ஊறவைத்த சியா விதைகளை தினமும் உட்கொள்வதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
ஊறவைத்த சியா விதைகளை தினமும் உட்கொள்வதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

தினமும் ஊறவைத்த சியா விதைகளை சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். சியா விதைகளை நீங்கள் பல்வேறு வழிகளில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதில் மறைந்துள்ள நன்மைகள் என்னவென்று இப்போது பார்க்கலாம். சியா விதைகள் மனிதர்களுக்கு அதிக நன்மைகளைக் கொடுக்கக்கூடியவை ஆகும். இதை நீங்கள் தினமும் உணவில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இந்த விதைகளில் இருந்து அதிகளவிலான ஆரோக்கிய நன்மைகளைப் பெற வேண்டுமெனில், இவற்றை உட்கொள்வதற்கு முன்னர் சிறிது நேரம் ஊறவைத்துவிடவேண்டும். இதை நீங்கள் தண்ணீர் அல்லது பால் இரண்டிலும் ஊறவைத்து பருகலாம். சாதாரணமாக சாப்பிடுவதைவிட ஊறவைத்து சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது.
தாவர அடிப்படை கொழுப்பு கிடைக்கும்
சியா விதைகளில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் நிறைந்துள்ளது. இது உங்கள் இதய ஆரோக்கியத்துக்கு நல்லது. இது வீக்கத்தைக் குறைக்கிறது. இது மூளை ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. இது உங்கள் உடலில் கொழுப்பு அளவை சமப்படுத்துகிறது. ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நிறைந்தது
சியா விதைகளில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது செரிமானத்துக்கு நல்லது. இவற்றை ஊறவைத்து, சாப்பிடும்போது, அது ஒரு ஜெல் பதத்தில் மாறும், அது குடல் இயக்கத்தை முறைப்படுத்துகிறது. வயிறு உப்புசத்தை குறைக்கிறது. ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதை உங்கள் உடல் எடையை குறைக்க பயன்படுத்தலாம்.