தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Garlic Chutney : நாவில் எச்சில் ஊறுவைக்கு பூண்டு சட்னி! ஊத்தப்பம் அல்லது ஆப்பத்துடன் தொட்டு சாப்பிட சுவை அள்ளும்!

Garlic Chutney : நாவில் எச்சில் ஊறுவைக்கு பூண்டு சட்னி! ஊத்தப்பம் அல்லது ஆப்பத்துடன் தொட்டு சாப்பிட சுவை அள்ளும்!

Priyadarshini R HT Tamil

May 07, 2024, 01:00 PM IST

google News
Garlic Chutney : ஓட்டல் ஸ்டைலில் பூண்டு சட்னி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
Garlic Chutney : ஓட்டல் ஸ்டைலில் பூண்டு சட்னி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Garlic Chutney : ஓட்டல் ஸ்டைலில் பூண்டு சட்னி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

பூண்டு – ஒரு கைப்பிடியளவு

செக்கு நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 5

தக்காளி - அரைப்பழம்

வர மிளகாய் – 2

கஷ்மீரி மிளகாய் – 2

புளி – 2 கொட்டைகள்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – ஒரு ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – 2 கொத்து

செய்முறை

ஒரு கடாயில் 4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து, சூடானவுடன், அதில் பூண்டு, சின்னவெங்காயம், தக்காளி, வரமிளகா, கஷ்மீரி மிளகாய், புளி, உப்பு என அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவேண்டும்.

அதை எடுத்து ஆறவைத்து, மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சூடாக்கி, அதில் கடுகு, உளுந்து சேர்த்து பொரிந்தவுடன், கறிவேப்பிலையை சேர்க்க வேண்டும்.

பின்னர் அதில் அரைத்த சட்னியை சேர்த்து அடுப்பை உடனே அணைத்துவிட்டு, கலந்து இறக்கவேண்டும்.

இதை டிஃபன் அனைத்துக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம் என்றாலும், ஊத்தப்பம் மற்றும் ஆப்பத்துக்கு நல்ல காம்போவாக இருக்கும்.

பூண்டில் உள்ள நன்மைகள்

பொதுவாக பூண்டு மருத்துவ குணங்கள் நிறைந்தது. பூண்டை பச்சையாக சாப்பிடுவது நல்லது. ஆனால் காரம் அதிகம் இருக்கும். வாயில் துர்நாற்றம் வீசும். அதனால் இதை பச்சையாக சாப்பிட மாட்டார்கள். அதனால் பூண்டை பல்வேறு உணவுகளிலும் சேர்த்து எடுத்துக்கொள்கிறார்கள். அப்படி இந்த பூண்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

நாம் சாப்பிட்ட சாப்பாட்டில் உள்ள சத்தை எளிதாக உடல் உறிஞ்ச உதவுகிறது. உடலில் தேங்கும் கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகிறது. 

வாயுத்தொல்லையை சரிசெய்யவும், இடுப்பைச் சுற்றியுள்ள தொப்பையைக் குறைக்கவும் உதவுகிறது. உடல் வளர்சிதை அதிகரித்து, கெட்ட கொழுப்பை வெளியேற்றிவிடுகிறது.

பூண்டில் உள்ள ஆன்டி பாக்டீரியல் பண்புகள், ரத்த நாளங்களில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை வெளியேற்றுகிறது. இதை தினமும் எடுத்துக்கொள்ள உடலில் ஆரோக்கியத்தை அள்ளித்தருகிறது.

உடலில் ஃபரி ராடிக்கல்களை எதிர்த்து போராடி உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது. உடலில் கொழுப்பை சீராக பராமரிக்க உதவுகிறது. 

உடலில் உள்ள தமனிகளை சரிசெய்து இதயநோய் வராமல் பாதுகாக்கிறது. முக்கியமாக எலும்புகளுக்கு உறுதியைக் கொடுத்து, எலும்புகள் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

பூண்டை சாப்பிடும்போது அது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது. உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். உடலில் தங்கியிருக்கும் கெட்ட வாயுக்களை கரைத்து வெளியேற்றும். வாழ்நாளை நீட்டிக்கும். 

உடலில் சோர்வை நீக்கும். ரத்த அழுத்தம், கொழுப்பு, மாரடைப்பு, பெருந்தமனி அடைப்பு ஆகியவற்றை தடுக்கிறது. ரத்த நாளங்களை சீரான முறையில் வேலை செய்ய உதவுகிறது.

உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதால் உடல் எடை குறைக்க உதவும். ஒரு மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும். கை-கால் வலியைப்போக்கும். வாயுத்தொல்லை முற்றிலும் குறைக்கும்.

வறுக்காத பூண்டை சுளுக்குக்கு மருந்தாகப்பயன்படுத்தலாம். தேமலுக்கும் பூண்டு பயன்படுத்தப்படுகிறது.

பூண்டை இடித்து சுளுக்கு ஏற்பட்ட இடத்தின் மீது தடவினால் சுளுக்கு குணமாகும். பூண்டு மற்றும் வெற்றிலையை அரைத்து தேமல் மீது தடவினால் தேமல் மறைந்து ஓடும்.

ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பாலில் பூண்டை கொதிக்கவைத்து, பனங்கற்கண்டு சேர்த்து பருகினால் அந்தப் பிரச்னைகள் குணமாகும்.

புற்றுநோயாளிகள் இந்த பூண்டை வேகவைத்து சாப்பிடும்போது, அது அவர்களின் வலியை குறைக்க உதவும்.

இத்தனை நன்மைகள் நிறைந்த பூண்டை தினமும் உணவில் சேர்த்து அதன் முழுப்பலன்களையும் பெறுங்கள்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி