தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Dosa : ஹெல்த்தியான கொண்டைக்கடலை தோசை.. புரதம் நிறைந்த இந்த தோசையை ஒரு முறை செஞ்சுபாருங்க.. ஊட்டச்சத்து நிறைந்தது!

Dosa : ஹெல்த்தியான கொண்டைக்கடலை தோசை.. புரதம் நிறைந்த இந்த தோசையை ஒரு முறை செஞ்சுபாருங்க.. ஊட்டச்சத்து நிறைந்தது!

Sep 14, 2024, 02:31 PM IST

google News
Dosa : கொண்டைக்கடலையில் கொலஸ்ட்ரால் குறைவாக இருப்பதால் சாப்பிடுவது மிகவும் நல்லது. இத்தனை நன்மை கொண்ட கொண்டைக்கடலையில் தோசை செய்வது மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும். தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் சுவை அமோகமாக இருக்கும்.
Dosa : கொண்டைக்கடலையில் கொலஸ்ட்ரால் குறைவாக இருப்பதால் சாப்பிடுவது மிகவும் நல்லது. இத்தனை நன்மை கொண்ட கொண்டைக்கடலையில் தோசை செய்வது மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும். தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் சுவை அமோகமாக இருக்கும்.

Dosa : கொண்டைக்கடலையில் கொலஸ்ட்ரால் குறைவாக இருப்பதால் சாப்பிடுவது மிகவும் நல்லது. இத்தனை நன்மை கொண்ட கொண்டைக்கடலையில் தோசை செய்வது மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும். தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் சுவை அமோகமாக இருக்கும்.

Dosa : தோசை என்றாலே அதற்கு தனி ரசிகர் வட்டாரம் இருக்கத்தான் செய்கிறது. உங்களுக்கு தோசை பிடிக்குமா? காலை,மதியம், இரவு என 3 நேரம் தோசை கொடுத்தாலும் சாப்பிடுவேன் என்பவரா நீங்கள். ஆனால் எப்பொழுதும் ஒரே தோசையை சாப்பிடுவதற்கு பதிலாக, புதிதாக ஒரு முறை கொண்டைக்கடலை தோசையை முயற்சிக்கவும் நினைவாற்றலைக் கூர்மைப்படுத்தவும் கொண்டைக்கடலை பயனுள்ளதாக இருக்கும். இது உடலில் செரோடோனின் என்ற ஹார்மோனை அதிகரிக்கச் செய்கிறது. இது உங்கள் மூளை நன்றாக செயல்பட உதவுகிறது. மன அழுத்தத்தை குறைக்கிறது. கொண்டைக்கடலை இதய நோய்க்கு சிகிச்சையளிப்பதிலும் பயனுள்ளதாக இருக்கும். அது மட்டும் இல்லாமல் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. கொண்டைக்கடலையில் கொலஸ்ட்ரால் குறைவாக இருப்பதால் சாப்பிடுவது மிகவும் நல்லது. இத்தனை நன்மை கொண்ட கொண்டைக்கடலையில் தோசை செய்வது மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும். தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் சுவை அமோகமாக இருக்கும். கொண்டைக்கடலையில் புரதச்சத்து அதிகம் இருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமானது இந்த தோசை. இந்த தோசையை மிகவும் செய்வது மிகவும் எளிது.

மிருதுவான கடலை தோசைக்குத் தேவையான பொருட்கள்

கொண்டை கடலை - ஒரு கப்

அரிசி - அரைக்கப்

மிளகாய் - நான்கு

இஞ்சி - சிறிய துண்டு

சீரகம் - ஒரு ஸ்பூன்

தண்ணீர் - போதுமானது

கருப்பு மிளகு - ஒன்று

உப்பு - சுவைக்க

மிருதுவான கொண்டை கடலை தோசை செய்முறை

1. ஒரு கப் கொண்டைக்கடலையை 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அதேபோல் கப்பில் அரைக்கப் அரிசி மற்றும் ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து 8 மணி நேரம் ஊற விட வேண்டும்.

2. அதன் பிறகு கொண்டைக்கடலை மற்றும் அரிசியை மிக்ஸி ஜாரில் அல்லது கிரைண்டரில் சேர்த்து அரைக்க வேண்டும்.

3. அத்துடன் பச்சை மிளகாய், இஞ்சி, தண்ணீர் , தேவையான அளவு உப்பு சேர்த்து மற்றும் தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்.

4. முழு கலவையையும் ஒரு பாத்திரத்திற்கு மாற்றி 8 மணிநேரம் மூடி வைக்கவும்

5. பின்னர் அதில் கொத்தமல்லி தழை, சீரகம், மிளகு தூள், சேர்த்து நன்கு கலக்கவும்.

6. தோசை பதத்திற்கு மிருதுவாக வேண்டுமானால் மேலும் தண்ணீர் சேர்க்கவும்.

7. இப்போது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கிய பின் போதுமான அளவு மாவை எடுத்து வழக்கம் போல் தோசை ஊற்றவும்

8. தோசை ஒரு பக்க வெந்த பிறகு அதை திரும்பி போட்டு போதுமான அளவில் எண்ணெய் சேர்க்க வேண்டும்.

10. அவ்வளவுதான் சுவையான மொறு மொறு கொண்டைக்கடலை தோசை ரெடி.

11. தேங்காய் சட்னியுடன் சாப்பிட்ட, அதன் சுவை அற்புதமாக இருக்கும். இது மிருதுவாக இருக்கும். அதனால் குழந்தைகளுக்கும் பிடிக்கும்.

நாம் கடைகளில் கூட பெரும்பாலும் கொண்டைக்கடலை தோசையை பார்த்திருக்க மாட்டோம். ஆனால் நீங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள். இந்த தோசையின் சுவை சற்று வித்தியாசமானது. குறிப்பாக தேங்காய் சட்னியுடன் சாப்பிடும் போது, ​​இரண்டும் சேர்ந்தால் அற்புதமாக இருக்கும். இந்த தோசைக்கு தக்காளி சட்னி, புதினா சட்னி, சாம்பாருடன் சேர்த்து சாப்பிடவும் ருசி அருமையாக இருக்கும். ஒருமுறை செய்து பாருங்கள்.

அறுசுவை உணவுகளின் குறிப்புகளை நீங்களும் அறிந்து கொள்ள, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள். சமூக வலைதள பக்கங்களிலும் எங்களை தொடரலாம்.

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை