குறட்டை ஏன் ஏற்படுகிறது?.. குறட்டையை தடுப்பது எப்படி?.. நிரந்தர பலன் தரும் அட்டகாசமான டிப்ஸ்கள் இதோ..!
Oct 04, 2024, 09:04 PM IST
தினமும் குறட்டை விடுபவர்கள், குறட்டையின் சத்தம் கூடி குறைந்தால் அது மிகவும் ஆபத்து என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். குறட்டை ஏன் ஏற்படுகிறது? அதைக் குறைக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய டிப்ஸ்கள் குறித்து பார்ப்போம்.
குறட்டை ஆரோக்கியமான அறிகுறி அல்ல. இது தூக்கத்தைக் கெடுக்கும். குறட்டை விடுபவர்களுக்கு மட்டுமல்ல, அருகில் தூங்குபவர்களுக்கும் இது மிகவும் தொந்தரவான பிரச்சனை. சுவாசிக்கும் காற்றானது மூச்சுக்குழாய் வழியே நுரையீரலை அடைகிறது. இந்த பாதையில் தடைகள் ஏற்பட்டால் திசுக்கள் அதிர்வுறுவதால் குறட்டை ஏற்படுகிறது. குறட்டை சில நேரங்களில் ஆபத்தாக கூட முடியலாம். தினமும் குறட்டை விடுபவர்கள், குறட்டையின் சத்தம் கூடி குறைந்தால் அது மிகவும் ஆபத்து என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். குறட்டை ஏன் ஏற்படுகிறது? அதைக் குறைக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய டிப்ஸ்கள் குறித்து பார்ப்போம்.
குறட்டை ஏன் ஏற்படுகிறது?
வயதாகும்போது குறட்டை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் நமது உடல் வயதாகும்போது தொண்டையில் உள்ள தசைகளுக்கும் வயதாகிறது. அந்த நேரத்தில் குறட்டை வர வாய்ப்புள்ளது . உடல் பருமனால் அதிகப்படியான குறட்டையும் ஏற்படலாம். கழுத்து மற்றும் தொண்டையைச் சுற்றி கொழுப்பு அதிகமாகத் தேங்குவதால் அங்குள்ள சுவாசப்பாதைகள் சுருங்கும். இது குறட்டை சத்தத்தை ஏற்படுத்துகிறது. அலர்ஜி, ஜலதோஷம், சைனஸ் தொற்று போன்றவற்றால் கூட நாசிப் பாதைகள் காற்று எளிதில் செல்ல அனுமதிக்காது. அப்போது குறட்டை விடுவது போன்ற சத்தம் கேட்கிறது. அதிகமாக மது அருந்துவது, புகை பிடிப்பது உள்ளிட்டவைகளும் குறட்டை ஏற்பட காரணமாகலாம். தூக்கக் கோளாறு எனப்படும் மற்றொரு தீவிர பிரச்சனை உள்ளவர்களும் குறட்டைக்கு ஆளாகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு குறட்டை அதிகமாக இருக்கும்.
குறட்டையுடன் தொடர்புடைய ஆபத்துகள்
குறட்டை விடுவது இயல்பான ஒன்றுதான். குறட்டை விடுவதை யாரும் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. இது பாதிப்பில்லாதது என்று கருதப்படுகிறது. ஓரளவிற்கு அது உண்மைதான், ஆனால் சில சமயங்களில் குறட்டையானது சில உடல்நல அபாயங்களுடன் தொடர்புடையது. அதில் முக்கியமானது தூக்கத்தில் மூச்சுத்திணறல், ஆக்ஸிஜன் அளவு குறைகிறது. இது சில சமயங்களில் மரணத்திற்கு வழிவகுக்கும். தூக்கத்தில் மூச்சுத்திணறல் உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. குறட்டையால், பகலில் தூக்கம் சரியில்லாமல், சோர்வாக இருக்கும்.
குறட்டையை எப்படி நிறுத்துவது?
1. நீங்கள் அதிக எடையுடன் இருந்தால், உடனடியாக அதை குறைக்க முயற்சி செய்யவும். உடல் எடையை குறைக்கும் போது கழுத்தில் உள்ள கொழுப்பும் கரையும். இதன் காரணமாக, காற்றுப்பாதைகளில் காற்று ஓட்டம் எளிதாகும். பிறகு குறட்டை குறையும்.
2. தூங்கும் நிலையைப் பொறுத்து குறட்டை அதிகமாக இருக்கும். எனவே பக்கவாட்டில் தூங்கும் நிலைக்கு மாறுவது நல்லது, அதாவது இடது அல்லது வலது பக்கம் திரும்பி படுத்தால் குறட்டையின் தீவிரம் குறையும்.
3. தூங்கும் போது உங்கள் தலையை உயர்த்தி வைக்கவும் . அதாவது, கூடுதல் தலையணைகளை தலைக்கு அடியில் வைத்து, தலையை உயரமாக வைத்துக் கொண்டால், காற்று செல்லும் வாய்ப்பு உள்ளது. இதுவும் குறட்டையை நிறுத்துகிறது.
4. உடலில் நீர்ச்சத்து குறைபாடு பிரச்னை இருந்தாலும் குறட்டை விடலாம். தொண்டை மற்றும் மூக்கில் சளி தேங்குகிறது. இது குறட்டையை அதிகரிக்கிறது. எனவே நாள் முழுவதும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
5. இரவு குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்த ஆல்கஹால் தொண்டையில் உள்ள தசைகளை சுருங்கச் செய்கிறது. இதனால் காற்று சரியாக செல்லவில்லை. எனவே தூங்கும் முன் மது அருந்துவதை முற்றிலும் நிறுத்துவது நல்லது.
6. சளி, காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் தகுந்த மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள். சளியால் காற்றுப்பாதைகளை அடைக்காமல் கவனமாக இருங்கள். குறட்டை அனேகமாக போய்விடும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்