Brahma Muhurtam : பிரம்ம முகூர்த்தத்தில் எந்த எண்ணெய்யில் விளக்கு ஏற்றலாம்.. இதனால் கிடைக்கும் நன்மைகளை பாருங்க!
Brahma Muhurtam : பிரம்ம முகூர்த்தம் என்பது அதிகாலை 3 மணியில் இருந்து தொடங்குகிறது. அது உஷத் காலம் என்று அழைக்கப்படுகிறது. உஷத் காலம் என்றால் சூரியன் உதிப்பதற்கு முன்பு உள்ள அதிகாலை பொழுதை குறிக்கும். அந்த சமயத்தில் தேவர்கள் சிவன் பார்வதி, மகாலட்சுமி போன்ற தெய்வங்கள் வானத்தில் சஞ்சரிப்பதாக ஐதீகம்.
Brahma Muhurtam : பொதுவாக காலையில் விளக்கு ஏற்றி கடவுளை வணங்குவது மிகவும் நல்லது. அதிலும் காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றி வழிபடுவதால் நம் வீட்டில் கஷ்டங்கள் நீங்கி செல்லம் பெருகும். நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். உங்கள் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும்.வாழ்வில் நிம்மதி பெருகும்.
ஆத்மஞான மையம் யூடியூப் சேனலில் ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையற்கரசி பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள் குறித்து கூறியிருக்கும் தகவல்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
பிரம்ம முகூர்த்த நேரம் என்றால் என்ன
பிரம்ம முகூர்த்த நேரம் என்பது அதிகாலை 3 மணியில் இருந்து தொடங்குகிறது. அது உஷத் காலம் என்று அழைக்கப்படுகிறது. உஷத் காலம் என்றால் சூரியன் உதிப்பதற்கு முன்பு உள்ள அதிகாலை பொழுதை குறிக்கும். அந்த சமயத்தில் தேவர்கள் சிவன் பார்வதி, மகாலட்சுமி போன்ற தெய்வங்கள் வானத்தில் சஞ்சரிப்பதாக ஐதீகம். 3 மணிக்கு எழுந்து கொள்ள முடியாதவர்கள் குறைந்தது 4 மணியில் இருந்து 5.30 மணிக்குள் விளக்கு ஏற்றலாம்.
பொதுவாக பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றும் முன் குளித்து விட்டு விளக்கு ஏற்றுவது நல்லது. முடியாத பெண்கள் மாதவிடாய் ஆன நாட்களில், தாம்பத்திய உறவில் இருந்த நாட்களில் கண்டிப்பாக குளித்து முடித்த பின்னர்தான் விளக்கு ஏற்ற வேண்டும். மற்ற நாட்களில் காலையில் எழுந்து முகம் கை கால் களை சுத்தமாக கழுவிய பிறகு விளக்கு ஏற்றலாம்.
வீட்டில் மற்றவர்கள் தூங்கும் போது விளக்கு ஏற்றலாம்
வீட்டில் பூஜை அறை தனியாக இருந்தால் வீட்டில் மற்றவர்கள் படுத்திருந்தாலும் விளக்கு ஏற்றலாம். மற்றபடி ஒரே இடத்தில் எல்லோரும் படுக்கும் சூழல் இருக்கும் வீடுகளில் குறைந்த பட்சம் கடவுள் படம் இருக்கும் இடத்திற்கு நேராக மட்டும் யாரும் படுக்காமல் இருக்கும் படி பார்த்துக்கொள்வது நல்லது. வாய்ப்பு உள்ளவர்கள் வீட்டு வாசலை கூட்டி தெளித்த பிறகு விளக்கு ஏற்றுவது நல்லது. வாய்ப்பு இல்லாதவர்கள் சாமி அறை இருக்கும் இடத்தையோ அல்லது சாமி செல்ப் இருக்கும் இடைத்தையோ துடைத்து விட்டு சிறிதாக கோலம் போட்டு விட்டு விளக்கு ஏற்றலாம்.
எத்தனை முக விளக்கு ஏற்றுவது நல்லது.
பொதுவாக ஒரு வீட்டில் இரண்டு விளக்கு ஏற்றுவது மிகவும் விஷேசம். அல்லது 5 விளக்கு வரையும் ஏற்றி கொள்ளலாம். அது அவர் அவர் விருப்பத்தை பொறுத்தது. குறைந்த பட்சம் இரண்டு விளக்குகள் ஏற்றலாம். ஆனால் முடிந்த வரை 1 விளக்கு ஏற்றுவதை தவிர்ப்பது நல்லது.
பிரம்ம முகூர்த்த விளக்கை ஆண்களும் கூட ஏற்றலாம்
வீட்டில் பெண்கள் இல்லாத நேரத்தில் வீட்டில் இருக்கும் ஆண்களும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கு ஏற்றலாம். குழந்தைகளும் பிரம்ம முகூர்த்த விளக்கை ஏற்றலாம்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
ஆன்மீகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்