IST

Rice Dal Payasam : பண்டிகை காலங்கள் மற்றும் விஷேச நாட்களில் ஒரேமாதிரி பாயாசம் செய்து போர் அடித்துவிட்டதா? இதோ இதுபோல் வித்யாசமாக பாயாசம் செய்து பார்த்து மகிழுங்கள்.

Rice Dal Payasam : தனித்தனியாக செய்திருப்பீர்கள்! இது அரிசி மற்றும் பருப்பு சேர்த்த பாயாசம்! இதோ ரெசிபி!
Rice Dal Payasam : தனித்தனியாக செய்திருப்பீர்கள்! இது அரிசி மற்றும் பருப்பு சேர்த்த பாயாசம்! இதோ ரெசிபி!

ட்ரெண்டிங் செய்திகள்

பச்சரிசி – ஒரு டேபிள் ஸ்பூன்

வெல்லம் – ஒன்றரை கப்

முந்திரி பருப்பு – 10

தேங்காய் துருவல் – அரை கப்

நெய் – 4 டேபிள் ஸ்பூன்

செய்முறை

கனமான கடாயை சூடாக்கி பாசிப்பருப்பு சேர்த்து வாசம் வரும் வரை வறுக்கவேண்டும்.

பின்னர் பச்சரிசியையும் சேர்த்து வறுத்துக்கொள்ளவேண்டும்.

மிக்ஸியில் வறுத்த அரிசியை ரவை போல் பொடித்துக்கொள்ளவேண்டும்.

குக்கரில் வறுத்த பாசிப்பருப்பு மற்றும் பொடித்த அரிசி ரவையை சேர்த்து 2 கப் தண்ணீர் சேர்த்து 4 விசில் விடவேண்டும். இரண்டும் நன்றாக வெந்திருக்கும்.

ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லம் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளவேண்டும்.

தேங்காய்த்துருவல் மற்றும் ஏலக்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும்.

கடாயில் வடிகட்டிய‌ வெல்லம், வேகவைத்த பருப்பு அரிசி கலவையை சேர்த்து சிறிது நெய் விட்டு கலந்து விடவேண்டும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கவேண்டும்.

பருப்பு கலவை கொதி வந்ததும் அரைத்த தேங்காய் விழுது நெய் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விடவேண்டும்.

கடாயில், நெய் விட்டு முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுத்து பாயாசத்தில் கலந்து பதினைந்து நிமிடங்கள் மிதமான சூட்டில் தேங்காயின் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைத்து இறக்கவேண்டும்.

சுவையான அரிசி பருப்பு பாயாசம் தயார். இதை உங்கள் வீட்டில் நடக்கும் விஷேச நாட்களில் செய்யயலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். பெரியவர்களுக்கும் பிடிக்கும்.

வழக்கமாக தனித்தனியாக இரண்டையும் ஒவ்வொரு சுவையில் செய்திருப்பீர்கள். இது இரண்டும் கலந்த வித்யாசமான சுவையில் நன்றாக இருக்கும். கட்டாயம் செய்து சாப்பிட்டு பாருங்கள்.

பாசிபருப்பின் நன்மைகள்

100 கிராம் பாசிப்பருப்பில், 6 கிராம் புரதச்சத்துக்கள் உள்ளது. இதில் வைட்டமின் இ, சி, கே ஆகிய சத்துக்கள் உள்ளன. இது இந்திய சமையலில் அதிகளவில் இடம்பெறுகிறது. இது எளிதாக செரிக்கக் கூடியது.

மற்ற பருப்புக்களுடன் ஒப்பிடும்போது, இந்த பாசிப்பருப்பில் கார்போஹைட்ரேட்கள் குறைவாக உள்ளது. இது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமான ஒன்று.

இதை நீங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால், எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

உடல் எடையை குறைக்க உதவுகிறது

பாசிபருப்பு, கோலேசிஸ்டோகினின் என்ற ஹார்மோன் இயக்கத்தை மேம்படுத்துகிறது. இதனால் நீங்கள் இதை சாப்பிட்ட பின்னர், உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைக்கொடுக்கும்.

இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

இது இரும்பு மற்றும் பொட்டாசிய சத்துக்கள் நிறைந்தது. இது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. தசைப்பிடிப்புக்கு எதிரான பாதுகாப்பை ஏற்படுத்துகிறது.

ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது

பாசிப்பருப்பில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு மற்றும் காப்பர் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் ஃபோலேட், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6 மற்றும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் நிறைந்தது.

இது கார்போஹைட்ரேட்களை குளுக்கோஸாக மாற்றுகிறது. அது உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. இதில் உள்ள ஃபோலிக் ஆசிட் ஆரோக்கியமான மூளை இயக்கத்துக்கு உதவுகிறது. டிஎன்ஏவுக்கும் உதவுகிறது.

நார்ச்சத்துக்கள் நிறைந்தது

இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. ஒரு கப் பாசிப்பருப்பில், 40.5 முதல் 71 சதவீதம் அளவு தினசரி ஊட்டச்சத்து அளவை பூர்த்தி செய்கிறது.

இதில் உள்ள நார்ச்சத்துக்கள், ரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவை குறைக்கிறது. இதில் உள்ள அதிக புரதச்சத்துக்கள், சைவ உணவுகள் மட்டுமே உண்பவர்களுக்கு போதிய புரதத்தைக் கொடுக்கிறது.

நீரிழிவு நோயை தடுக்க உதவுகிறது

இது உடலின் இன்சுலின், குளுக்கோஸ் மற்றும் கொழுப்பு அளவை குறைக்கிறது. இது ரத்த சர்க்கரை அளவை குறைத்து, நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தை குறைக்க உதவுகிறது.

செரிமானத்தை அதிகரிக்கிறது

ஃபேட்டி ஆசிட் தொடரை உருவாக்குகிறது. இது வயிற்றுப்பகுதிகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இதில் அழற்சிக்கு எதிரான உட்பொருட்கள் உள்ளது.

WhatsApp channel

டாபிக்ஸ்