கண்ணாடி போல் இருக்கவேண்டாம்; இதயம் இரும்பாக இருக்கட்டும்! யாராலும் உடைக்க முடியாது! அதற்கு இந்த பழக்கங்கள் உதவும்!
Oct 28, 2024, 04:45 PM IST
கண்ணாடி போல் இருக்கவேண்டாம், இதயதத்தை இரும்பாக இருக்கட்டும். அப்போதுதான் யாராலும் எளிதில் உடைக்க முடியாது. அதற்கு என்ன செய்யவேண்டும் என்று பாருங்கள்.
நீங்கள் தினமும் பழகும் சில நடவடிக்கைகள் உங்களின் இதய ஆரோக்கியத்தையும், ஆற்றலையும் அதிகரிக்கும். அவை என்னவென்று தெரிந்துகொண்டு கட்டாயம் கடைபிடியுங்கள். உங்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க, இந்த அன்றாட நடவடிக்கைகள் கட்டாயம் உதவும். அன்றாடம் நீங்கள் செய்யக்கூடிய தினசரி நடவடிக்கைகள், இதை நீங்கள் தொடர்ந்து செய்யும்போது, அது உங்கள் இதயம் இயங்குவதற்கு குறிப்பிட்ட அளவு உதவுகிறது. இந்த நடவடிக்கைகளை நீங்கள் வழக்கமாக்கிக்கொண்டால், அது உங்களுக்கு வலு சேர்க்கும். இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும். ரத்த ஓட்டத்தை சீராக்கும். உங்கள் உடல் எடுத்துக்கொள்ளும் ஆக்ஸிஜனை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ளும். இதய ஆரோக்கியமே ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் என்பதால், உங்கள் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க நீங்கள் இந்த நடவடிக்கைகளை கட்டாயம் செய்யவேண்டும்.
சில நிமிடங்கள் வேகமான நடை
நீங்கள் தினமும் வேகமாக சில நிமிடங்கள் கட்டாயம் நடக்கவேண்டும். இது உங்கள் இதய துடிப்பை அதிகரித்து, உங்கள் ரத்த ஓட்டத்தை உயர்த்தும், இது உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உங்களுக்கு மூட்டுகளில் அழுத்தம் இருந்தால் அதையும் குறைக்கும். இதயத்துக்கும் நல்லது.
சைக்கிள் பயிற்சி
உங்கள் இதய ஆரோக்கியத்தை சைக்கிள் பயிற்சி மேம்படுத்தும். நீங்கள் சைக்கிள் ஓட்டும்போது, அதில் உடலின் அதிகளவு தசைகள் ஈடுபடுகின்றன. எனவே நீங்கள் தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் மட்டும் சைக்கிள் ஓட்டினால் போதும். அது உங்களுக்கு இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும். இதனால் உங்கள் கால்களும் வலுப்பெறும். இடுப்பு, தொடைக்கும் நல்ல ஷேப் கிடைக்கும்.
நீச்சல்
நீச்சல், இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க ஒரு சிறந்த பயிற்சி. ஆனால் அதை பெரிய அளவில் கண்டுகொள்வதில்லை. இது உங்கள் இதய துடிப்பை நன்முறையில் பராமரிக்கிறது. நீச்சர் உங்கள் மூட்டு வலிகளையும் குறைக்கிறது. அனைத்து வயதினருக்கும் ஏற்றது. உங்களை ஃபிட்டாக வைக்கவும் உதவுகிறது.
ஸ்கிப்பிங்
ஸ்கிப்பிங் ஒரு ஜாலியான வொர்க் அவுட்தான். நீங்கள் கயிறு வைத்து ஸ்கிப்பிங் செய்யும்போது, அது உங்களின் இதயத் துடிப்பை அதிகரிக்கிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உங்கள் உடலுக்கு வலுவைக் கொடுக்கிறது. உங்கள் உடலை சமநிலைப்படுத்துகிறது. தினமும் 15 நிமிடங்கள் ஸ்கிப்பிங் செய்தாலே போதும். அது உங்களுக்கு சிறந்த இதய ஆரோக்கியத்தை கொடுக்கிறது. 30 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள் 10 நிமிடம் ஸ்கிப்பிங் செய்தாலே கிடைக்கும்.
டான்ஸ்
டான்ஸ் ஆடுவது மிகவும் மகிழ்வான நிகழ்வு. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதயத்தை வலுவாக்குகிறது. ஹிப்ஹாப், சூம்பா அல்லது ஃப்ரி ஸ்டைல் என எந்த வகை நடனம் என்றாலும், டான்ஸ் ஆடும்போது, உங்கள் இதயத்துடிப்பு அதிகரிக்கிறது. உங்களின் தசைகளை வலுப்படுத்துகிறது. இது ஒரு சிறந்த இதய வொர்க் அவுட். இது நெகிழ்தன்மை, சமம் மற்றும் ஒருங்கிணைவு ஆகியவற்றைக் கொடுக்கிறது. உங்கள் மனநிலையை மேம்படுத்துகிறது.
ஜாகிங்
ஜாகிங் என்பது மென் ஓட்டம், தினமும் இதை 20 நிமிடங்கள் செய்தாலே போதும். இது உங்கள் இதயம், நுரையீரலை வலுப்படுத்துகிறது. உங்கள் உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. உங்கள் உடலின் ஆக்ஸிஜன் அளவை மேம்படுத்துகிறது. எனவே இதயத்துக்கு வலு சேர்க்க நீங்கள் ஜாகிங் செய்வதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.
யோகா
சில யோக முறைகள், பவர் யோகா, உங்கள் இதயத்தின் சக்தியை அதிகரிக்கும். இதை ஆழ்ந்த மூச்சுப்பயிற்சியுடன் தொடர்ந்து செய்யும்போது, அது உங்களின் இதயத்துடிப்பை அதிகரிக்கிறது. உங்களின் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
தோட்டம் அமைப்பது
வீட்டில் சிறிய தோட்டம் அமைத்து, அதை பராமரிப்பது உங்கள் இதயத்துக்கு நல்லது. இதில் நீங்கள் ஆழக்குழி தோண்டுவது, நடுவது மற்றும் தண்ணீர் ஊற்றுவது என சிறிய பயிற்சிகள் இருக்கும். இது உங்கள் தசைகளுக்கு கொஞ்சம் வேலை கொடுப்பதாகவும் இருக்கும். எனவே. நீங்கள் தினமும் தோட்டம் அமைப்பதில் ஒரு மணி நேரம் செலவிட்டால், அது நீங்கள் மிதமான அளவு இதய பயிற்சிகள் செய்ததற்கு சமமாக இருக்கும். இது உங்கள் உடலில் ஆற்றலை அதிகரிக்கிறது. உங்கள் மனஅழுத்தத்தைக் குறைக்கிறது.
வீட்டு வேலைகள்
எளிய வீட்டு வேலைகள், வீட்டை பெருக்குவது, துடைப்பது, துணி துவைப்பது என சில இதய பயிற்சிகளை நீங்கள் கட்டாயம் செய்யவேண்டும். இதை நீங்கள் 30 முதல் 45 நிமிடங்கள் செய்து முடித்தால், அது உங்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும். இது உங்கள் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். வீட்டையும் சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும்.
படி ஏறுதல்
நீங்கள் படிகளில் ஏறும்போது, உங்கள் இதயம் வலுவடைகிறது. இது உங்கள் இதயம் மற்றும் நுரையீரல் இரண்டுக்கும் வலு சேர்க்கிறது. இது உங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்கிறது. இது உங்கள் கால்களின் ஆற்றலை அதிகரிக்கிறது. உங்களின் கலோரிகளை குறைக்க உதவுகிறது.