Diabetes : 300, 400 ன்னு சர்க்கரை அளவு கூடிக்கிட்டே போகுதா.. இந்த காயில் சட்னி செஞ்சு சாப்பிட்டாலே சட்டுனு குறையும்!-diabetes will the sugar level keep increasing to 300 400 make chutney and eat it sugar level will be controlled - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Diabetes : 300, 400 ன்னு சர்க்கரை அளவு கூடிக்கிட்டே போகுதா.. இந்த காயில் சட்னி செஞ்சு சாப்பிட்டாலே சட்டுனு குறையும்!

Diabetes : 300, 400 ன்னு சர்க்கரை அளவு கூடிக்கிட்டே போகுதா.. இந்த காயில் சட்னி செஞ்சு சாப்பிட்டாலே சட்டுனு குறையும்!

Pandeeswari Gurusamy HT Tamil
Sep 12, 2024 01:01 PM IST

Sundakkai Chutney Recipe: ஒரு கசப்பான காய்களில் முக்கியமானது சுண்டைக்காய். குழந்தைகள் சுண்டக்காய் குழம்பு என்றாலே அலறியடித்து ஓடுகின்றனரா.. இந்த மாதிரி சுண்டைக்காயில் கெட்டியாக சட்னி செய்து கொடுங்கள். ருசி அருமையாக இருக்கும். சூடான சாதம், இட்லி, ஊத்தாப்பத்திற்கு இந்த சட்னி சரியான காமினேஷன்.

Diabetes : 300, 400 ன்னு சர்க்கரை அளவு கூடிக்கிட்டே போகுதா.. இந்த காயில் சட்னி செஞ்சு சாப்பிட்டாலே சட்டுனு குறையும்!
Diabetes : 300, 400 ன்னு சர்க்கரை அளவு கூடிக்கிட்டே போகுதா.. இந்த காயில் சட்னி செஞ்சு சாப்பிட்டாலே சட்டுனு குறையும்!

இரத்தத்தில் சர்க்கரை அளவு கூட்டிக்கொண்டே இருந்தால் சுண்டக்காயை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் சர்க்கரை அளவு கட்டுக்குள் வர வாய்ப்பு உள்ளது. 

சுண்டைக்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்

சுண்டைக்காய் - 1/4 கிலோ

சின்ன வெங்காயம் - 1/4 கிலோ

தேங்காய் - அரைமுடி

வரமிளகாய் - 10

பூண்டு - 10 பல்

உப்பு - தேவையான அளவு

புளி - நெல்லிக்காய் அளவு

கறிவேப்பிலை - 5 கொத்து

கடுகு 1/4 ஸ்பூன்

சீரகம் - 1 ஸ்பூன்

கடலெண்ணெய் - 6 ஸ்பூன்

சுண்டைக்காய் சட்னி செய்முறை

கால் கிலோ அளவு சுண்டைக்காயை நன்றாக உப்பு போட்டு கழுவி எடுக்க வேண்டும்.

பின்னர் சுண்டைக்காயை லேசாக தட்டி அதில் உள்ள விதைகளை கழுவி எடுத்து கொள்ள வேண்டும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கி 4 ஸ்பூன் கடலெண்ணெய் விட்டு சுண்டைக்காயை நன்றாக வதக்க வேண்டும். சுண்டக்காய் வதங்கிய பின் அதை ஒரு தட்டில் கொட்டி ஆற விட வேண்டும்.

பின்னர் கடாயில் மேலும் கொஞ்சம் எண்ணெய் விட்டு ஒரு ஸ்பூன் உளுந்தம்பருப்பு ஒரு ஸ்பூன் கடலை பருப்பு சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் சீரகத்தையும் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பருப்பு சிவந்து வரும் போது அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

தோல் நீக்கிய பூண்டையும் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் தேங்காய் நன்றாக வதங்கிய பின் அதில் 5 கொத்து கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். கடைசியாக வர மிளகாயை காம்பு நீக்கி சேர்த்து கொள்ள வேண்டும். அதில் ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளியை சேர்த்து கொள்ள வேண்டும். இப்போது வதக்கிய பொருட்களை நன்றாக ஆற விட வேண்டும்.

பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்தால் ருசியான சுண்டைக்காய் சட்னி ரெடி

ஒரு தாளிப்பு கரண்டியை சூடாக்கி இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்ததால் அதன் ருசி இன்னும் அதிகமாக இருக்கும்.

குறிப்பு : இந்த சட்னியை அம்மியில் அரைத்தால் அதன் சுவை அருமையாக இருக்கும். சட்னியை கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.

அறுசுவை உணவுகளின் குறிப்புகளை நீங்களும் அறிந்து கொள்ள, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள். சமூக வலைதள பக்கங்களிலும் எங்களை தொடரலாம்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.