Dry Cough Home Remedy : டானிக் பாட்டிலை தூக்கி வீசுங்க! வறட்டு இருமலை அடித்து விரட்ட இந்த 2 பொருட்கள் மட்டும் போதும்!
Sep 20, 2024, 01:56 PM IST
Dry Cough Home Remedy : வறட்டு இருமலை அடியோடு அடித்து விரட்ட இந்த இரண்டு பொருட்கள் மட்டும் போதும். எவ்வித மருந்தும் தேவையில்லை.
மாறிவரும் வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அதற்கு நாம் சில மருத்துவகுறிப்புக்களை, குறிப்பாக நமது வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தே செய்யக்கூடியவற்றை தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
வறட்டு இருமல் ஏற்பட காரணங்கள்
அலர்ஜி, ஆஸ்துமா, வேதிப்பொருட்கள் மற்றும் எரிச்சல் ஏற்படுத்தும் காற்றை சுவாசிப்பது.
மூச்சுக்குழாய் வீக்கம்
தொண்டை கரகரப்பு
கேஸ்ட்ரோஈசோபாஜல் ரிப்ளக்ஸ்
மருந்துகள் ஏற்படுத்தும் பக்கவிளைவுகள்
குறிப்பாக உயர் ரத்த அழுத்த மருந்துகள் ஏற்படுத்தும் பக்கவிளைவுகள்
மூக்கின் உள்புறத்தில் வீக்கம்
உள் நாக்கு வளர்ச்சி
நிமோனியா
புகைத்தல்
குரல்வளையில் பிரச்னை
நாள்பட்ட வறட்டு இருமலால் ஏற்படும் பிரச்னைகள்
சில நேரங்களில் வறட்டு இருமல் கூட உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோயாக மாறும் வாய்ப்பு உண்டு. எனவே நாள்பட்ட வறட்டு இருமல் ஏற்பட்டால், நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகுவதே சிறந்தது.
இதயம் செயலிழப்பு, சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ், நாள்பட்ட நுரையீரல் தொற்று, நுரையீரல் புற்றுநோய், உறக்க கோளாறுகள், காசநோய் போன்ற ஆபத்துக்களை ஏற்படுத்தும்.
பொதுவாக வறட்டு இருமல் வரும்போது செய்யவேண்டியவை
அதிகமாக தண்ணீர் பருகவேண்டும்.
இருமல் மருந்துகள் அல்லது மாத்திரைகள் உட்கொள்ளவேண்டும்.
தேன் பருக்வேண்டும்.
வறட்டு இருமலை தவிர்க்க
வேதிப்பொருட்கள், மணமூட்டிகள், அலர்ஜி மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும் மணங்களை முகங்களை நுகர்ந்து பார்க்கக்கூடாது.
கைகளை கழுவுங்கள், நல்ல சுகாதார பழக்கங்களை கற்றுக்கொள்ளுங்கள். சுவாச கோளாறுகள் அடிக்கடி ஏற்படாமல் தடுத்துக்கொள்ளுங்கள்.
புகைத்தலை நிறுத்தவேண்டும். புகைப்பிடிப்பவருட்ன் இருப்பதையும் குறைக்கவேண்டும்.
எப்போது மருத்துவரை அணுகவேண்டும்?
இருமும்போது ரத்தம் வந்தால், மூச்சு விடுவதில் சிரமம், மேல் மூச்சு வாங்குவது, சோர்வு, குளிர், காய்ச்சல், நெஞ்சுவலி ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகவேண்டும்.
ஆனால் தீவிரமாக இல்லாதபோது உங்களுக்கு சில வீட்டு குறிப்புகளே உதவும் அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
சளி பிடிப்பதற்கு முன்னர் வறட்டு இருமல் ஏற்படும். அடுத்து இருமல், பின்னர் சளிஇருமல் ஏற்படும். அந்த சளியை வெளியேற்றினால்தான் உங்களுக்கு வறட்டு இருமல் குறையும். அப்படி ஏற்படுவதை விரட்டவேண்டுமெனில் அதற்கு வெற்றிலை மற்றும் தேன் மட்டுமே போதும்.
வறட்டு இருமலை அடியோடு விரட்ட உதவும் எளிய குறிப்புகள்
தேவையான பொருட்கள்
வெற்றிலை – 2
தேன் – சிறதளவு
செய்முறை
வெற்றிலையை இடித்து சாறு பிழிந்துகொள்ளவேண்டும். அதை 5 மில்லி லிட்டர் எடுத்து அதில் 5 மில்லி லிட்டர் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட சளி குணமாகும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்