தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கொசுறு கேட்கத்தேவையில்லை; இனி வீட்டிலே வளர்க்கலாம் கொத்தமல்லித்தழையை; இதோ ஐடியா?

கொசுறு கேட்கத்தேவையில்லை; இனி வீட்டிலே வளர்க்கலாம் கொத்தமல்லித்தழையை; இதோ ஐடியா?

Priyadarshini R HT Tamil

Oct 05, 2024, 07:00 AM IST

google News
கொசுறு கேட்கத்தேவையில்லை, இனி வீட்டிலே வளர்க்கலாம் கொத்தமல்லித்தழையை, இதோ இந்த ஐடியாக்களைப் பின்பற்றுங்கள்.
கொசுறு கேட்கத்தேவையில்லை, இனி வீட்டிலே வளர்க்கலாம் கொத்தமல்லித்தழையை, இதோ இந்த ஐடியாக்களைப் பின்பற்றுங்கள்.

கொசுறு கேட்கத்தேவையில்லை, இனி வீட்டிலே வளர்க்கலாம் கொத்தமல்லித்தழையை, இதோ இந்த ஐடியாக்களைப் பின்பற்றுங்கள்.

நாம் எப்போதும் காய்கறிகள் வாங்கியவுடன் கறிவேப்பில்லை மற்றும் கொத்தமல்லித்தழையை கடைக்காரரிடம் இருந்து கொசுறு கேட்போம். முந்தைய காலங்களில் காய் வாங்கும் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்ட ஒன்றுதான் கறிவேப்பிலை மற்றும் மல்லித்தழை. ஏனெனில் இது இல்லாமல் சமையலே செய்ய முடியாது. சாம்பார், ரசம், பொரியல், கூட்டு என அனைத்திலும் நீக்கமற இடம்பெறும் ஒன்று. ஆனால் இதை இன்று நீங்கள் 10 ரூபாய் கொடுத்துதான் வாங்கவேண்டும். குறைந்தபட்சம் 5 ரூபாய்க்காவது வாங்கவேண்டிய நிலையில் உள்ளது. கடைக்காரர் இலவசம் கொடுப்பது போதாது என்றால், கூடுதலாக 25 பைசாவுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கப்பட்ட ஒன்றின் விலைதான் தற்போது இந்தளவுக்கு உயர்ந்துள்ளது. ஆனால் நீங்கள் இங்கு உள்ள குறிப்புகளைப் பின்பற்றினால் வீட்டிலேயே மல்லிச்செடிகளை நட்டு வளர்க்க முடியும். அது எப்படி என்று பார்க்கலாம். உங்கள் சமையலறை தோட்டத்திலே வளர்க்கமுடியும் இந்திய சமையலில் எப்போதும் ராஜாவான இந்த மூலிகை தாவரத்தை. இது எண்ணற்ற மருத்துவ குணங்களும் நிறைந்தது. தாளிக்கவும், மசாலாக்களில் சுவையை அதிகரிக்கவும் இந்த மல்லித்தழை பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் மல்லித்தழையை வீட்டிலே எளிதாக வளர்க்க கீழே உள்ள குறிப்புகள் உதவும்.

விதைகள் அல்லது செடி

நீங்கள் தோட்டம் அமைப்பதில் புதியவர் என்றால், நீங்கள் விதைகளைப் பயன்படுத்தவேண்டாம். மல்லித்தழையில் இருந்து நடுவதே சிறந்தது. நீங்கள் மல்லியில் நல்ல தண்டுகளை தேர்ந்தெடுத்தால் விளைச்சல் விரைவாக இருக்கம். அடர்ந்து படர்ந்து வளரும். பிற்காலத்தில் அதிக விளைச்சலைத்தரும்.

அடுத்த படி

நீங்கள் மல்லித்தழையை வெட்டி எடுக்க, நல்ல புதிய மல்லித்தழையை வாங்கிக்கொள்ளுங்கள் அல்லது உங்களுக்கு அருகில் யாராவது பயிரிட்டால் அவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். அதன் தண்டுகளை 3 முதல் 5 துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள். இது வெளிர் பசுமை நிறத்தில், ஆரோக்கியமான தண்டுகளில் இருந்து நிறைய தண்டுகள் முளைத்து வரும்.

பாட்டில்

உங்களுக்கு ஆரோக்கியமான தண்டுகள் கிடைத்துவிட்டால், ஒரு பாட்டிலில், வேர்களை உள்புறத்தில் செருகி, இலைகள் வெளியே தருமாறு வைத்துக்கொள்ளுங்கள். பாட்டிலில் தண்ணீர் நிரப்புங்கள். அது முழுமையும் தண்ணீரில் மூழ்கக் கூடாது. மூழ்கினால் தண்டுகள் அழுகிவிடும்.

சில நாட்கள்

இதை செய்து முடித்தவுடன், அந்த பாட்டிலை ஜன்னலுக்கு அருகில் வைத்துவிடுங்கள். ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் நேரடி அல்லது மறைமுக சூரிய ஒளி கிடைக்கும் இடமாக இருக்கவேண்டும். தினமும் தண்ணீரை மாற்றுங்கள். அதில் இருந்து புதிய வேர்கள் வருவதை பார்க்கலாம்.

அடுத்த படி

புதிய வேர்கள் வளரத்துவங்கியவுடன், நீங்கள் சில இலைகள் மேலே தோன்றுவதைக் காணலாம். இது 10 நாளில் வரும். அப்போது ஒரு ஆழமான தொட்டிக்கு செடியை மாற்றுங்கள்.

மண்

அதிக மண் இருக்கக்கூடாது. மிருதுவான மண்ணாக இருக்கவேண்டும். அதில் தேங்காய் நார், வேப்பம் புண்ணாக்கு, மண், தழை, ஆர்கானிக் உரம் கலந்து இருக்க வேண்டும்.

தண்ணீர்

நீங்கள் புதிய வேர்கள் கொண்ட மல்லித்தழையை விதைத்துவிட்டீர்கள் என்றால் மேல்புறத்தில் உள்ள மண்ணை மூடிவிடுங்கள். அதற்கு தோட்டத்தில் உள்ள மண்ணை ஒரு மெல்லிய லேயராக இடுங்கள். ஒரு நாளில் ஒருமுறை அதை செய்யவேண்டும். அதிக தண்ணீர் ஊற்றக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கவேண்டும். அதிக தண்ணீர் இலைகளை கருக்கச்செய்து, வேர்களை அழுகுவைக்கும்.

பொறுமை

முதலில் தோட்டம் இட்டாலே பொறுமை மிகவும் அவசியம். தினமும் ஒரு மணி நேரம் மட்டும் நேரடி சூரிய வெளிச்சத்தில் அது படட்டும். கிட்டத்தட்ட 20 முதல் 25 நாட்கள் மாதத்தில் இது இருக்கட்டும். மல்லித்தழைகள் வளர்ந்து வரும். பறித்து சாப்பிடலாம். முற்றிலும் ஆர்கானிக், உங்கள் சமையலறையில் இருந்து உங்களுக்கு கிடைக்கும். மகிழ்ச்சியுடன் மல்லித்தழையை சாப்பிட்டு மகிழுங்கள். மல்லி சாதம், மல்லித்துவையல், மல்லிச் சட்னி, மல்லி ரசம் என அசத்தலாம்.

 

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி