தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Fitness Tips: உங்கள் தொடைப்பகுதி கொழுப்பை குறைக்கும் பயிற்சிகள்!

Fitness Tips: உங்கள் தொடைப்பகுதி கொழுப்பை குறைக்கும் பயிற்சிகள்!

I Jayachandran HT Tamil

Mar 28, 2023, 09:49 PM IST

உங்கள் தொடைப்பகுதியில் உள்ள கொழுப்பை குறைக்கும் பயிற்சிகள் குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.
உங்கள் தொடைப்பகுதியில் உள்ள கொழுப்பை குறைக்கும் பயிற்சிகள் குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

உங்கள் தொடைப்பகுதியில் உள்ள கொழுப்பை குறைக்கும் பயிற்சிகள் குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

உடல் எடையத் தாங்க பலமான தொடைகள் அவசியம். தொடைகளை உறுதிப்படுத்தும் பயிற்சிகள் பல இருந்தாலும் சில பயிற்சிகள் விரைவில் நல்ல பலனைத்தரக்கூடியவை. அவ்வகையில் இந்த பயிற்சி நல்ல பலனை தரக்கூடியைது.

ட்ரெண்டிங் செய்திகள்

Mint Water Benefits : தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை பருகுங்கள்! கோடையும் குளுமையாகும்!

Garlic Chutney : நாவில் எச்சில் ஊறுவைக்கு பூண்டு சட்னி! ஊத்தப்பம் அல்லது ஆப்பத்துடன் தொட்டு சாப்பிட சுவை அள்ளும்!

Causes of Excessive Fiber : நார்ச்சத்துக்கள் உடலுக்கு நல்லதுதான்? ஆனால் அளவுக்கு மிஞ்சும்போது என்னவாகும்?

Masturbation : சுய இன்பம் : கர்ப்ப காலத்தில் செய்யலாமா? புராஸ்டேட் புற்றுநோயை குறைக்குமா? – விளக்கம் இதோ!

இந்த பயிற்சியின் பெயர் லையிங் சைடு லெக் ரைஸ். இந்த பயிற்சி செய்ய முதலில் தரையில் ஒருக்களித்துப் படுக்க வேண்டும். வலது கையைத் தலைக்கு மேல் நீட்டி, அதன் மீது தலையை வைத்துக்கொள்ள வேண்டும். இடது கையை முட்டிவரை மடித்து, வலது பக்கமாக தரையில் பதிக்க வேண்டும். வலது காலை சற்று மடித்து முன்புறமாக வைக்க வேண்டும். இடது காலை மட்டும் மேலே உயர்த்தி, ஐந்து விநாடிகள் இந்த நிலையில் இருக்க வேண்டும்.

பின்னர், படிப்படியாக பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோல 15 முறை செய்துவிட்டு, இடது பக்கத்துக்கும் செய்ய வேண்டும். நன்கு பழகிய பின்னர் எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.

அடுத்த பயிற்சி ஸ்குவாட். உங்களால் தூக்க முடிந்தளவுக்கு இரு கைகளிலும் டம்பள்ல்ஸ் அல்லது வெயிட் பார் வைத்துக் கொண்டு சேரில் உட்காருவது போல குனிந்து நிமிர வேண்டும். இந்தப் பயிற்சியை ஒரு தடவைக்கு 15 முறைகள் என்ற கணக்கில் தினமும் 10 முறை செய்ய வேண்டும். இதனால் தொடைப்பகுதி வலுவடையும்.

இந்த இரு பயிற்சிகளையும் தொடர்ந்து செய்து வந்தால் தொடையின் பக்கவாட்டுப் பகுதிகள் வலுவடையும். பக்கவாட்டில் இருக்கும் தசைகள் இறுகும். தொடைப் பகுதியில் உள்ள கொழுப்பு கரையும்.

டாபிக்ஸ்